கனோ (Kano) நைஜீரியாவின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். வடக்கு நைஜீரியாவின் கனோ மாநிலத்தின் தலைநகரமான கனோ, சஹாரா பாலைவனத்தின் தெற்கில் அமைந்த சஹேல் என்கிற புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளது. பெரும்பான்மையாக ஹவுசா மக்கள் இங்கே வாழ்கின்றனர். ஹவுசா மொழி இந்நகரத்தில் பெரும்பான்மையாக பேசப்படுகிறது. 2006 கணக்கெடுப்பின்படி கனோவில் 21.6 லட்ச மக்கள் கனோ நகரத்தில் வசிக்கின்றனர். கனோ மாநகரத்தில் 28.3 லட்ச மக்கள் வசிக்கின்றனர்.

கனோ
நகரம்
நாடு நைஜீரியா
மாநிலம்கனோ மாநிலம்
அரசு
 • ஆளுநர்ரபியு மூசா குவாங்குவாசோ (PDP)
பரப்பளவு
 • மாநகரம்
499 km2 (193 sq mi)
மக்கள்தொகை
 (2006)
 • நகரம்21,63,225
 • பெருநகர்
28,28,861
 [1]
நேர வலயம்ஒசநே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்)

2000இலிருந்து கனோ மாநிலத்தில் சரியா சட்டம் அமலில் இருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Kano Municipal LGA population as per:
    Federal Republic of Nigeria Official Gazette (15 May 2007). "Legal Notice on Publication of the Details of the Breakdown of the National and State Provisional Totals 2006 Census" (PDF). Archived from the original (PDF) on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2007-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனோ&oldid=3586550" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES