கிழக்கு(EAST) என்பது ஒரு திசையைக் குறிக்கும். தமிழில் இது கீழ்த்திசை என்றும் அறியப்படுகிறது. இத்திசை சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கும்.இச்சொல் பெயர்ச்சொல், உரிச்சொல் அல்லது வினையுரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. நான்கு முக்கியமான திசைகளில் (திசைகாட்டி புள்ளிகளில்) கிழக்கும் ஒன்று. மேற்கு திசைக்கு எதிர்புறத்திலும், வடக்கு, தெற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும். திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வலம் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது..[1][2]

கிழக்கு

பலுக்கல்

தொகு

ஒரு வரைபடத்தில் வலது புறம் இருப்பது கிழக்குத் திசையாகும். இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். கிழக்குத் திசை வடக்குத் திசையிலிருந்து 90° திசைவில் அமைந்து இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Orientation of Churches". Catholic Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 3 December 2013.
  2. Peters, Bosco (30 April 2012). "Architectural Design Guidelines 1". Liturgy.co.nz. பார்க்கப்பட்ட நாள் 3 December 2013.

வெளியிணைப்புகள்

தொகு


திசைகள்
கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு&oldid=3240309" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
design 1
Done 1