1542
ஆண்டு 1542 (MDXLII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1542 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1542 MDXLII |
திருவள்ளுவர் ஆண்டு | 1573 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2295 |
அர்மீனிய நாட்காட்டி | 991 ԹՎ ՋՂԱ |
சீன நாட்காட்டி | 4238-4239 |
எபிரேய நாட்காட்டி | 5301-5302 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1597-1598 1464-1465 4643-4644 |
இரானிய நாட்காட்டி | 920-921 |
இசுலாமிய நாட்காட்டி | 948 – 949 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 11 (天文11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1792 |
யூலியன் நாட்காட்டி | 1542 MDXLII |
கொரிய நாட்காட்டி | 3875 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 2 - கிறித்தொவாடோ ட காமா தலைமையிலான போர்த்துக்கீசப் படைகள் முசுலிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றினர்.
- பெப்ரவரி 13 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஐந்தாவது மனைவி கத்தரீன் ஹவார்ட் முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- பிரான்சிஸ் சவேரியார் கோவாவை வந்தடைந்தார்.
- சூலை 12 - புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு பிரான்சின் முதலாம் பிரான்சிசு மீது போரை அறிவித்தார். இம்முறை இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி சார்லசுவுடன் கூட்டுச் சேர்ந்தான். இசுக்கொட்லாந்தின் ஐந்தாம் யேம்சு, முதலாம் சுலைமான் ஆகியோர் பிரான்சுக்கு ஆதரவாக இணைந்தனர்.
- ஆகத்து 24 - ஆடன் ரிக் என்ற இடத்தில் நடந்த சமரில் இசுக்கொட்லாந்து இங்கிலாந்தைத் தோற்கடித்தது.
- டிசம்பர் 14 - தந்தை ஐந்தாம் யேம்சு இறந்ததை அடுத்து, அவரது ஒரு மாதக் குழந்தை ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசியானாள்.
- சப்பானுடனான மேற்குலகின் முதலாவது ஏற்பட்டது. சீனா நோக்கிச் சென்ற போர்த்துக்கீசக் கப்பல் வழிதவறி சப்பானை வந்தடைந்தது.
பிறப்புகள்
தொகு- சூன் 24 - சிலுவையின் புனித யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1591)
- அக்டோபர் 1 - மரியம் உசு-சமானி, முகலாயப் பேரரசி (இ. 1623)
- அக்டோபர் 4 - ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (இ. 1621)
- அக்டோபர் 15 - அக்பர், முகலாயப் பேரரசர் (இ. 1605)
- டிசம்பர் 8 - ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587)
இறப்புகள்
தொகு- அச்சுத தேவ ராயன், விஜயநகரப் பேரரசன் (பி. 1529)
- கேத்தரின் ஹோவார்டு, இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஐந்தாவது மனைவி, இங்கிலாந்து அரசி (பி. 1523)