வீரம் அல்லது மறம் (bravery, courage, valour) என்பது துணிவான ஒரு உணர்வு. தான் சந்திக்கும் எவ்வொரு சவாலையும் சந்தித்து, வலி, ஆபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே வீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம்.

மேற்கோள்கள்

தொகு
 
வீரமே உருவென விளங்கிய அஞ்சா நெஞ்சன் மாயவரச் சிங்கம் நடராசன், சுயமரியாதை இயக்கத்தில் அவர் இடத்தைப் பூர்த்தி செய்கிற மாதிரி வேறு ஒருவரும் வரவில்லை.
  • வீரமே உருவென விளங்கிய அஞ்சா நெஞ்சன் மாயவரச் சிங்கம் நடராசன், சுயமரியாதை இயக்கத்தில் அவர் இடத்தைப் பூர்த்தி செய்கிற மாதிரி வேறு ஒருவரும் வரவில்லை. ஈ. வெ. இராமசாமி[1]
  • அறத்திற்குப் போலவே மறத்திற்கும் பிராணத் தியாகிகள் உண்டு. -கோல்டன்[2]
  • வீரன் சாவதே இல்லை... கோழை வாழ்வதே இல்லை - கலைஞர் கருணாநிதி
  • வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்
  • உன் கடமையை எப்பொழுதும் செய்யத் துணிந்திரு. இதுவே உண்மையான வீரத்தின் உச்சநிலை. - ஸி ஸிம்மன்ஸ்[3]
  • தன்னைத்தான் நம்புதல் வீரத்தின் சாரம். - எமர்சன்[3]
  • இரண்டு வீரர்களுள் எதிரிகளை அதிகம் மதிப்பவனே சிறந்தவன். - பியூமெல்[3]
  • மேலே உயர வேண்டும் என்ற ஆசையையும், செருக்கையும் எடுத்துவிடுங்கள். பிறகு உங்களுடைய வீரர்களும், பக்தர்களும் எங்கே இருக்கின்றனர் என்று பாருங்கள்! செனீக்கா[3]
  • ஒரு கொலை செய்தவன் கொலைகாரன் இலட்சக்கணக்கானவர்களைக் கொலை செய்தவன் வீரன். - பிஷப் போர்ட்டியஸ்[3]
  • அறத்திற்கு மட்டுமல்ல மறத்துக்கும் அன்பே காரணமாக உள்ளது. திருவள்ளுவர்
  • விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்கும்தன் நாளை எடுத்து. -திருவள்ளுவர்

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
  2. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு

வெளி இணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் வீரம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வீரம்&oldid=36234" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES