கலை
கலை(பெ)
- நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது, நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன்
- ஆண் கருங்குரங்கு. (தொல். பொ. 601, உரை.)
- பயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும் (புறநானூறு, 116)
- கலைமான்
- வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு (புறநானூறு, 161)
- காஞ்சிமரம். யாழ். அக.
- பாகையின் அறுபதிலொன்று
- பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.)
- மலேசியாவின் கர்ப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.)
- மரவயிரம். பிங்.
- மேகலை காஞ்சியென்னும் இடையணிகள் (திவா.)
- வாமாண் கலைசெல்ல நின்றார் (திருக்கோவிலூர் கலம்பகம்)
- சுறாமீன். பிங்.
- மகரராசி. திவா.
- சீலை
- அருங்கலை யயலுற (பாரத. குருகுல. 57)
- குதிரைச் சேணம்
- அமிசம், பாகம்
- தத்துவக் கலையினில் (ஞானா. 1, 26)
- நிலவின் பதினாறு நிலைகள்
- வெண்மதியி னொற்றைக் கலைத்தலை யாய் (திருவாச. 6, 40)
- ஒளி
- நிறைகலை வீச (அரிசமய. பத்திசார. 106)
- ஒரு கால அளவு, ஏறத்தாழ எட்டு நொடிகள். (கூர்மபு. பிரமாவி. 3.)
- கல்வி. (திவா.)
- சாத்திரம்
- கலை நவின்ற பொருள்களெல்லாம் (திருவாச. 12, 13)
- மொழி
- தென்கலையே முதலுள்ள பல்கலை (கந்தபு. நகரப். 49)
- வண்ணப் பாட்டின் ஒரு பாகம்
- வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று
- கலைமுதலாயநிலை மலி தத்துவம் (ஞானா. 3, 1)
- இடைகலை, பிங்கலை ஆகிய மூச்சின் வகைகள்
- உடல்
- கலையிலாளன் (சிலப். 10, 28)
- புணர்ச்சிக் குரிய கரணங்கள். (சீவக. 1625, உரை.)
- மரக்கவடு. (பிங். )
- ஆண்மான்
- கவைத்தலை முதுகலை (தொல். பொ. 600, உரை)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(வி)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
n.
- art
- Male black monkey
- a species of deer
- River portia tree
- Indian hour equals to ¹⁄60 of a pākai
- Pārvatī
- A kind of camphor imported from Kalah in the Malay Peninsula
- Core, solid part of timber
- Woman's girdle consisting of seven strands of jewels
- shark
- Capricorn of the Zodiac
- cloth, garment
- sddle of a horse
- portion
- Moon's phase corresponding to a titi
- brightness, splendour
- Minute portion of time about 8 seconds
- learning, erudition
- treatise, book
- language
- Part of a vaṇṇam
- Specific power of any of the superior deities as manifested in an avatāram or in a theophany for a specific purpose; manifestation of a deity; forms of the female energy of a deity as they appear, one of seven kinds of vittiyā-tattuvam
- Breath passing from the nostril
- Body
- Postures in sexual enjoyment
- branch of a tree
- stag, buck
verb.
சொல் வளப்பகுதி
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---கலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி