பொருள்
  • நகரம்

1. பல மக்கள் ஒன்று கூடி வாழும் இடத்தை 'நகரம்' என்று அழைத்தனர்.

2. நகர் என்னும் வினைச்சொல் நகர்தல் என்னும் வினையைக்குறிக்கும். மக்கள் செழிப்பான இடங்களைத்தேடி நகர்ந்து வந்ததால் இதனை 'நகரம்' என்று அறியப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நகரம்


படிப்படியாக நகர்வதால் ... விரிவாக்கம் காண்பதால் நகர் .. நகரம் .. நகரி என்று பட்டணங்கள் / பட்டினங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் வைத்தனர்.


‘நவ்விரண்டு காலதாய்’ – என்பது சித்தர் பாட்டு ; ந என்ற இரண்டும் கால்களை ஆனது என்று பொருள் . ந கால்கள் ஆனதால் ந நடக்க ஆரம்பித்து நட ... நடை என்றானது. ந எனும் கால்கள் நடந்து .. நகர்வதால் நகர் எனும் சொல் இட பெயர் என்பதற்கு ஆளானது. படிப்படியாக நகர்ந்து விரிவாக்கம் காணும் இடம் அதன் ட்ன்மியால் நகர் நகரம் நகரி எனும் இடப் பெயர்கள் பெற்றன.


ந எனப்பட்ட கால்கள் கொண்டு நடையாய் நடந்த பண்டைய தமிழர்கள் நகர் ... நாகர் எனப்பட்டனர் .

நா .. நாக்கு வண்மை ..சொல் திறமை ..சொல்லாடல் திறன் , சொல் படைப்பாக்கம் வளம் கொண்ட மக்கள் என்பதாலும் நாகர் எனப்பட்டனர் .


நா – நாக்கு நீட்டுவதால் நாகம் எனப்பட்ட நாகத்தை - பாம்பை இலச்சினை / சின்னம் / அடையாளம் / முத்திரையாக கொண்ட மக்கள் நாகர் எனப்பட்டனர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நகரம்&oldid=1995831" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES