நிழல் (பெ)

நீர்நிலையில் பறவையின் நிழலும் அதன் எதிரொளி உருவும் (பிரதிபிம்பமும்)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர். ஒளிமறையுரு.
  • கதிரவன் ஒளியை மறைத்து நிற்கும் பகுதியில் வெப்பம் குறைவாக இருப்பதால், குளிர்ச்சி, காப்பு.
  • தெளிந்த நீர் அல்லது பளபளப்பான தளத்தின் மீது ஒரு பொருளின் புற உருவம் எதிரொளியாகப் பட்டுத் தோன்றும் ஒளியுரு. ஏதிரொளியுரு
  1. சாயை, சாயல்
  2. பிரதிபிம்பம்
  3. அச்சு
  4. ஒளி
  5. குளிர்ச்சி
  6. அருள்
  7. நீதி
  8. புகலிடம்
  9. தானம்
  10. செல்வம்
  11. மரக்கொம்பு
  12. நோய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. shade, shadow
  2. image, reflection, as in a mirror
  3. type, representation, counterpart
  4. lustre
  5. coolness
  6. grace, favour, benignity
  7. justice
  8. protection, asylum, refuge
  9. place
  10. wealth, prosperity, affluence
  11. branch of a tree
  12. disease, ailment
விளக்கம்
பயன்பாடு
  • மர நிழல் - shade of tree
  • அவளை நிழல் போலப் பின்தொடர்ந்து சென்றான் - He followed her like a shadow
  • நிழலின் அருமை வெயிலில் தெரியும் (பழமொழி)
  • நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு (பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  1. நாணிழற் போல (நாலடியார், 166)
  2. நிழனோக்கித் தாங்கார் மகிழ் தூங்கி (சீவக. 2790)
  3. நிழல்கா னெடுங்கல் (சிலப்பதிகாரம், 5, 127)
  4. தண்ணிழல் வாழ்க்கை (பட்டினப்பாலை 20)
  5. நீரு நிழ லும் (நல்வழி. 2)

ஆதாரங்கள் ---நிழல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிழல்&oldid=1635099" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES