அல்-ஜசரி (Badi'al-Zaman Abū al-'Izz ibn Ismā'īl ibn al-Razāz al-Jazarī, 1136–1206, அரபு மொழி: بديع الزمان أَبُو اَلْعِزِ بْنُ إسْماعِيلِ بْنُ الرِّزاز الجزري‎) என்பவர் இசுலாமியப் பொற்காலப் பகுதியில் (நடுக்காலம்) வாழ்ந்த ஒரு இசுலாமியப் பல்துறையறிஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், கணிதவியலாளரும் ஆவார். இவர் 1206 ஆம் ஆண்டில் எழுதிய "மதிநுட்ப இயந்திரக் கருவிகளின் அறிவு பற்றிய புத்தகம்" (The Book of Knowledge of Ingenious Mechanical Devices) என்ற நூலை எழுதியமைக்காக அறியப்படுகிறார். இந்நூலில் இவர் 100 எந்திரக் கருவிகள் பற்றியும் அவற்றை எவ்வாறு வடிவமைப்பது பற்றியும் எழுதியுள்ளார்.[1][2]

அல்-ஜசாரி
பிறப்புபதீஉஸ் ஸமான் அபுல் இஸ் இப்னு இஸ்மாஈல் இப்னுர் ரஸாஸ் அல்-ஜசரீ
கிபி 1136
இறப்புகிபி 1206
இனம்தெரியவில்லை
அறியப்படுவதுமுஸ்லிம் பல்துறையறிஞர், கல்விமான், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், ஓவியர், கைவினைஞர், கணிதவியலர்
பட்டம்அல்-ஜசாரி
சகாப்தம்இசுலாமியப் பொற்காலம்
அல்-ஜசாரியின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பு: யானை மணிக்கூடு

குறிப்புகள்

தொகு
  1. Beckwith, Guy (2006). Readings in Technology and Civilization. Boston, MA: Pearson Custom Publishing. p. 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-536-25754-X.
  2. Readings in Technology and Civilization Volume I; 4th Edition

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அல்-ஜசாரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-ஜசரி&oldid=3353442" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
languages 1
mac 1
os 2