இணக்கி (Modem) என்பது கணினியில் உள்ள புற உலகத்துடன் தொடர்புகொள்ளும் ஓர் உறுப்பு. இது கணினிக்குப் புறத்தே இருந்து வரும் குறிப்பலைகளைத் (குறிகைகளை) தக்கவாறு உள்வாங்கவும் வெளிசெலுத்தவும் பயன்படும் ஒரு கருவி. மோடம் (modem) என்னும் ஆங்கிலச்சொல் mo dulator (மாடுலேட்டர்)-dem odulator (டிமாடுலேட்டர்) என்னும் இரு சொற்களின் சுருக்குவடிவாக ஆன ஒரு செயற்கையான கூட்டுச்சொல். இதனைத் தமிழில் பண்பேற்றி என்று அழைக்கலாம். அதாவது எண்ணிமத் தகவல்களைத் (டிசிட்டல் தகவல்களைத் திட்டப்படி பண்பேற்றி (மாற்றி அல்லது மாடுலேட் செய்து) அனுப்பவும் அப்படி பண்பேற்றப்பட்டு வரும் எண்ணிமத் தகவல்களைப் தக்கவாறு பண்பிறக்கவும் உதவும் ஒரு கருவி. இதன் நோக்கமானது, எளிதாக கடத்துவதற்கு ஏற்றவாறு எண்ணிமத் தரவுகளை உருவாக்கவும், குறிநீக்கம் செய்யவும் (அதாவது குறிப்பிட்டவாறு திரிபுற்றவற்றை மீட்டெடுக்கவும்) உதவக்கூடிய குறிகைகளை உருவாக்குவதாகும். எந்தவகையான தொடரலைகளையும் (அனலாகு சிக்னல்களையும்) கடத்துவதற்கும் திரிப்பிரிகளைப் (மோடம்களைப்) பயன்படுத்தலாம்.

மோட்டரோலாவின் 28.8 கிபிட்/வி சீரியல் போர்ட் மோடம்

ஒரு தனிக்கணினியின் டிஜிட்டல் முறையிலான 1 களையும் 0 க்களையும் ஒரு எளிய பழைய தொலைபேசி சேவைகளை (POTS) பயன்படுத்தும் தொலைபேசி இணைப்புகளின் மூலமாக கடத்தபடக்கூடிய ஒலிகளாக மாற்றும் வாய்ஸ்பேண்ட் மோடம் இதற்கான மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டாகும். மேலும் இதில் ஒரு முனையில் பெறப்படும் சிக்னல்களை, USB, ஈதர்னெட், சீரியல் அல்லது நெட்வொர்க் இணைப்புகளால் பயன்படுத்தக்கூடிய வடிவமான 1களாகவும் 0க்களாகவும் இது மீண்டும் மாற்றித் தருகிறது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடத்தப்படக்கூடிய தரவின் அளவின் அடிப்படையிலேயே பொதுவாக மோடம்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த அளவு பொதுவாக, ஒரு விநாடிக்கான பிட்கள் (bits per second) (bit/s, அல்லது bps) என்ற அளவையினால் அளவிடப்படுகிறது. பாட் என்பதன் அடிப்படையிலும் இவை வகைப்படுத்தப்படலாம், பாட் என்பது ஒரு மோடம் ஒரு விநாடிக்கு அதன் சிக்னல் நிலையை மாற்றுகிற எண்ணிகையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ITU V.21 தரநிலையானது ஆடியோ ஷிஃப்ட் கீயிங் எனப்படும் டோன்களைப் பயன்படுத்தி, 300 பிட்/வி அதாவது 300 பாட்களைப் பயன்படுத்தியது, அதேபோன்று, அசல் ITU V.22 தரநிலையானது பேஸ்-ஷிஃப்ட் கீயிங்கைப் பயன்படுத்தி 600 பாட்களுடன் 1,200 பிட்/வி வரை அனுமதித்தது.

கம்பிவட இணக்கி (கேபிள் மோடம்)கள் மற்றும் ADSL மோடம்கள் ஆகிய விரைவு மோடம்களை இன்றைய இணைய பயனர்கள் பயன்படுத்துகின்றனர். தொலைத்தொடர்புகளில், மைக்ரோவேவ் ரேடியோ இணைப்புகளின் வழியாக தொடர்ந்து மாறும் தரவுகளின் ஃப்ரேம்களை மிக உயர்ந்த தரவு வீதங்களில் அகலக்கற்றை ரேடியோ மோடம்கள் கடத்துகின்றன. தனிப்பட்ட ரேடியோ நெட்வொர்க்குகளுக்கு பயன்படும், 19.2k வரையிலான குறைந்த தரவு வீதங்களுக்கு குறுகிய கற்றை ரேடியோ மோடம் பயன்படுத்தப்படுகிறது. சில மைக்ரோவேவ் மோடம்களால் ஒரு விநாடிக்கு நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட பிட்களை கடத்த முடியும். ஆப்டிகல் ஃபைபர்களின் வழியே தரவைக் கடத்தக்கூடியவை ஆப்டிகல் மோடம்களாகும். கண்டங்களுக்கு இடையிலான பெரும்பாலான தரவு இணைப்புகள், கடலுக்கு அடியிலான ஆப்டிகல் ஃபைபர்களால் தரவைக் கடத்தும் ஆப்டிகல் மோடம்களைப் பயன்படுத்துகின்றன. ஆப்டிகல் மோடம்கள் பொதுவாக, ஒரு விநாடிக்கு ஒரு பில்லியனுக்கும் (1x109) அதிகமான பிட்களைக் கடத்தக்கூடிய தரவு வீதங்களைக் கொண்டுள்ளன. இந்த கட்டுரையில் விநாடிக்கு ஒரு கிலோ பிட் (kbit/s, kb/s, அல்லது kbps) என்று குறிப்பிடப்பட்டால், அது ஒரு விநாடிக்கு 1,000 பிட்கள் என்பதையேக் குறிக்கிறது, விநாடிக்கு 1,024 பிட்கள் என்பதைக் குறிப்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு 56k மோடமானது ஒரு தொலைபேசி இணைப்பின் வழியாக 56,000 பிட்/வி (7 kB/s) வரை கடத்தக்கூடியதாகும்.

1960ஆம் ஆண்டின் கோடைகாலத்தில், டிஜிட்டல் சப்செட் என்ற பெயருக்கு பதிலாக டேட்டா-ஃபோன் என்ற பெயர் அறிமுகப்படுத்தப்பட்டது. 202 டேட்டா-ஃபோன் என்பது ஒரு அரை-டியூப்லக்ஸ் அசிங்க்ரனஸ் சேவையாகும், 1960 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மிகவும் தீவிரமாக இது சந்தைப்படுத்தப்பட்டது. 1962ஆம் ஆண்டில், 201A மற்றும் 201B டேட்டா-ஃபோன்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவை பாட்(baud)டுக்கு இரண்டு பிட் பேஸ்-ஷிஃப்ட் கீயிங்கை (PSK) பயன்படுத்தும் சிங்க்ரனஸ் மோடம்களாகும். 201A-ஆனது சாதாரண தொலைபேசி இணைப்புகளில் 2,000 பிட்/வி என்ற வீதத்தில் அரை டியூப்லக்ஸில் இயங்கியது. அதே நேரத்தில் 201B-ஆனது 2,400 பிட்/வி வீதத்தில் முழு டியூப்லக்ஸ் சேவையை நான்கு-வயர் லீஸ்டு இணைப்புகளின் வழியாக இயங்கியது. இதனால் தரவை அனுப்பும் மற்றும் பெறும் சேனல்கள் அவற்றுக்கென தனித்தனியாக இரண்டு வயர்களைக் கொண்டிருந்தன.

பிரபலமான பெல் 103A டேட்டாசெட் தரநிலையையும் 1962ஆம் ஆண்டில் பெல் லேப்ஸ் அறிமுகப்படுத்தியது. எளிமையான தொலைபேசி இணைப்புகளின் வழியாக முழு டியூப்லக்ஸ் சேவையை 300 பாட் வீதத்தில் வழங்கியது. இதில் 1,070 அல்லது 1,270 Hz அளவுகளில் கடத்தும் அழைப்பு தொடக்கி மற்றும் 2,025 அல்லது 2,225 Hz அளவுகளில் கடத்தும் பதிலளிப்பு மோடம் ஆகியவற்றுடன் ஃப்ரிக்வென்ஸி ஷிஃப்ட் கீயிங்கானது பயன்படுத்தப்பட்டது. ஆயத்த நிலைகளில் கிடைத்த 103A2 மோடம்கள், KSR33, ASR33, மற்றும் IBM 2741 போன்ற தொலைநிலை குறைந்த வேக டெர்மினல்களின் பயன்பாட்டில் மிகப்பெரிய வளர்ச்சியைத் தந்தது. தொடக்கம் மட்டுமேயான 113D மற்றும் பதில் மட்டுமேயான 113B/C மோடம்களை அறிமுகப்படுத்தியதன் மூலமாக AT&T நிறுவனம் மோடம்களுக்கு ஆகும் செலவுகளைக் குறைத்தது.

கார்டர்ஃபோன் தீர்மானம்

தொகு
நோவேஷன் CAT அக்வாஸ்டிக்கலி கப்பிள்ட் மோடம்

பல ஆண்டுகளுக்கு, பெல் எண்ட் சிஸ்டம் (AT&T) நிறுவனமானது, அதனுடைய தொலைபேசி இணைப்புகளின் பயன்பாட்டில் தனியுரிமையைப் பராமரித்து வந்தது. பெல் நிறுவனத்தால் வழங்கப்படும் சாதனங்களை மட்டுமே அதனுடைய நெட்வொர்க்குடன் இணைக்க அனுமதித்ததன் மூலமாக இதனை செய்து வந்தது. 1968 -க்கு முன்பு வரை, AT&T நிறுவனமானது, அதனுடைய தொலைபேசி இணைப்புகளுடன் மின்சார முறையில் இணைக்கப்படக்கூடிய சாதனங்களில் தனியுரிமை பெற்று வந்தது. இதன் விளைவாக 103A-இணக்கத்தன்மை மோடம்களுக்கு சந்தையில் தேவை ஏற்பட்டது, இவை எந்திரவியல் பூர்வமாக தொலைபேசியில் இணைக்கப்பட்டன. அதற்கு அக்வாஸ்டிக்கலி கப்பிள்ட் மோடம்கள் என்றை கையடக்க சாதனம் பயன்படுத்தப்பட்டது. 1970 களில் பொதுவாக பயன்பட்டு வந்த மோடம் மாடல்களாவன நோவாஷன் கேட் மற்றும் ஆண்டர்சன்-ஜேக்கப்சன் ஆகியவை ஆகும், இதில் இரண்டாவது வகை லாரன்ஸ் லிவர்மோர் நேஷனல் லேபாரட்டரியில் எதிர்பாராத விதமாக கண்டறியப்பட்டது. ஹஷ்-எ-ஃபோன் v. FCC என்பது DC சர்க்யூட் கோர்ட் ஆஃப் அப்பீல்ஸ் என்பதால் நவம்பர் 8, 1956 -இல் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும், இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தொலைத்தொடர்பு சட்டத்துக்கு ஒரு முன்னோடி சட்டமாக இருந்தது. AT&T இன் சாதனங்களைப் பயன்படுத்துவதை முறைப்படுத்துவது, FCC -இன் பொறுப்பின் கீழ் வரும் என்று மாகாண நீதிமன்றம் உணர்ந்தது. இதே நேரத்தில், FCC இன் கண்காணிப்பாளர், சாதனம் இணைக்கப்படும் வரை, அந்த அமைப்பைப் பாழாக்கி விடக்கூடிய வாய்ப்பு எதுவுமில்லை என்பதைக் கண்டறிந்தார். பின்னர், 1968 -ஆம் ஆண்டில் செய்யப்பட்ட கார்ட்டர்ஃபோன் முடிவின் காரணமாக, தொலைபேசி இணைப்புகளுடன் சாதனங்களை மின்னணு முறையில் இணைப்பதற்கு AT&T-வடிவமைத்த சோதனைகளை FCC கட்டாயமாக அமல்படுத்தியது. AT&T -ஆனது இந்த சோதனைகளை சிக்கலானதாகவும், மிகவும் விலையுயர்ந்ததாகவும் வடிவமைத்தது, இவற்றின் காரணமாக 1980களின் முற்பகுதி வரை அக்வாஸ்டிக்கல கப்பிள்டு மோடம்கள் பரவலாக காணப்பட்டன.

1972 -ஆம் ஆண்டு டிசம்பரில், வாடிக் VA3400 என்பதை அறிமுகப்படுத்தியது. இந்த சாதனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது 1,200 பிட்/வி வேகத்தில் ஒரு டயல் நெட்வொர்க்கின் ஊடாக முழு ட்யூப்லக்ஸ் செயல்பாட்டை வழங்கியது. 103A -ஐப் போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தியும், அனுப்புவதற்கும் பெறுவதற்கும் வெவ்வேறு அதிர்வெண் கற்றைகளைப் பயன்படுத்தியும் இது இயங்கியது. 1976 -ஆம் ஆண்டு நவம்பரில், வாடிக் மோடத்தின் போட்டியை சமாளிக்க AT&T 212A மோடம் என்பதை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கின் வடிவமைப்பைப் போன்றே காணப்பட்டது, ஆனால் இது பரிமாற்றத்துக்கு குறைவான அதிர்வெண் தொகுப்பைப் பயன்படுத்தியது. 103A மோடமுடன் 300 பிட்/வி வீதத்தில் 212A -வையும் பயன்படுத்துவது சாத்தியமானதே. வாடிக் ஐப் பொறுத்த வரை, அதிர்வெண் ஒதுக்கீடுகளில் செய்யப்பட்ட மாற்றமானது, 212 -ஐ அக்வாஸ்டிக் கப்ளிங்குடன் பொருந்துமாறு வைக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் செய்யப்பட்டது. இதனால் பல பெரிய மோடம் உற்பத்தியாளர் முடக்கப்பட்டனர். 1977ஆம் ஆண்டில், VA3467 என்ற மூன்று செயல்பாட்டு மோடமை வாடிக் வெளியிட்டது. இதனை கணினி மைய இயக்குநர்களிடம் விற்றது. இது ஒரு பதில் மட்டுமேயான மோடமாகும். இது வாடிக்கின் 1,200-பிட்/வி பயன்முறையிலும், AT&T -இன் 212A பயன்முறையிலும் 103A செயல்பாட்டிலும் இயங்கக்கூடியதாகும்.

சூட்டிகை இணக்கி (ஸ்மார்ட்மோடம்) மற்றும் BBSeக்களின் எழுச்சி

தொகு
யுஎஸ் ரோபாடிக்ஸ் ஸ்போர்ட்ஸ்டர் 14,400 ஃபேக்ஸ் மோடம் (1994)

1981ஆம் ஆண்டில் ஹேய்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்மோடம் என்பதே இதில் ஏற்பட்ட அடுத்த மிகப்பெரிய முன்னேற்றமாகும். ஸ்மார்ட்மோடம் என்பது சாதாரண 103A 300-பிட்/வி மோடமாகும், ஆனால் இதில் மோடமானது ஒரு சிறிய கட்டுப்பாட்டகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, அது கணினியிலிருந்து கட்டளைகளைப் பெறவும் தொலைபேசி இணைப்பை இயக்கவும் அனுமதித்தது. இந்த கட்டளைத் தொகுதியில், தொலைபேசியை எடுப்பது, துண்டிப்பது, எண்களை டயல் செய்வது மற்றும் அழைப்புகளுக்கு பதிலளிப்பது போன்ற செயல்களும் அடங்கும். பெரும்பாலான நவீனகால மோடம்களிலும் அடிப்படை ஹேய்ஸ் கட்டளைத் தொகுதியே அடிப்படை கணினி கட்டுப்பாடாக விளங்குகிறது.

ஹேய்ஸின் ஸ்மார்ட்மோடம்களுக்கு முன்பு வரை, எல்லா டயல்-அப் மோடம்களுக்கும் இரண்டு படியில் இணைப்பை செயலாக்க வேண்டிய செயல்முறை இருந்தது: முதலில், ஒரு சாதாரண தொலைபேசியில் பயனர் தொலைநிலை எண்ணை டயல் செய்ய வேண்டும், இரண்டாவதாக அந்த ஹேண்ட்செட்டை ஒரு அக்வாஸிடிக் கப்ளருடன் இணைக்க வேண்டும். டயலர்கள் என்றழைக்கப்பட்ட வன்பொருள் துணை சாதனங்களும் விசேஷ சூழல்களில் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இவை பொதுவாக ஒரு ஹேண்ட்செட்டை யாரேனும் ஒருவர் சுழற்றுவதன் மூலமாகவே இயங்கின.

ஸ்மார்ட்மோடம் மூலமாக கணினியானது மோடமுக்கு ஒரு கட்டளையை அனுப்புவதன் மூலமாக நேரடியாக தொலைபேசியை டயல் செய்ய முடியும், இதனால் இதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி சாதனத்தின் தேவை நீக்கப்படுகிறது, மேலும் அக்வாஸ்டிக் கப்ளரின் தேவையும் அகற்றப்படுகிறது. ஸ்மார்ட்மோடம்கள் நேரடியாக தொலைபேசி இணைப்புடன் இணைக்கப்பட்டன. இதனால் அமைப்பும் செயல்பாடும் மிக அதிக அளவுக்கு எளிமையாக்கப்பட்டன. தொலைபேசி எண்களின் பட்டியலையும், அனுப்பப்பட்ட டயலிங் கட்டளைகளையும் பராமரிக்கும் டெர்மினல் நிரல்கள் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தன.

ஸ்மார்ட்மோடம் மற்றும் அதனைப் போன்ற சாதனங்கள் தகவல் பலகை அமைப்பு (bulletin board system -BBS) போன்றவை பரவலாகவும் உதவின. முந்தைய காலத்தில் மோடம்கள் பெரும்பாலும், பயனர்கள் பக்கத்தில் அழைப்பு மட்டுமேயான, அக்வாஸ்டிக் முறையில் இணைக்கப்பட்ட மாடல்களாகவும் அல்லது சர்வர் பக்கத்தில் மிகவும் விலை அதிகமான பதில் மட்டுமேயான மாடல்களாவும் இருந்தன. ஆனால் ஸ்மார்ட்மோடம்கள் கணினியிலிருந்து அனுப்பப்படும் தகவல்களின் அடிப்படையில் இரண்டு பயன்முறையிலும் இயங்கக்கூடியதாக இருந்தது. இப்போது சந்தையில் பல குறைந்த விலை சர்வர் முனையில் பயன்படும் மோடம்கள் வந்துள்ளன, இதன் காரணமாக BBS வளர்ச்சியடைந்தன.

பெரும்பாலும் எல்லா நவீனகால மோடம்களும் ஒரு தொலை நகல் இயந்திரமாகவும் இரட்டை வேலை செய்கின்றன. டிஜிட்டல் தொலைநகல்கள், 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டன, இவை பெரும்பாலும் ஒரு எளிய பட வடிவமைப்பாக உயர் வேக(14.4 கி.பிட்/வி) மோடம் வழியாக அனுப்பப்பட்டவையாகும். ஹோஸ்ட் கணினியில் இயங்கும் மென்பொருளானது எந்தவொரு படத்தையும் தொலை நகல் வடிவத்துக்கு மாற்றக்கூடியது, பின்னர் இதனை எந்தவொரு மோடமைப் பயன்படுத்தியும் அனுப்ப முடியும். இம்மாதிரியான மென்பொருள்கள் ஒருமுறை சேர்க்கும் துணை நிரல்களாக கிடைத்தன, ஆனால் உடனடியாக எல்லா இடங்களிலும் பயன்படத் தொடங்கின.

மென்பொருள் இணக்கி (சாஃப்ட்மோடம் (டம்ப் மோடம்))

தொகு
பாரம்பரியமான ISA மோடமுக்கு அருகில் ஒரு PCI வின்மோடம்/சாஃப்ட்மோடம் (இடதுபுறத்தில் இருப்பது). இடதுபுறத்தில் உள்ள மோடமில் உள்ள குறைவான சர்க்யூட் அமைப்பைப் பாருங்கள்.

வழக்கமாக மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகியவை இணைந்து செய்து வந்த செயல்களை செய்யும் ஒரு சிறிய அளவிலான மோடமே வின்மோடம் அல்லது சாஃப்ட்மோடம் என்றழைக்கப்படுகிறது. ஒரு தொலைபேசி இணைப்பில், ஒலிகளை அல்லது மின்னழுத்த வேறுபாடுகளை உருவாக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்ட ஒரு எளிய டிஜிட்டல் சிக்னல் ப்ராசசரே மோடமாகும். சாஃப்ட்மோடம்கள் வழக்கமான மோடம்களை விடவும் மலிவானவை ஏனெனில் அவற்றில் குறைவான வன்பொருள் பகுதிப்பொருட்கள் உள்ளன. இதிலுள்ள குறைபாடு என்னவென்றால், மோடம் ஒலிகளை உருவாக்கும் மென்பொருள் எளிமையானதல்ல, மேலும் இது பயன்படுத்தப்படும்போது கணினியின் செயல்திறன் முழுமையாக பாதிக்கப்படுகிறது. ஆன்லைன் கேமிங் போன்ற விஷயங்களில் இது மிகவும் கவலைக் கொள்ளக்கூடிய ஒரு விஷயமாகும். மற்றொரு சிக்கல் என்னவென்றால், எல்லாவற்றுடனும் இணக்கமில்லாத தன்மையாகும், அதாவது விண்டோஸ் அல்லாத இயக்க முறைமைகளில் (லினக்ஸ் போன்றவை) இந்த மோடம்களை இயக்குவதற்கான இயக்குநிரல்கள் (டிரைவர்கள்) பெரும்பாலும் கிடைப்பதில்லை.

குறுகிய கற்றை/தொலைபேசி இணைப்பு டயல்அப் மோடம்கள்

தொகு

இன்றைய காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய ஒரு சாதாரண மோடத்தில் இரண்டு செயல்பாட்டு பகுதிகள் உள்ளன: சிக்னல்களை உருவாக்குவதற்கு மற்றும் இயக்குவதற்கான அனலாக் பிரிவு மற்றும் அமைவு மற்றும் கட்டுப்பாட்டுக்கான டிஜிட்டல் பிரிவு. இவ்விரண்டு செயல்பாடுகளும் ஒரே சில்லில் (சிப்) கட்டமைக்கப்படுகின்றன, ஆனாலும் இந்த பிரிவு கருத்து ரீதியாக இன்றும் கணக்கில் கொள்ளப்படுகிறது. செயல்படும்போது மோடமானது இரண்டு பயன்முறைகளில் ஒன்றில் இயங்கக்கூடும், முதலாவது தரவு பயன்முறை இதில் கணினியிலிருந்து அல்லது கணினிக்குத் தரவானது தொலைபேசி இணைப்புகளின் மூலம் கடத்தப்படுகிறது, இரண்டாவது கட்டளை பயன்முறை இதில், மோடம் கணினியிலிருந்து வரும் கட்டளைகளைக் கேட்டு அவற்றை செயல்படுத்துகிறது. ஒரு பொதுவான அமர்வில், மோடத்தை இயக்குவது (பெரும்பாலும் கணினிக்கு உள்ளாகவே நடக்கிறது) இதில் தானாகவே கட்டளை பயன்முறை எடுத்துக்கொள்ளப்படுகிறது, பின்னர் ஒரு எண்ணை டயல் செய்வதற்கான கட்டளை அனுப்பப்படுகிறது. ஒரு தொலைநிலை மோடமில் இணைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், மோடம் தானாகவே தரவு பயன்முறைக்கு செல்கிறது, பின்னர் பயனர் தரவை அனுப்பவும் பெறவும் முடியும். பயனர் பயன்பாட்டை முடித்தவுடன், மோடமை கட்டளை பயன்முறைக்கு மீண்டும் கொண்டு வர ஒரு ஒரு விநாடி கால இடைவெளியைத் தொடர்ந்து எஸ்கேப் சீக்வன்ஸ், "+++" மோடமுக்கு அனுப்பப்படுகிறது, பின்னர் தொலைபேசி இணைப்பைத் துண்டிப்பதற்கான ATH கட்டளை அனுப்பப்படுகிறது.

இந்த கட்டளைகள் பொதுவாக, ஹேய்ஸ் கட்டளைத் தொகுதியிலிருந்து வருபவை, ஆனாலும் இந்த சொல் பெரும்பாலும் காணப்படுவதில்லை. உண்மையான ஹேய்ஸ் கட்டளைகள் 300 பிட்/வி செயல்பாட்டுக்கு மட்டுமேயானது, பின்னர் அது 1,200 பிட்/வி மோடம்களுக்கு விரிவாக்கப்பட்டது. அதிக வேகங்களுக்கு புதிய கட்டளைகள் தேவைப்பட்டன, இதனால் அதிவிரைவு கட்டளைத் தொகுதிகள் 1990களின் முற்பகுதிகளில் அதிகமாக உருவாக்கப்பட்டன. 1990 களின் பிற்பகுதியில் பெரும்பான்மையானவை கணிசமான அளவுக்கு தரநிலையை அடைந்தன, ஏனெனில் அப்போது பெரும்பாலான மோடம்கள் சிறிய எண்ணிக்கையிலான சிப்செட்களில் இருந்து தயாரிக்கப்பட்டன. இவற்றை நாம் இப்போதும், ஹேய்ஸ் கட்டளைத் தொகுதி என்றே அழைக்கிறோம், ஆனாலும் இவற்றில் உண்மையான தரநிலையை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமான கட்டளைகள் இருக்கின்றன.

வேகங்களில் வளர்ச்சி (V.21, V.22, V.22bis)

தொகு
 
லேப்டாப்புக்கான ஒரு 2,400 பிட்/வி மோடம்.

300 பிட்/வி மோடம்கள் தரவை அனுப்ப ஆடியோ ஃப்ரீக்வன்ஸி ஷிஃப்ட் கீயிங்கைப் பயன்படுத்தியது. இந்த அமைப்பின்படி, 1 மற்றும் 0 ஆகியவற்றால் ஆன கணினி தரவு ஒலிகளாக மாற்றப்பட்டன. இந்த ஒலிகளை தொலைபேசி இணைப்புகளின் வழியே எளிதாக அனுப்ப முடியும். பெல் 103 முறையில் உருவாக்கும் மோடமானது 1,070 Hz -இல் ஒரு டோனை இயக்குவதன் மூலமாக 0க்களை அனுப்புகிறது, 1களை அனுப்ப 1,270 Hz டோன், அதேபோல பதிலளிப்பு மோடமானது அதனுடைய 0க்களை 2,025 Hz -இலும் 1களை 2,225 Hz இலும் பயன்படுத்தியது. இந்த அதிர்வெண்கள் மிகவும் எச்சரிக்கையாக தேர்ந்தெடுக்கப்பட்டன, அவை தொலைபேசி அமைப்பில் மிக குறைவான அளவில் சிதைவடையக் கூடியதாகவும், ஒன்றையொன்று அவற்றின் ஹார்மோனிக்குகளாக அமையாமலும் இருக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்டன.

1,200 பிட்/வி வேகத்திலும் விரைவான கணினிகளிலும் பேஸ்-ஷிஃப்ட் கீயிங் பயன்படுத்தப்பட்டது. இந்த அமைப்பில் எந்தவொரு பக்கத்திலும் இருக்கக்கூடிய இரண்டு டோன்களும் 300 பிட்/வி அமைப்புகளின் அதே அதிர்வெண்களில் அனுப்பப்பட்டன, ஆனால் சிறிது கட்ட இடைவெளியுடன் அனுப்பப்பட்டன. இரண்டு சிக்னல்களின் கட்டங்களை (பேஸ்) ஒப்பிடுவதன் மூலமாக, 1 மற்றும் 0 ஆகியவை மீண்டும் உருவாக்கப்படலாம், எடுத்துக்காட்டாக, சிக்னல்கள் 90 டிகிரிகள் கட்ட இடைவெளியுடன் இருந்தால், அது 1, 0 ஆகிய இரண்டு இலக்கங்களை குறிப்பிடுகிறது, அதேபோல 180 டிகிரிகளாக இருந்தால் அவை 1, 1 ஆகியவையாக இருக்கும். இந்த முறையின்படி, சிக்னலின் ஒவ்வொரு சுழற்சியும், ஒரு இலக்கத்திற்கு பதிலாக இரண்டு இலக்கங்களைக் குறிப்பிட்டன. 1,200 பிட்/வி மோடம்கள், உண்மையில் ஒரு விநாடிக்கு 600 சிம்பல்களை கடத்தும் மோடம்களாகும் (600 பாட் மோடம்கள்) இதில் ஒரு சிம்பலுக்கு 2 பிட்கள் உள்ளன.

வாய்ஸ்பேண்ட் மோடம்கள் பொதுவாக 300 மற்றும் 1,200 பிட்/வி (V.21 மற்றும் V.22) வீதங்களில் 1980 களின் மையப்பகுதியில் இருந்தன. 1,200-பிட்/வி பெல் 212 சிக்னலிங் A முறைகளைப் போன்றே இயங்கக்கூடிய ஒரு V.22bis 2,400-பிட்/வி அமைப்பு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது, மற்றும் இதிலிருந்து சற்று வேறுபட்ட ஒரு அமைப்பு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980களின் பிற்பகுதிகளில், பெரும்பாலான மோடம்கள் இந்த தரநிலைகள் அனைத்தையும் ஆதரித்தன, 2,400-பிட்/வி செயல்பாடு பரவலாக காணப்பட்டது.

பாட் வீதங்கள் மற்றும் பிட் வீதங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பீடு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, சாதன பேண்ட்வித்களின் பட்டியல் என்ற துணைக் கட்டுரையைக் காணவும்.

வேகங்களில் வளர்ச்சி (ஒற்றை உரிமையுடைமை தரநிலைகள்)

தொகு

சிறப்பு காரணங்களுக்காக பல தரநிலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன, பொதுவாக அதிக வேக சேனல் தரவைப் பெறுவதற்கும், குறைந்த வேக சேனல் தரவை அனுப்புவதற்கும் பயன்படுத்தப்பட்டன. இதற்கு ஒரு எடுத்துக்காட்டானது, பிரஞ்சு மினிடல் அமைப்பில் பயன்படுத்தப்பட்ட, பயனர்களின் டெர்மினலானது அதனுடைய பெரும்பாலான நேரத்தைத் தகவல்களைப் பெறுவதிலேயே செலவிட்டது. இதனால், மினிடல் டெர்மினலில் இருந்த மோடமானது செய்திகளை பெறுவதற்கு 1,200 பிட்/வி வேகத்திலும், சர்வர்களுக்கு கட்டளைகளை அனுப்புவதற்கு 75 பிட்/வி வேகத்திலும் இயங்கியது.

இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டு அதிவிரைவு மோடம்களை உருவாக்கிய மூன்று அமெரிக்க நிறுவனங்கள் பிரபலமடைந்தன. டெலிபிட் என்ற நிறுவனம் அதனுடைய ட்ரெய்ல்ப்ளேசர் என்ற மோடத்தை 1984 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது, இது ஏராளமான 36 பிட்/வி சேனல்களின் வழியாக 18,432 பிட்/வி என்ற வீதங்களில் தரவை ஒரு வழியில் அனுப்பின. தலைகீழ் பாதையில் ஒரு கூடுதல் சேனலை வைத்திருந்ததன் மூலமாக, இரண்டு மோடம்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட்டது, இதிலிருந்து இணைப்பின் ஒவ்வொரு முனையிலும் எவ்வளவு தரவு காத்திருக்கிறது என்பதை அறிந்து மோடம்கள் இணைப்பின் திசையை இயக்கத்தின்போதே மாற்றிக் கொள்ள முடிந்தது. இந்த ட்ரெய்ல்ப்ளேசர் மோடம்கள் UUCP g நெறிமுறையில் மேம்பாட்டை அனுமதிக்கும் அம்சத்தை ஆதரித்தன, இந்த நெறிமுறையானது யுனிக்ஸ் அமைப்புகளில் மின்னஞ்சல்களை அனுப்ப பயன்படுத்தப்பட்டது, இதனால் UUCP இன் வேகம் மிக அதிக அளவுக்கு அதிகரித்தது. இதனால் ட்ரெய்ல்ப்ளேசர்கள் யுனிக்ஸ் அமைப்புகளில் மிகவும் பரவலாக காணப்பட்டன, மேலும் 1990கள் வரை அவை சந்தையில் பெரும்பாலான இடத்தைப் பிடித்திருந்தன.

யு.எஸ். ரோபாடிக்ஸ் (USR) இதே போன்ற ஒரு அமைப்பை HST என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது, இது 9,600 பிட்/வி (ஆரம்பநிலை பதிப்புகளில் குறைந்தபட்சமாக) வேகத்தை அளித்தது மற்றும் பெரிய அளவிலான பின்புல சேனலை வழங்கியது. ஸ்பூஃபிங்கை வழங்குவதற்கு பதிலாக, USR குறைவான விலையில் BBS sysopகளுக்கு அதனுடைய மோடம்களை வழங்கியதன் மூலமாக Fidonet பயனர்களிடையே பெரிய அளவிலான சந்தையை உருவாக்கியது. இதனால் வேகமான கோப்புப் பரிமாற்றங்களை விரும்பிய பயனர்களுக்கான விற்பனை அதிகரித்தது. இவற்றுடன் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஹேய்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டது, இதனால் அதனுடைய சொந்த 9,600-பிட்/வி தரநிலையான, எக்ஸ்பிரஸ் 96 என்பதை அது அறிமுகப்படுத்தியது (இதனை பிங்-பாங் என்றும் அழைத்தனர்), இது டெலிபிட்டின் PEP ஐ போன்றே இருந்தது. ஆனாலும் ஹேய்ஸ் நிறுவனமானது நெறிமுறை ஸ்ஃபூங்கையோ அல்லது sysop தள்ளுபடிகளையோ வழங்கவில்லை, இதனால் அதிவேக மோடம்கள் அரிதாகவே கிடைத்து வந்தன.

4,800 மற்றும் 9,600 பிட்/வி (V.27ter, V.32)

தொகு

மோடம் வடிவமைப்பில் எதிரொலி நீக்கம் (எக்கோ கேன்சலேஷன்) என்பது அடுத்த மிகப்பெரிய முன்னேற்றமாகும். உள்ளூர் தொலைபேசி இணைப்புகளும், அதே வயர்களைப் பயன்படுத்தி தகவல்களை அனுப்பியும் பெற்றும் வந்தன, இதன் விளைவாக வெளிச்செல்லும் சிக்னல்களில் ஒரு சிறிய அளவு மீண்டும் திரும்பியது. இந்த சிக்னலானது மோடத்தைக் குழப்பக்கூடியதாகும். அதாவது அந்த சிக்னலானது தொலைவில் உள்ள மோடத்திலிருந்து வருகிறதா அல்லது இதனுடைய சொந்த சிக்னல் திரும்பி வருகிறதா என்ற குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த காரணத்தால்தான் ஆரம்பகால மோடம்கள், பதிலளிப்பு, தொடக்கம் என்ற இரு நிலைகளில் அதிர்வெண்களை பிரித்திருந்தன; அதாவது ஒவ்வொரு மோடமும், அது அனுப்பும் அதிர்வெண்களை கேட்கவே முடியாது. அதிகமான வேகங்களில் தகவல் கடத்தல் செய்யும் அளவுக்கு, தொலைபேசி அமைப்புகள் மேம்பட்டிருந்தாலும், இந்த பிரிவானது கிடைக்கக்கூடிய சிக்னல் பேண்ட்வித்தில் பாதி அளவிற்கு மோடம்களின் வேகங்களைக் கட்டுப்படுத்தின.

எதிரொலி நீக்கம் இந்த சிக்கலைத் தீர்த்து வைத்தது. எதிரொலிகளின் தாமதம் மற்றும் மதிப்புகளை அளவிட்டதன் மூலமாக, பெறப்பட்ட சிக்னலானது ஒரு மோடத்தின் சொந்த சிக்னலா அல்லது தொலைநிலை மோடத்திலிருந்து வருவதா என்று மோடம் அறிய உதவியது, மேலும் ஒரு இதற்கு சமமான மற்றும் எதிரான சிக்னலை உருவாக்கி எதிரொலி நீக்கப்பட்டது. இதன் பின்னர் மோடம்கள், கிடைத்த மொத்த அதிர்வெண் பட்டையிலும், இரண்டு திசைகளிலும் ஒரே நேரத்தில் தகவல்களை அனுப்ப முடியக்கூடிய திறன் பெற்றன. இதன் விளைவாக 4,800 மற்றும் 9,600 பிட்/வி மோடம்கள் உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டது.

வேகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியானது அதிக சிக்கலான தகவல் தொடர்பு கொள்கைகளை உருவாக்கியது. 1,200 மற்றும் 2,400 பிட்/வி மோடம்கள் பேஸ் ஷிஃப்ட் கீ (PSK) கொள்கையைப் பயன்படுத்தின. இதனால் ஒரு சிம்பலில் இரண்டு அல்லது மூன்று பிட்களை கடத்தியது. அடுத்த முக்கிய வளர்ச்சியானது, வீச்சு மற்றும் கட்டம் ஆகிய இரண்டின் தொகுப்பாக, நான்கு பிட்கள் குறியாக்கம் செய்யப்பட்டன இதனை குவாட்ரேச்சர் ஆம்ப்ளிடியூட் மாடுலேஷன் (Quadrature Amplitude Modulation - QAM) என்றழைக்கின்றனர். இதனை ஒரு விண்மீன் வரைபடத்துடன் ஒப்பிடலாம், இதில் ஒரே கடத்தியின் வழியே கடத்தப்பட்ட பிட்கள் x (மெய்) மற்றும் y (குவாட்ரேச்சர்) ஆகியவற்றை அச்சுகளாகக் கொண்ட வரைபடத்தில் குறிக்கப்பட்டிருப்பதாக கருதலாம்.

புதிய V.27ter மற்றும் V.32 தரநிலைகள் ஒரு சிம்பளுக்கு 4 பிட்கள் வரை, 1,200 அல்லது 2,400 பாட் வீதத்தில், 4,800 அல்லது 9,600 பிட்/வி என்ற பிட் வீதத்தில் அனுப்பக்கூடியன. இதனுடைய கேரியர் அதிர்வெண் 1,650 Hz. பல ஆண்டுகள் வரை, இந்த வேகமே தொலைபேசி நெட்வொர்க்குகள் வழியாக தரவு பரிமாற்றத்தின் அதிகபட்ச வேகமாக பெரும்பாலான பொறியாளர்கள் கருதி வந்தனர்.

பிழை திருத்தம் மற்றும் சுருக்கம்
தொகு

இந்த உயர்வேகங்களில் செயல்படுவதால், தொலைபேசி இணைப்புகளின் வரம்புகள் அதிகரித்தன, இதனால் அதிகமான பிழைகள் ஏற்பட்டன. இதனால் மோடம்களில் பிழை திருத்த அமைப்புகள் கட்டமைக்கப்பட்டன, இதனால் அதிக பிரபலமான மைக்ரோகாம் நிறுவனத்தின் MNP அமைப்புகள் பரவலாகியது. MNP தர நிலைகள் 1980களில் வெளியிடப்பட்டன, ஒவ்வொன்றும், பிழைகளைக் குறைத்து தரவு வீதத்தின் அளவை தொடர்ந்து அதிகரித்து வந்தன, கொள்கை ரீதியான உச்ச அளவில் 75% வரை MNP 1 இலும், அதிலிருந்து MNP 4 இல் 95% வரையிலும் இருந்தன. MNP 5 என்ற ஒரு புதிய முறை இந்த செயல்பாட்டை இன்னும் முன்னேற்றியது, அதாவது இந்த அமைப்பில் தரவு சுருக்கத்தை அறிமுகப்படுத்தியது, இதனால் மோடமின் மதிப்பீட்டை விடவும் அதிகமான தரவு பரிமாற்ற வீதம் பெறப்பட்டது. பொதுவாக பயனர்கள் ஒரு MNP5 மோடமானது அதனுடைய இயல்பான தரவு பரிமாற்ற வீதத்தில் 130% அளவில் தகவல்களை கடத்தக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். MNP -இன் விவரங்கள் பின்னர் வெளியிடப்பட்டன, இதனால் அவை 2,400-பிட்/வி மோடம்களில் பிரபலமடையத் தொடங்கின, மேலும் இவை V.42 மற்றும் V.42bis ITU தரநிலைகளின் உருவாக்கத்துக்கு இட்டு சென்றன. V.42 மற்றும் V.42bis ஆகியவை MNP உடன் இணக்கம் இல்லாதவை, ஆனால் அதே போன்ற செயல்பாட்டைக் கொண்டவை: அதாவது பிழை திருத்தம் மற்றும் சுருக்கம் ஆகியவை.

இந்த உயர்வேக மோடம்களின் மற்றொரு பொதுவான அம்சமாக ஃபால்பேக், அல்லது ஸ்பீடு ஹன்டிங் என்றழைக்கப்படும் திறன் இருந்தது, இதன் மூலமாக குறைந்த திறனுடைய மோடம்களுடனும் அவை பேச முடிந்தது. அழைப்பின் தொடக்கத்தின்போது மோடமானது, தொடர்ச்சியான பல சிக்னல்களை இணைப்பின் வழியே அனுப்பி, தொலைவில் உள்ள மோடம் அதற்கு பதிலளிக்கும் வரை காத்திருக்கும். இவை உச்ச வேகத்தில் தொடங்கி, பதிலைப் பெறும் வரை தொடர்ந்து மெதுவாக மாறிக் கொண்டே வரும். இதனால், இரண்டு USR மோடம்கள் 9,600 பிட்/வி வேகத்தில் இணையக்கூடியவையாக இருக்கும், ஆனால் 2,400-பிட்/வி மோடமைக் கொண்ட ஒரு பயனர் அழைக்கப்பட்டால், USR தானாகவே பொதுவான 2,400-பிட்/வி வேகத்துக்கு குறைவடையும். இதேமாதிரியான நிகழ்வு ஒரு V.32 மோடம் மற்றும் HST மோடம் போன்றவை இணைக்கப்பட்டாலும் நிகழலாம். ஏனெனில் அவை 9,600 பிட்/வி -இல் அவை வேறுபட்ட தரநிலைகளைப் பயன்படுத்துகின்றன, அவை மிகப்பொதுவாக ஆதரிக்கப்படும் தரநிலையான 2,400 பிட்/வி க்கு தானாகவே குறைவடையும். இதே நிகழ்வு V.32bis மற்றும் 14,400 பிட்/வி HST மோடம் ஆகியவற்றிலும் பொருந்தும், இவையும் ஒன்றுடன் ஒன்று 2,400 பிட்/வி என்ற வேகத்திலேயே தொடர்பு கொள்ள முடியும்.

9.6k தடையை மீறுதல்

தொகு

1980ஆம் ஆண்டில், ஐபிஎம் ஜூரிச் ரிசர்ச் லேபாரட்டரியைச் சேர்ந்த காட்ஃப்ரைட் உங்கர்பொயெக் மோடம்களின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கான திறன் வாய்ந்த சேனல் கோடிங் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்தார். அவருடைய முடிவுகள் மிகவும் ஆச்சரியமூட்டக்கூடியவையாக இருந்தன, ஆனால் அவருடைய ஒருசில நண்பர்களுக்கு மட்டுமே தகவல்கள் தெரிவிக்கப்பட்டன[1]. இறுதியாக 1982 -ஆம் ஆண்டில், அவருடைய கண்டுபிடிப்புகளை வெளியிட ஒப்புக்கொண்டார், அவையே இன்று வரை தகவல்தொடர்பு குறியாக்க கொள்கைகளில் மிக முக்கிய ஆய்வுக்கட்டுரையாக இருந்து வருகிறது.[சான்று தேவை] ஒவ்வொரு சிம்பலிலும் உள்ள பிட்களுக்கு திறன் வாய்ந்த பேரிட்டி சோதனை குறியேற்றத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், குறியேற்றப்பட்ட பிட்களை ஒரு இரு பரிமாண டைமண்ட் வடிவமைப்பில் பொருத்துவதன் மூலமும், அதே பிழை வீதத்துடன் தகவல் பரிமாற்ற வேகத்தை இருமடங்காக உயர்த்துவது சாத்தியம் என்று உங்கர்பொயெக் காண்பித்தார். இந்த புதிய நுட்பமானது தொகுதி பிரிப்புகளின் மூலம் மேப்பிங் (இப்போது ட்ரெல்லிஸ் மாடுலேஷன் எனபடுகிறது) என்று அழைக்கப்படுகிறது.

பிழை திருத்தும் குறியீடுகள், சொற்களை (பிட்களின் தொகுதி) அவை ஒன்றை விட்டு மிக தொலைவில் இருக்குமாறு குறியேற்றம் செய்கின்றன, இதனால் பிழை ஏற்படும் நிலையிலும் அவை அசல் சொல்லுக்கு நெருக்கமாகவே இருக்கும் (மற்றொரு சொல்லா என்ற குழப்பம் ஏற்படாது) இதனை கோள தொகுப்பாக்கம் அல்லது ஒரு தளத்தில் நாணயங்களை அடுக்குவதுடன் ஒப்பிடலாம்: இரட்டை பிட் தொடர்கள் ஒன்றிலிருந்து ஒன்று எவ்வளவு விலகியிருக்கின்றனவோ அவ்வளவு எளிதாக அவற்றில் உள்ள சிறிய தவறுகளைத் திருத்த முடியும்.

இந்த தொழிற்துறையானது புதிய ஆய்வு மற்றும் வளர்ச்சி பாதையில் செல்லத் தொடங்கியது. அதிக திறன் வாய்ந்த குறியேற்ற முறைகள் உருவாக்கப்பட்டன, வணிக நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை வெளியிட்டன, தரநிலை நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டது. இந்த வளர்ச்சியின் முக்கிய நிகழ்வாக 1991 -ஆம் ஆண்டில் SupraFAXModem 14400 அறிமுகப்படுத்தப்பட்டது. V.32 மற்றும் MNP ஆகியவற்றை மட்டுமின்றி, புதிய 14,400 பிட்/வி V.32bis மற்றும் அதிக சுருக்கமான V.42bis மற்றும் 9,600 பிட்/வி தொலைநகல் திறன் போன்ற அனைத்தையும் ஆதரிக்கக்கூடிய புதிய சிப்செட்டை ராக்வெல் அறிமுகப்படுத்தியது. நிலை வட்டு தயாரிப்புகளுக்கு பிரபலமான சுப்ரா நிறுவனமானது, இந்த சிப்செட்டைப் பயன்படுத்தி, குறைவான விலையில் 14,400 பிட்/வி மோடமை உருவாக்கியது, இதன் விலையானது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு 2,400 பிட்/வி மோடம் விற்ற விலைக்கு சமமாகவே இருந்தது (சுமார் US$300). இந்தக் காரணங்களால், இந்த தயாரிப்பு உடனடியாகவே சிறப்பான விற்பனையை எட்டியது, அந்த நிறுவனத்தால் ஒரு சில மாதங்கள் மட்டுமே சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தது.

முந்தைய உயர் வேக தரநிலைகளில் இருந்த சில குறைபாடுகளின் காரணமாக V.32bis என்பது முந்தைய வடிவங்களை விட அதிக வெற்றியடைந்தது. HST -இன் 16,800 பிட்/வி வடிவமைப்புடன் USR போட்டியில் மீண்டும் இறங்கியது, அதே நேரத்தில் AT&T ஒரு 19,200 பிட்/வி முறையை V.32ter (V.32 டெர்போ அல்லது டெர்ஷரி ) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது, ஆனால் எந்த தரநிலைக்கும் உட்படாத மோடம்களும் சிறப்பாக விற்பனையை அடையவில்லை.

V.34/28.8k மற்றும் 33.6k
தொகு
 
V.34 நெறிமுறைக்கு இணக்கமாக உருவாக்கப்பட்ட ஒரு ISA மோடம்.

இந்த அமைப்புகளில் ஏற்பட்ட எந்தவித ஆர்வமும் 28,800 பிட்/வி இன் V.34 தரநிலையின் அறிமுகத்தால் மாற்றியமைக்கப்பட்டன. இந்த நேரத்தில், பல நிறுவனங்கள், வன்பொருளை வெளியிட தீர்மானித்தன மற்றும் V.FAST என்ற மோடத்தை அறிமுகப்படுத்தின. தரநிலைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர் (1994) V.34 மோடம்களுடனான இணக்கத்தன்மையை உறுதிப்படுத்த, உற்பத்தியாளர்கள் அதிக நெகிழ்ச்சி தன்மை வாய்ந்த பாகங்களை உருவாக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். அதாவது ASIC மோடம் சிப்களுக்கு பதிலாக ஒரு DSP மற்றும் மைக்ரோகண்ட்ரோலர் போன்றவற்றைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டனர்.

இன்று, ITU தரநிலை V.34 -ஆனது ஒன்றிணைந்த செயல்பாடுகளின் இறுதி பயன்பாட்டில் உள்ளன. இதில் சேனல் குறியாக்கம் மற்றும் வடிவ குறியாக்கம் ஆகியவை உட்பட பல திறன்வாய்ந்த குறியாக்க முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிம்பலுக்கு 4 பிட்கள் (9.6 கி.பிட்/வி) என்பதிலிருந்து, புதிய தரநிலைகளில் ஒரு சிம்பலுக்கு 6 முதல் 10 பிட்கள் பயன்படுத்தப்பட்டன, மேலும் பாட் வீதங்கள் 2,400 முதல் 3,429 வரை இருந்தன, இதனால் 14.4, 28.8, மற்றும் 33.6 கி.பிட்/வி மோடம்கள் உருவாக்கப்பட்டன. இந்த வீதமானது கொள்கை ரீதியான ஷன்னோன் வரம்புக்கு நெருக்கமான மதிப்பைத் தந்தது. கணக்கிடப்பட்ட போது, குறுகிய கற்றை இணைப்பின் ஷான்னோன் திறனானது  , இதில் சிக்னலுக்குமான இரைச்சலுக்குமான வீதம்   என்று கொள்ளப்பட்டது. குறுகிய கற்றை தொலைபேசி இணைப்புகளில் 300-3,100 Hz ஆக பேண்ட்வித்கள் உள்ளன, எனவே  : திறனானது ஏறக்குறைய 35 கிபிட்/வி ஆகும்.

இந்த கண்டுபிடிப்புக்கு முன்பு, ட்ரெல்லிஸ் மாடுலேஷனை மெல்ல மெல்ல பயன்படுத்தியதால், அதிகபட்ச தொலைபேசி வரம்புகளானது வழக்கமான QAM ஐ பயன்படுத்தும்போது 3,429 பாட் * 4 பிட்/சிம்பள் == ஏறத்தாழ 14 கிபிட்/வி.

V.61/V.70 அனலாக்/டிஜிட்டல் ஒரே நேரத்தில் குரல் மற்றும் தரவு பரிமாற்றம்
தொகு

V.61 தரநிலையானது, ஒரேநேரத்தில் அனலாக் முறையில் குரல் மற்றும் தரவு பரிமாற்றத்தை (ASVD) அறிமுகப்படுத்தியது. இதனால் v.61 மோடம்களின் பயனர்கள் அவர்களின் மோடம்கள் இணைக்கப்பட்டிருக்கும்போதே குரல் உரையாடல்களையும் செய்ய முடியும்.

1995 -ஆம் ஆண்டு, முதல் DSVD (Digital Simultaneous Voice and Data) மோடம்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் இந்த தரநிலையானது சர்வதேச தொலைத்தொடர்பு யூனியனால் (International Telecommunication Union - ITU) v.70 என்று 1996 -ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.

இரண்டு DSVD மோடம்களால் ஒரு சாதாரண தொலைபேசி இணைப்பின் வழியாக முழுமையான டிஜிட்டல் இணைப்பை உருவாக்க முடியும். சில நேரங்களில் "ஏழைகளின் ISDN" என்றழைக்கப்படும், இது v.70 இணக்கத்தன்மை மோடம்களில் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது, இரண்டு முனைகளுக்கு இடையே அதிகபட்ச வேகம் 33.6 kbps வரை இயக்கியது. பேண்ட்வித்தின் பெரும்பாலான இடத்தை தரவுக்குக்காகவும், குரல் பரிமாற்றத்துக்கான இடத்தை ஒதுக்கியும் வைத்ததால், DSVD மோடம்களைப் பயன்படுத்தும்போதே பயனர்கள் தொலைபேசியை எடுத்து மற்றொருவருக்கு அழைப்பு செய்ய முடிந்தது.

இந்த தொழில்நுட்பத்தின் ஒரு நடைமுறை பயன்பாடானது, ஆரம்பக்கட்டத்தில் இரு நபர்கள் PSTN -இல் வீடியோ கேம் விளையாடும்போது அவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் பேசிக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியதன் மூலம் நடந்தது.

இந்த தரநிலைக்கான பிற நடைமுறை பயன்பாடுகள் மற்றும் வெளிப்படையான பகிர்வு ஆகியவற்றை DSVD -இன் ஆதரவாளர்கள் கருதினார்கள், ஆனாலும் இணைய இணைப்புக்கென மலிவான 56kbps அனலாக் மோடம்களின் வருகையால், PSTN -ஐ பயன்படுத்தி இருமுனைகளுக்கு இடையே செய்யப்படும் தரவு பரிமாற்றம் விரைவிலேயே காலாவதியாகி விட்டது. மேலும், இந்த தரநிலையானது எப்போதுமே மோடம் பயன்படுத்தப்படும்போது கூடவே தொலைபேசி அழைப்புகளைச் செய்ய அனுமதிக்கவில்லை என்றாலும், இதனுடைய மலிவான கட்டமைப்பு மற்றும் டெலிகோஸ்க்கான மேம்பாடு ஆகியவை இதன் பயன்பாட்டுக்கு காரணமாயின. மேலும் ISDN மற்றும் DSL தொழில்நுட்பங்களின் வருகை இந்த நோக்கத்தைச் சிறப்பாக பூர்த்தி செய்தன.

இன்று, மல்டி-டெக் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே v.70 இணக்கமான மோடத்தை ஆதரிக்கிறது. இவர்களின் சாதனமானது, v.92 56kbps -இல் ஆதரித்தாலும், v.70 ஆதரவை வழங்கும் பிற மோடம்களை விட இது குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிக விலையுடையதாக உள்ளது.

டிஜிட்டல் இணைப்புகள் மற்றும் PCM ஆகியவற்றைப் பயன்படுத்துதல் (V.90/92)

தொகு
 
ஒரு ISP இடம் உள்ள மோடம் வங்கி.

1990களில் ராக்வெல் மற்றும் U.S. ரோபாட்டிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொலைபேசி இணைப்புகளில் செய்யப்பட்ட புதிய டிஜிட்டல் கடத்துதலின் அடிப்படையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தின. நவீனகால நெட்வொர்க்குகளின் இயல்பான டிஜிட்டல் பரிமாற்றத்தின் வேகமானது 64 கிபிட்/வி ஆகும், ஆனால் சில நெட்வொர்க்குகள் இதன் ஒரு பகுதியை தொலைநிலை அலுவல் சிக்னலிங்குக்கு (எகா. தொலைபேசியைத் துண்டித்தல்) பயன்படுத்தின, இதனால் பயன்மிக்க வேகமானது 56 கிபிட்/வி என்பதற்கு குறைந்தது DS0. இந்த புதிய தொழில்நுட்பம் ITU தரநிலைகள் V.90 ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டது மற்றும் அது நவீன கால கணினிகளில் பொதுவாக இருந்தது. புதிய 56 கிபிட்/வி வீதமானது ஒரு மைய அலுவலகத்திலிருந்து, பயனரின் இடத்தை நோக்கிய இணைப்பில் மட்டுமே சாத்தியம் (டவுன்லிங்க்) மற்றும் அமெரிக்காவில் அரசாங்க வரைமுறையானது அதிகபட்ச திறன் வெளியீட்டை 53.3 கிபிட்/வி என்பதற்குள் கட்டுப்படுத்தியது. அப்லிங்க்கானது (பயனரிடமிருந்து மைய அலுவலகத்துக்கு) தொடர்ந்து V.34 தொழில்நுட்பத்தில் 33.6k வேகத்திலேயே இருந்தது.

பின்னர் V.92 -இல், டிஜிட்டல் PCM நுட்பமானது பயன்படுத்தப்பட்டது, இதன் மூலம் பதிவேற்றத்தின் வேகமானது அதிகபட்சம் 48 கிபிட்/வி என்பதற்கு உயர்த்தப்பட்டது, ஆனால் இதனால் பதிவிறக்க வேகம் குறைந்தது. எடுத்துக்காட்டாக, 48 கிபிட்/வி பதிவேற்ற வேகமானது, பதிவிறக்க வேகத்தை 40 கிபிட்/வி என்ற அளவுக்கு குறைக்கும். இது தொலைபேசி இணைப்பில் ஏற்படும் எதிரொலியினால் நிகழ்கிறது. இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்காக, V.92 மோடம்களில் டிஜிட்டல் அப்ஸ்ட்ரீமை அணைத்து விட்டு அனலாக் முறையில் 33.6 கிபிட்/வி இணைப்பைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது, இந்த காரணத்தால் அதிகபட்ச டவுன்ஸ்ட்ரீம் வேகம் 50 கிபிட்/வி அல்லது அதை விட அதிகமாக பராமரிக்கப்பட்டது. (நவம்பர் மற்றும் அக்டோபர் புதுபிப்பை http://www.modemsite.com/56k/v92s.asp என்ற முகவரியில் காணவும்) V.92 -இல் கூடுதலாக இரண்டு அம்சங்கள் இருந்தன. இதன் முதல் அம்சமானது, பயனர்கள் ஒரு அழைப்புக்கு நீண்ட நேரம் பதிலளிக்க வேண்டியிருக்கும்போது அவர்களின் டயல்-அப் இணைய இணைப்பை ஹோல்டில் வைத்திருக்க முடியும். இரண்டாவது அம்சமானது, ஒருவருடைய ISP உடன் மிகவிரைவாக இணைய முடிவது. இந்த திறன், தொலைபேசி லைனில் அனலாக் மற்றும் டிஜிட்டல் பண்புகளை நினைவில் வைத்திருப்பதன் மூலமும், இந்த சேமிக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தி விரைவாக இணைய முடிவதன் மூலமும் கிடைத்தது.

56k -ஐயும் தாண்டிசெல்ல சுருக்கத்தைப் பயன்படுத்துதல்

தொகு

இன்றைய V.42, V.42bis மற்றும் V.44 தரநிலைகளால் மோடம்கள் அதனுடைய அடிப்படை வீதத்தை விட அதிக வேகத்தில் தரவைக் கடத்துவது அனுமதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு V.44 உடனான 53.3 கிபிட்/வி இணைப்பின் மூலம் வெறும் உரையாக 53.3*6 == 320 கிபிட்/வி வரை கடத்த முடிகிறது. ஆனாலும், இந்த சுருக்க விகிதமான இணைப்பில் இருக்கக்கூடிய இரைச்சல் அல்லது முன்பே சுருக்கப்பட்ட கோப்புகளைக் (ZIP கோப்புகள், JPEG படங்கள், MP3 ஆடியோ, MPEG வீடியோ போன்றவை) கடத்துவது போன்ற காரணங்களால் மிகவும் வேறுபடக்கூடியதாக இருக்கிறது.[2] சில நிலைகளில் மோடமானது சுருக்கப்பட்ட கோப்புகளை 50 கிபிட்/வி என்ற வேகத்திலும், சுருக்கப்படாத கோப்புகளை 160 கிபிட்/வி மற்றும் வெற்று உரையை 320 கிபிட்/வி, அல்லது இதற்கு இடைப்பட்ட எந்தவொரு வேகத்திலும் அனுப்பக்கூடியதாக இருக்கிறது.[3]

அம்மாதிரியான சூழ்நிலைகளில், தரவானது சுருக்கப்பட்டு தொலைபேசி இணைப்பில் அனுப்பப்படும் வரை தரவை தக்க வைக்க மோடத்தில் ஒரு சிறிய நினைவகம், இடைநிலையானது பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இடைநிலையானது நிரம்பி வழியாமல் தடுப்பதற்காக, கணினியிடம் தரவு ஓட்டத்தை இடைநிறுத்தம் செய்யுமாறு கூறுவது சிலநேரங்களில் அவசியமாகிறது. இது மோடத்துக்கும் கணினிக்குமான இணைப்பில் கூடுதல் இணைப்பைச் சேர்த்து வன்பொருள் போக்கு கட்டுப்பாடு என்பதன் மூலம் செய்யப்படுகிறது. பின்னர், கணினியானது உயர்நிலையில் 320 கிபிட்/வி போன்ற வீதத்தில் கடத்துமாறு அமைக்கப்படுகிறது, மற்றும் கணினி தரவை எப்போது அனுப்ப வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்பதை மோடம் கணினிக்கு தெரிவிக்கும்.

ISP -ஆல் செய்யப்படும் சுருக்கம்

தொகு

56k மோடம்களைப் பயன்படுத்தும் தொலைபேசி இணைப்புகள் மதிப்பை இழக்கத் தொடங்கியபோது, சில நெட்ஜீரோ, ஜூனோ போன்ற இணைய சேவை வழங்குநர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், வெளியீட்டை அதிகமாக்கவும் முந்தைய நிலை சுருக்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். எடுத்துக்காட்டாக, நெட்ஸ்கேப் ISP -ஆனது, படங்கள், உரை மற்றும் பிற பொருள்களை தொலைபேசி இணைப்பின் வழியே அனுப்புவதற்கு முன்பு அவற்றைச் சுருக்க ஒரு சுருக்க நிரலைப் பயன்படுத்தினார்கள். V.44-இயக்கப்பட்ட மோடம்களில், சர்வர்-பக்கத்தில் நடைபெற்ற சுருக்கமானது, கடத்துதலின்போது செய்யப்பட்ட சுருக்கத்தை விடவும் அதிக பயனைத் தந்தது. பொதுவாக, வலைதள உரையானது 4% வரை சுருக்கப்பட்டது, இதனால் ஒட்டுமொத்த வெளியீடானது 1,300 கிபிட்/வி வரை அதிகரித்தது. இந்த ஆக்ஸிலரேட்டரானது, ஃப்ளாஷ் மற்றும் பிற இயக்க நிரல்களையும் முறையே கிட்டத்தட்ட 30% வரையிலும் 12%, வரையிலும் சுருக்கியது.

இந்த முறையின் ஒரே பின்னடைவு, தரத்தில் ஏற்படும் இழப்பாகும், இதில் படங்கள் மிகவும் அதிகமாக சுருக்கப்பட்டு சிதைவுற்று காணப்படுகிறது, ஆனால் வேகமானது ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு அதிகரித்தது, வலைப்பக்கங்கள் 5 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஏற்றப்பட்டன, மேலும் பயனர்கள் சுருக்கப்படாத படத்தைப் பார்ப்பதற்கு எந்த நேரத்திலும் தேர்ந்தெடுக்க முடியும். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்திய ISPகள் இதனை "வழக்கமான தொலைபேசி இணைப்புகளில் DSL வேகம்" என்றோ அல்லது "ஹை-ஸ்பீடு டயல்-அப்" என்றோ விளம்பரப்படுத்தினார்கள்.[சான்று தேவை]

டயல்அப் வேகங்களின் பட்டியல்

தொகு

தரப்பட்டுள்ள மதிப்புகள் அதிகபட்ச அளவைக் காட்டுகின்றன, மேலும் உண்மையான மதிப்புகள் சில சூழல்களில் குறைந்த வேகங்களில் இருக்கக்கூடும் (எடுத்துக்காட்டாக, இரைச்சல் மிகுந்த தொலைபேசி இணைப்புகள்).[4] முழுமையான பட்டியலுக்கு, சாதன பேண்ட்வித்களின் பட்டியல் என்ற துணை கட்டுரையைப் பார்க்கவும். பாட் == ஒரு விநாடிக்கு சிம்பல்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இணைப்பு பிட்ரேட் (கிபிட்/வி)
110 பாட் பெல் 101 மோடம் 0.1
300 பாட் (பெல் 103 அல்லது V.21) 0.3
1200 bps (600 பாட்) (பெட் 212A அல்லது V.22) 1.2
2400 bps (600 பாட்) (V.22bis) 2.4
2400 bps (1,200 பாட்) (V.26bis) 2.4
4800 bps (1,600 பாட்) (V.27ter) 4.8
9600 bps (2,400 பாட்) (V.32) 9.6
14.4 kbps (2,400 பாட்) (V.32bis) 14.4
28.8 kbps (3,200 பாட்) (V.34) 28.8
33.6 kbps (3,429 பாட்) (V.34) 33.6
56 kbps (8,000/3,429 பாட்) (V.90) 56.0/33.6
56 kbps (8,000/8,000 பாட்) (V.92) 56.0/48.0
பாண்டிங் மோடம் (இரண்டு 56k மோடம்கள்)) (V.92)[5] 112.0/96.0
வன்பொருள் சுருக்கம் (மாறக்கூடியது) (V.90/V.42bis) 56.0-220.0
வன்பொருள் சுருக்கம் (மாறக்கூடியது) (V.92/V.44) 56.0-320.0
சர்வர் பக்க வலை சுருக்க (மாறக்கூடியது) (நெட்ஸ்கேப் ISP) 100.0-1,000.0

ரேடியோ மோடம்கள்

தொகு

நேரடி ஒளிபரப்பு செயற்கைகோள், WiFi, மற்றும் மொபைல் ஃபோன்கள் போன்ற அனைத்துமே தொடர்பு கொள்வதற்கு மோடம்களைப் பயன்படுத்துகின்றன, அதேபோல இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வயர்லெஸ் சேவைகளும் கூட பயன்படுத்துகின்றன. நவீன தொலைத்தொடர்புகளும் தரவு நெட்வொர்க்குகளும், நீண்ட தூர தரவு இணைப்புகள் தேவைப்படும் நேரங்களில் ரேடியோ மோடம்களைப் பயன்படுத்துகின்றன. இந்த அமைப்புகள் PSTN -இன் ஒரு இன்றியமையாத பகுதிகளாகும், மேலும் கம்பியிழை இணைப்புகள் கட்டுப்படியாகாத தொலைதூரங்களில், இவை உயர்வேக கணினி நெட்வொர்க் இணைப்புகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

கேபிள் நிறுவப்பட்டுள்ள இடங்களிலும், ரேடியோ அதிர்வெண்களையும் மாடுலேஷன் நுட்பங்களையும் பயன்படுத்துவதால், சிறந்த செயல்திறன் அல்லது இணைப்பின் பிற பகுதிகள் எளிமையாகவும் இருக்கின்றன. ஓரச்சு கேபிள் போன்றவற்றில் மிக அதிக பேண்ட்வித் உள்ளது, ஆனாலும் டிஜிட்டல் சிக்னல் பயன்படுத்தப்பட்டால், உயர் தரவு வேகங்களில் சிக்னல் சிதைவடைவது பெரிய சிக்கலாக காணப்படுகிறது. ஒரு மோடத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக, ஒரே வயரைப் பயன்படுத்தி மிக அதிக டிஜிட்டல் தரவைப் பரிமாறிக்கொள்ள முடியும். டிஜிட்டல் கேபிள் தொலைக்காட்சி மற்றும் கேபிள் இணைய சேவைகள், அதிகப்படியான பேண்ட்வித்தைப் பெறுவதற்கு ரேடியோ அதிர்வெண்ணைப் பயன்படுத்துகின்றன, இதன் மூலமாக நவீன கால வீட்டுத்தேவைகளை சமாளிக்கின்றன. மோடமைப் பயன்படுத்துவதன் மூலமாக ஃப்ரீக்வென்சி-டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸும் பயன்படுத்தப்படுகிறது, இதனால் ஒரே நேரத்தில் பல பயனர்கள் ஒரே கம்பியைப் பயன்படுத்தி முழு டியூப்லக்ஸ் டிஜிட்டல் தகவல் தொடர்பு சாத்தியமாகிறது.

வயர்லெஸ் மோடம்கள் பலவகைகளில், பேண்ட்வித்களில் மற்றும் வேகங்களில் கிடைக்கின்றன. வயர்லெஸ் மோடம்கள் பெரும்பாலும் ஒளி ஊடுருவக்கூடியதாக அல்லது சிறந்த செயல்திறன் கொண்டதாக இருக்கின்றன. ஒரு கேரியர் அதிர்வெண்ணில் மாடுலேட் செய்யப்பட்ட தகவலைப் பயன்படுத்துவதால் வயர்லெஸ் தகவல்தொடர்பின் மூலமாக வெவ்வேறு அதிர்வெண்களில் ஒரே நேரத்தில் இயங்கும்படி கடத்த முடிகிறது.

ட்ரான்ஸ்பரன்ட் மோடம்கள் தொலைபேசி இணைப்பு மோடம்களைப் போன்றே இயங்குகின்றன. பொதுவாக, அவை அரை டியூப்லக்ஸ் ஆக உள்ளன, அதாவது அவற்றால் தரவை ஒரே நேரத்தில் அனுப்பவும் பெறவும் முடியாது. பொதுவாக இந்த ட்ரான்ஸ்பரன்ட் மோடம்கள் சரிசெய்தல் பயன்களுக்காக நிறுவப்படுகின்றன, அவை கம்பி இணைப்பின் மூலம் அணுக முடியாத வெவ்வேறு இருப்பிடங்களிலிருந்து சிறு அளவிலான தரவை எளிதாக சேகரிக்க அமைக்கப்படுகின்றன. பயன்பாட்டு நிறுவனங்களால் தரவு சேகரிப்புக்காக, ட்ரான்ஸ்பரன்ட் மோடம்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்மார்ட் மோடம்களில் ஒரு மீடியா ஆக்சஸ் கன்ட்ரோலர் காணப்படுகிறது, இது சீரற்ற தரவு ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதையும், சரியாக பெறப்படாதத் தரவைத் திருப்பி அனுப்பவும் செய்கிறது. ட்ரான்ஸ்பரன்ட் மோடம்களை விட அதிக பேண்ட்வித் ஸ்மார்ட் மோடம்களுக்கு தேவைப்படுகிறது, மேலும் அவை பொதுவாக அதிக தரவு வீதங்களை அடைகின்றன. IEEE 802.11 தரநிலையானது, உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படும் குறுகிய வரம்பு மாடுலேஷன் திட்டத்தை வரையறுத்துள்ளது.

WiFi மற்றும் WiMax

தொகு

வயர்லெஸ் தரவு மோடம்கள் WiFi மற்றும் WiMax தரநிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன, இவை மைக்ரோவேவ் அதிர்வெண்களில் இயங்குகிறது.

WiFi -ஆனது அதிகமாக லேப்டாப்களில் இணைய இணைப்புக்காக (வயர்லெஸ் ஆக்சஸ் பாயிண்ட்) மற்றும் வயர்லெஸ் அப்ளிகேஷன் ப்ரோட்டோகால் (WAP) போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

மொபைல் மோடம்கள் மற்றும் ரவுட்டர்கள்

தொகு

மொபைல் ஃபோன் இணைப்புகளை(GPRS, UMTS, HSPA, EVDO, WiMax, போன்றவற்றை) பயன்படுத்தும் மோடம்கள் செல்லுலர் மோடம்கள் என்று அழைக்கப்படுகின்றன. செல்லுலார் மோடம்களை ஒரு லேப்டாப்புக்குள்ளோ, சாதனத்துக்குள்ளோ பொதிக்க முடியும் அல்லது அதை வெளிப்புறத்தில் வைக்கவும் முடியும். வெளிப்புற செல்லுலார் மோடம்கள் என்பவை டேட்டாகார்டுகள் மற்றும் செல்லுலர் ரவுட்டர்கள் ஆகியவை ஆகும். டேட்டாகார்டு எனப்படுவது ஒரு PC கார்டு அல்லது எக்ஸ்பிரஸ்கார்டு ஆகும், இது ஒரு கணினியில் உள்ள PCMCIA/PC கார்டு/எக்ஸ்பிரஸ்கார்டு ஸ்லாட்டில் எளிதாக பொருந்துகிறது. செல்லுலர் மோடம் டேட்டாகார்டுகளில் சியர்ரா வயர்லெஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஏர்கார்டு என்பது பெரிதும் அறியப்பட்ட ஒரு பிராண்ட் ஆகும்.[சான்று தேவை] (பலர் எல்லா வகை மாடல்களையும், ஏர்கார்டுகள் என்றே குறிப்பிடுகின்றனர், ஆனால் அது உண்மையில் அது ஒரு ட்ரேட்மார்க் பெறப்பட்ட பிராண்ட் பெயராகும்.)[சான்று தேவை] தற்போது, USB செல்லுலார் மோடம்கள் வந்துவிட்டன, அவை PC கார்டு அல்லது எக்ஸ்பிரஸ்கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்துவதற்கு பதிலாக கணினியில் உள்ள ஒரு USB போர்ட்டைப் பயன்படுத்துகின்றன. ஒரு செல்லுலர் ரவுட்டரில் அதில் செருகத்தக்க ஒரு வெளிப்புற டேட்டாகார்டைக் (ஏர்கார்டு ) கொண்டிருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். பெரும்பாலான செல்லுலர் ரவுட்டர்கள் இவ்வகையான டேட்டாகார்டுகள் அல்லது USB மோடம்களை அனுமதிக்கின்றன, WAAV, Inc. CM3 மொபைல் பிராட்பேண்ட் செல்லுலர் ரவுட்டரைத் தவிர. செல்லுலர் ரவுட்டர்கள் என்பவை அப்படியே மோடம்கள் அல்ல, ஆனால் அவை மோடம்களைக் கொண்டிருக்கின்றன அல்லது மோடம்களை செருகுவதற்கு அனுமதிக்கின்றன. ஒரு செல்லுலர் மோடம் மற்றும் செல்லுலர் ரவுட்டருக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், செல்லுலர் ரவுட்டரானது பல நபர்கள் அதனுடன் இணைய அனுமதிக்கும் (ஏனெனில் அது ரவுட் செய்யும், பலநிலை இணைப்புகளை ஆதரிக்கவும் செய்யும்), ஆனால் மோடமானது ஒரே இணைப்பை மட்டும் அனுமதிக்கும்.

பெரும்பாலான உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம் செல்லுலார் மோடம்கள் ஒருங்கிணைந்த SIM கார்டுஹோல்டருடன் வெளிவருகின்றன (அதாவது., ஹுவாவெய் E220, சியர்ரா 881, போன்றவை.) CDMA (EVDO) வெளியீடுகளில் SIM கார்டுகள் இருப்பதில்லை, ஆனால் அவை அதற்கு பதிலாக எலக்ட்ரானிக் சீரியல் எண்ணைப் (ESN) பயன்படுத்துகின்றன.

செல்லுலார் மோடம்களைப் பயன்படுத்துவதற்கான செலவு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. சில கேரியர்கள் அளவற்ற தரவு பரிமாற்றங்களுக்கும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயிக்கின்றனர். சிலர் ஒரு மாதத்துக்கு பரிமாறப்படும் தரவின் அளவுகளை (அல்லது அதிகபட்ச வரம்புகளை) வைத்துள்ளனர். சில நாடுகளில் கடத்தப்படும் தரவின் அளவுக்கு ஏற்ப நிலையான விலையைக் கொண்டுள்ளனர்—அதாவது பதிவிறக்கப்படும் ஒரு மெகாபைட் அல்லது கிலோபைட் அளவு தரவுக்கு விலை; இம்மாதிரியான விலையானது இன்றைய உள்ளடக்கம் சார்ந்த உலகில் அதிக செலவு வைக்கக்கூடியது, இதனால்தான் பெரும்பாலான நபர்கள் இன்று நிலையான விலை திட்டங்களுக்கு மாறுகின்றனர்.

புதிய செல்லுலர் மோடம் தொழில்நுட்பங்களின் (UMTS, HSPA, EVDO, WiMax) வேகமான தரவு வீதங்களால் அவை பிராட்பேண்ட் செல்லுலர் மோடம்கள் என்றழைக்கப்படுகின்றன, மேலும் இவை பின்வரும் பிராட்பேண்ட் மோடம்களுடன் போட்டியிடுகின்றன.

பிராட்பேண்ட்

தொகு
 
டிஎஸ்எல் மோடம்

மிக சமீபத்திய கண்டுபிடிப்பான ADSL மோடம்கள், தொலைபேசியின் வாய்ஸ்பேண்ட் ஆடியோ அதிர்வெண்களால் கட்டுப்படுத்தப்படவில்லை. சில ADSL மோடம்கள் குறியாக்கப்பட்ட ஆர்தோகனல் அதிர்வெண் பிரிப்பு மாடுலேஷனை (DMT) பயன்படுத்துகின்றன.

கேபிள் மோடம்கள் பலவகையான ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்துகின்றன, ஆனால் அவை உண்மையில் RF தொலைக்காட்சி சேனல்களை கடத்த வடிவமைக்கப்பட்டன. ஒரே கேபிளில் இணைக்கப்பட்ட பல கேபிள் மோடம்கள், ஒரே அதிர்வெண் பேண்டைப் பயன்படுத்த முடியும், ஒரு கீழ் நிலை மீடியா ஆக்சஸ் நெறிமுறையானது அவை ஒரே சேனலில் ஒன்றாக பணிபுரிய அனுமதிக்கிறது. செல்லும் மற்றும் வரும் சிக்னல்கள் ஃப்ரீக்வென்சி டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸைப் பயன்படுத்தி தனித்தனியாக வைக்கப்படுகின்றன.

டபுள்வே சாட்டிலைட் மற்றும் பவர்லைன் போன்ற புதுவகையான ப்ராட்பேண்ட் மோடம்கள் தற்போது வரத்தொடங்கியுள்ளன.

பிராட்பேண்ட் மோடம்களும் மோடம்களாகவே வகைப்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் அவை டிஜிட்டல் தரவைக் கடத்த சிக்கலான வடிவங்களைப் பயன்படுத்துகின்றன. அவை வழக்கமான டயல்-அப் மோடம்களை விட பலமடங்கு மேம்பட்டவை, ஏனெனில் அவை நூற்றுக்கணக்கான சேனல்களை ஒரே நேரத்தில் மாடுலேட்/டிமாடுலேட் செய்கின்றன.

பல பிராட்பேண்ட் மோடம்கள் ரவுட்டரின் செயல்பாட்டையும் கொண்டுள்ளன (ஈத்தர்நெட் and WiFi போர்ட்களுடன்) இவற்றுடன் DHCP, NAT மற்றும் ஃபயர்வால் ஆகிய கூடுதல் அம்சங்களும் உள்ளன.

பிராட்பேண்ட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நெட்வொர்க்கிங் மற்றும் ரவுட்டர்கள் வாடிக்கையாளர்களிடம் அறிமுகமாகவில்லை. ஆனாலும், பலர் மோடம் என்பது ஒரு இணைய அணுகல் கருவி என்பதை டயல்-அப்பின் மூலம் அறிந்திருந்தனர். இந்த பிரபலத்தன்மையின் காரணமாக, நிறுவனங்கள் அவர்களின் பிராட்பேண்ட் மோடம் களை, அடாப்டர் அல்லது ட்ரான்ஸீவர் போன்று வேறு எந்த பெயர்களையும் கூறாமல் மோடம் என்றே விற்றனர்

பெரும்பாலான பிராட்பேண்ட் மோடம்களை ரவுட்டராக பயன்படுத்தும் முன்பு அவற்றை பிரிட்ஜ் பயன்முறையில் உள்ளமைக்க வேண்டும்.

வீட்டு நெட்வொர்க்கிங்

தொகு

இந்த நிலையில் மோடம் என்ற பெயர் பயன்படுத்தப்படா விட்டாலும், மோடம்களும் உயர்வேக வீட்டு நெட்வொர்க்கிங் பயன்பாடுகளில் பயன்படுத்தப்பட்டன, குறிப்பாக முன்பே உள்ள வீட்டு நெட்வொர்க்கிங்குகளில். இதற்கான எடுத்துக்காட்டு G.hn தரநிலையாகும், இது ITU-T -ஆல் உருவாக்கப்பட்டது, இது உயர்வேக (1 ஜிபிட்/வி வரை) லோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் முன்பே இருந்த வீட்டு வயரிங் (பவர் லைன்கள், தொலைபேசி லைன்கள் மற்றும் ஓரச்சு கேபிள்கள்) போன்றவற்றிலேயே வழங்கின. G.hn சாதனங்கள் ஆர்த்தோகனல் ப்ரீக்வன்சி டிவிஷன் மல்டிபிளக்ஸிங் (OFDM) ஐப் பயன்படுத்தி வயர்களில் டிஜிட்டல் சிக்னல்களை அனுப்புவதற்கு மாடுலேட் செய்கின்றன.

தொலைதூர விண்வெளி தகவல்தொடர்புகள்

தொகு

பெரும்பாலான தற்கால மோடம்கள் அவற்றின் மூலத்தை 1960 களில் பயன்படுத்தப்பட்ட தொலைதூர விண்வெளி தகவல்தொடர்பு முறைகளில் கொண்டிருந்தன.

தொலைதூர விண்வெளி தகவல்தொடர்பு மோடம்கள் மற்றும் லேண்ட்லைன் மோடம்கள் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள்

  • அதிக அளவிலான டாப்ளர் எதிர்ப்பு திறன் கொண்ட டிஜிட்டல் மாடுலேஷன் வடிவமைப்புகள் பயன்படுத்தப்பட்டன
  • அலைவடிவமைப்பில் சிக்கல்தன்மை குறைவாக இருந்தது, பெரும்பாலும் பைனரி பேஸ் ஷிஃப்ட் கீயிங் பயன்படுத்தப்பட்டது
  • பிழை திருத்தம் ஒவ்வொரு திட்டப்பணியிலும் வேறுபட்டிருந்தது, ஆனாலும் அது பெரும்பாலான லேண்ட்லைன் மோடம்களை விட வலுவானதாக இருந்தது.

குரல் மோடம்

தொகு

குரல் மோடம்கள் என்பவை, தொலைபேசி இணைப்பின் வழியாக குரலைப் பதிவு செய்து, இயக்கக்கூடிய சாதாரண மோடம்களே. அவை தொலைபேசி பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. குரல் மோடம்களைப் பற்றிய மேலும் விவரங்களை அறிய வாய்ஸ் மோடம் கமாண்ட் செட் என்ற தலைப்பைக் காணவும். இந்த வகை மோடம்கள், தனிப்பட்ட கிளை பரிமாற்ற அமைப்புகளுக்கு FXO கார்டுகளில் பயன்படுத்த முடியும் (V.92 உடன் ஒப்பிடுக).

பிரபலம்

தொகு

அமெரிக்காவில் டயல்-அப் இணைய அணுகலானது தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதை 2006 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு CEA ஆய்வு கண்டறிந்தது. 2000 -ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்த 74% வீடுகளில் டயல்-அப் இணைய இணைப்புகளே இருந்தன. அமெரிக்காவின் மக்கள்தொகை பரவலானது (ஒரு டயல்-அப் மோடம் பயனர்கள்) கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கடந்த 20 ஆண்டுகளில் பிரதிபலித்தது.

2003 -ஆம் ஆண்டில் டயல்-அப் மோடம்களின் பயன்பாடு 60% ஆக குறைந்தது, 2006 ஆம் ஆண்டில் 36% ஆக மாறியது. வாய்ஸ்பேண்ட் மோடம்கள் ஒருகாலத்தில் அமெரிக்காவில் பிரபலமான இணைய அணுகல் முறையாக இருந்துவந்தது, ஏராளமான புதிய வழிகளில் இணைய அணுகல் சாத்தியமானதால், பாரம்பரியமான 56K மோடம் அதன் பிரபலத்தன்மையை இழந்து வருகிறது.

மேலும் பார்க்க

தொகு
  • சீரியல் டேட்டா கம்யூனிகேஷன்ஸ் ப்ரோகிராமிங் விக்கிபுக்கின் ஹேய்ஸ்-கம்பாட்டபிள் மோடம்ஸ் அண்ட் ஏடி கமாண்ட்ஸ் என்ற தலைப்பு
  • 56 கிபிட்/வி லைன்
  • தானியங்கு சரிபார்த்தல் (அல்லது ஹேண்ட்ஷேக் )
  • BBN டெக்னாலஜீஸ் (1963 -இல் முதல் மாடலை உருவாக்கியது)
  • பிராட்பேண்ட்: சாட்டிலைட் மோடம், ADSL, கேபிள்மோடம், PLC.
  • கட்டளை மற்றும் தரவு பயன்முறைகள் (மோடம்)
  • சாதன இயக்குநிரல்
  • DHCP
  • ஈத்தர்நெட்
  • INF கோப்பு
  • டிசிபி/ஐபி
  • ITU V-சீரீஸ் V.92 உடன், தொலைபேசி நெட்வொர்க் மோடம் தரநிலைகள்
  • K56flex
  • மாடுலேஷன் (முழுமையான மாடுலேஷன் தொழில்நுட்பங்களின் பட்டியல்)
  • ப்ளக்-அண்ட்-ப்ளே
  • RJ-11
  • வேக்-அப் ஆன் ரிங் (WOR)
  • X2 (சிப்செட்)
  • ஜீரோகான்ஃப்

குறிப்புதவிகள்

தொகு
  1. IEEE History Center. "Gottfried Ungerboeck Oral History". பார்க்கப்பட்ட நாள் 2008-02-10.
  2. "மோடம் சுருக்கம்: V.44 க்கு எதிராக V.42bis". Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-28.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-01-04. பார்க்கப்பட்ட நாள் 2010-01-28.
  4. தொலைபேசி நெட்வொர்க்கின் வழியாக தரவு பரிமாற்றம்
  5. "மோடம்களை இணைத்தல் பற்றி". Archived from the original on 1997-12-10. பார்க்கப்பட்ட நாள் 2010-01-28.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Modems
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


தரநிலை அமைப்புகள் மற்றும் மோடம் நெறிமுறைகள்

தொகு

பொதுவான மோடம் தகவல் (இயக்குநிரல்கள், சிப்செட்கள் போன்றவை.)

தொகு

மற்றவை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணக்கி&oldid=3931724" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Done 2
jung 1
jung 1
Story 2