உருகுவை
உருகுவை அல்லது உருகுவே[1] (Uruguay) தென் அமெரிக்க நாடாகும். இது வடக்கே பிரேசிலுடனும் கிழக்கே அர்ஜென்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா (Rio de la Plata) என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. மக்கள்த்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தலைநகர் மொண்டிவிடியோவில் வசிக்கின்றனர். தென்னமெரிக்கக் கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு(மிகச்சிறிய நாடு சுரினாம்). உருகுவை அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் நிலையாக இருக்கிறது.
உருகுவை கிழக்கு குடியரசு República Oriental del Uruguay | |
---|---|
குறிக்கோள்: Libertad o Muerte (விடுதலை அல்லது மரணம்) | |
நாட்டுப்பண்: நாட்டு வணக்கம் | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | மொண்டிவிடியோ |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானா 2 |
அரசாங்கம் | சனநாயக குடியரசு |
• அதிபர் | தாபரே வசுகுயிச்யிசு |
விடுதலை | |
• பிரகடனம் | ஆகஸ்டு 25, 1825 |
• அங்கீகாரம் | ஆகஸ்டு 28, 1828 |
பரப்பு | |
• மொத்தம் | 175,016 km2 (67,574 sq mi) (90வது) |
• நீர் (%) | 1.5 |
மக்கள் தொகை | |
• யூலை 2005 மதிப்பிடு | 3,463,000 (130வது 1) |
• 2002 கணக்கெடுப்பு | 3,399,237 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $34.305 பில்லியன் (90வதுh) |
• தலைவிகிதம் | $10,028 (65வது) |
மமேசு (2003) | 0.840 அதியுயர் · 46வது |
நாணயம் | உருகுவை பீசோ (UYU) |
நேர வலயம் | ஒ.அ.நே-3 |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே-2 |
அழைப்புக்குறி | 598 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | UY |
இணையக் குறி | .uy |
1.) நிலை 2005 தகவல் அடிப்படையிலாகும் 2.) Close to the border with Brazil, people speak a dialect known as Portuñol or Portunhol, a mixture of both Spanish and Portuguese. |
வரலாறு
தொகுஉருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான குரானி என்பதில் இருந்து வந்தது. இதற்கு 'பறவைகளின் ஆறு' (river of the painted birds) என்று பொருள்.
16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன. காலப்போக்கில் உருகுவே ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. 'பொய்னஸ் ஏரிஸ்' (Buenos Aires) வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ இராணுவ (படை) மையமாகவும் செயல்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருகுவே உட்பட தென் அமெரிக்கா முழுதும் விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன. பின்னர் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் அர்கெந்தீனா என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. Provincia Cisplatina என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25,1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் 'மாண்டிவிடியோ உடன்படிக்கை' யின் மூலம் 1828-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது.
பழங்குடி இனமான 'சருவா' காலப்போக்கில் அழிந்துவருகிறது, ஏப்ரல் 11, 1831 அன்று சல்சிபுதிஸ்(Salsipuedes) என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர். உருகுவையின் முதல் அதிபரான ஜெனரல் புரக்டோசா ரிவேரா(General Fructuoso Rivera) முன்னிலையில் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியது. அதன் பின்னர் சருவா இன மக்கள் உருகுவேயிலிருந்து வெளியேறினர். 1833-ஆம் ஆண்டு நான்கு சருவா இனத் தலைவர்கள் - செனாக்யு (Senaque), வைமெக்க பிரு (Vaimaca Piru), தகுபே (Tacuabe) மற்றும் அவர் மனைவி குய்னூசா (Guyunusa) ஆகியோர் பாரீசுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒரு கேளிக்கை அரங்கில் காட்சிப் பொருளாக நிற்க வைக்கப்பட்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பராகுவேக்கு எதிரான போரில் உருகுவை பங்கெடுத்தது.
விளையாட்டுக்கள்
தொகுஇங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும். பிரித்தானிய தீவுகளுக்கு வெளியே முதல் பன்னாட்டுப் போட்டி உருகுவே மற்றும் அர்ஜென்டினா நாடுகளுக்கிடையே மான்டிவீடியோவில் 1902 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்றது.[2] உருகுவே 1924 ஆம் ஆண்டில் பாரிசு ஒலிம்பிக் போட்டியிலும்,[3] மீண்டும் 1928 ஆம் ஆண்டு ஆம்சுடர்டாமிலும் தங்கம் வென்றது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ /ˈjʊɹ.ə.ɡwaɪ/, /ˈʊɹ.ə.ɡweɪ/
- ↑ Pelayes, Héctor Darío (24 September 2010). "ARGENTINA-URUGUAY Matches 1902–2009". RSSSF. Archived from the original on 5 January 2019. பார்க்கப்பட்ட நாள் 27 April 2011.
- ↑ "Paris, 1924". FIFA. Archived from the original on 15 June 2010. பார்க்கப்பட்ட நாள் 27 April 2011.
- ↑ "Amsterdam, 1928". FIFA. Archived from the original on 15 June 2010. பார்க்கப்பட்ட நாள் 27 April 2011.
மேலும் வாசிக்க
தொகு- Andrew, G. R. (2010). Blackness in the White Nation: A History of Afro-Uruguay, The University of North Carolina Press
- Behnke, A. (2009). Uruguay in Pictures, Twenty First Century Books
- Box, B. (2011). Footprint Focus: Uruguay, Footprint Travel Guides
- Burford, T. (2010). Bradt Travel Guide: Uruguay, Bradt Travel Guides
- Canel, E. (2010). Barrio Democracy in Latin America: Participatory Decentralization and Community Activism in Montevideo, The Pennsylvania State University Press
- Clark, G. (2008). Custom Guide: Uruguay, Lonely Planet
- Jawad, H. (2009). Four Weeks in Montevideo: The Story of World Cup 1930, Seventeen Media
- Lessa, F. and Druliolle, V. (eds.) (2011). The Memory of State Terrorism in the Southern Cone: Argentina, Chile, and Uruguay, Palgrave Macmillan
- Mool, M (2009). Budget Guide: Buenos Aires and Montevideo, Cybertours-X Verlag
புற இணைப்புகள்
தொகு- உருகுவை அரசு வலைவாசல் பரணிடப்பட்டது 2011-08-09 at the வந்தவழி இயந்திரம்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Uruguay. The World Factbook. Central Intelligence Agency.
- Uruguay from UCB Libraries GovPubs
- உருகுவை குர்லியில்
- Uruguay profile from the BBC News
- "Uruguay". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 27. (1911).
- Wikimedia Atlas of Uruguay
- யூடியூபில் Simplemente Uruguay
- Development Forecasts
- World Bank Summary Trade Statistics Uruguay