உலூனா 20 Luna 20 என்பது வெற்றிகரமான மூன்று சோவியத் நிலாப் பதக்கூறு கொணரும் பயணங்களில் இரண்டாவது ஆகும். இது உலூனாத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆறு வெற்றிகரமான அப்பல்லோ நிலாப் பதக்கூறு கொணரும் பயணங்களுக்கு தன்னியக்கவகைப் (எந்திரன்வகைப்) போட்டி விண்கலமாகப் பறக்கவிடப்பட்டது.

உலூனா 20 ஒரு இடைநிலை புவித் தங்கல் வட்டணையில் வைக்கப்பட்டு அதில் இருந்து நிலாவை நோக்கிச் செலுத்தப்பட்டது. இது 1972 பிப்ரவரி 18 அன்று நிலா வட்டணையில் நுழைந்தது. 1972 பிப்ரவரி 21 அன்று உலூனா 20 முன்பு நிலாவில் தரையிறங்கிய இடத்திலிருந்து 120 கி. மீ. தொலைவில் உள்ள மரே ஃபெக்குண்டிட்டீடிசுக்கு அருகே தெரா அப்பல்லோனியசு (அல்லது அப்பல்லோனியசு மலைப்பகுதிகள்) எனும் மலைப்பகுதியில் நிலாவில் தரை இறங்கியது.

நிலா மேற்பரப்பில் இருக்கும்போது , பரந்த தொலைக்காட்சி அமைப்பு இயக்கப்பட்டது. நீட்டிக்கக்கூடிய துளையிடும் கருவி வழியாக நிலாப் பதக்கூறுகள் பெறப்பட்டன. உலூனா 20 இன் ஏற்றக் கட்டம் 1972 பிப்ரவரி 22 அன்று நிலா மேற்பரப்பில் இருந்து 1.9 அவுன்சு (55 கிராம்) திரட்டிய நிலாப் பதக்கூறுகளை சீல் செய்யப்பட்ட பெட்டகத்தில் இட்டது.[1] இது 1972 பிப்ரவரி 25 அன்று சோவியத் ஒன்றியத்தில் தரையிறங்கியது. நிலாப் பதக்கூறுகள் அடுத்த நாள் மீட்கப்பட்டன.

திட்டக் கண்ணோட்டம்

தொகு
 
மண் பதுக்கூறு கரண்டி கொண்ட உலூனா பதக்கூறு திரும்பும் தரையிறங்கிப் படிமம் அல்லது ஏறுதல் கட்டம் என்பது புவிக் கோளகம் திரும்பும் சிறிய உருளைப் பெட்டகம் ஆகும்.

உலூனா 20 திரட்டிய 16 மண் பதக்கூறுகள் அமெரிக்க, பிரெஞ்சு அறிவியல் அறிஞருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 27 மற்றும் 32 செமீ ஆழத்திலிருந்து எடுத்த 0.4983 கிராம் பொருள் பதக்கூறு பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது.[2]

நிலாத் திட்டம் கொணர்ந்த பதக்கூறு ஆண்டு
சந்திரன் 16 101 கிராம்[3] 1970
சந்திரன் 20 30 கிராம்[3] 1972
சந்திரன் 24 170. 1 கிராம்[3] 1976

நாசா அதன் நிலாக் கண்காணிப்புச் சுற்றுகலன் நிலா மேற்பரப்பில் மார்ச் 2010 இல் உலூனா 20 கலத்தைக் கண்டறிந்ததாக அறிவித்தது.[4]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "In Depth | Luna 20". NASA Solar System Exploration. Archived from the original on 2022-11-05. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  2. Pillinger, Colin Trevor; Gowar, A.P (4 January 1977). "The separation and subdivision of two 0.5g samples of lunar soil collected by the Luna 16 and 20 missions". Philosophical Transactions of the Royal Society of London. Series A, Mathematical and Physical Sciences 284 (1319): 137–143. doi:10.1098/rsta.1977.0003. Bibcode: 1977RSPTA.284..137P. https://royalsocietypublishing.org/doi/10.1098/rsta.1977.0003. 
  3. 3.0 3.1 3.2 "NASA - NSSDC - Spacecraft - Details". nssdc.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 8 November 2015.
  4. "Luna-20 surface photos". Lunar Reconnaissance Orbiter Camera. பார்க்கப்பட்ட நாள் November 30, 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூனா_20&oldid=3785942" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES