ஒட்டாவா (Ottawa, /ˈɒtəwə/ (கேட்க) or /ˈɒtəwɑː/) கனடா நாட்டின் தலைநகரம் ஆகும். இதுவே நாட்டின் 4வது பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தெற்கு ஒண்டாரியோவின் கிழக்குப்பகுதியில் ஒட்டாவா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் எல்லையில் கியூபெக்கின் கெட்டினாவ் நகரம் அமைந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து ஒட்டாவா-கெட்டினாவ் பெருநகரப் பகுதியாகவும் தேசிய தலைநகர வலயமாகவும் விளங்குகின்றன.[6] 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 808,391 ஆகும்.

ஒட்டாவா
நகரம்
ஒட்டாவா நகரம்
Ville d'Ottawa
நாடாளுமன்றக் குன்றில் மைய வளாகம், ஒட்டாவா கீழ்நகரில் தேசிய போர் நினைவகம், கனடிய தேசிய காட்சியகம், ரிடொ கால்வாயும் லொரியர் கோட்டையும்.
நாடாளுமன்றக் குன்றில் மைய வளாகம், ஒட்டாவா கீழ்நகரில் தேசிய போர் நினைவகம், கனடிய தேசிய காட்சியகம், ரிடொ கால்வாயும் லொரியர் கோட்டையும்.
ஒட்டாவா-இன் கொடி
கொடி
ஒட்டாவா-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): பைடவுன்
குறிக்கோளுரை: "அட்வான்சு-ஒட்டாவா-ஆன் அவான்ட்"
இரு அலுவல் மொழிகளில் (ஒட்டாவா முன்னேறு)[1]
ஒன்ராறியோவில் ஒட்டாவாவின் அமைவிடம்
ஒன்ராறியோவில் ஒட்டாவாவின் அமைவிடம்
நாடு கனடா
மாகாணம் ஒன்றாரியோ
வலயம்தேசிய தலைநகர் வலயம்
நிறுவல்பைடவுனாக 1826[2]
இணைப்பு1 சனவரி 2001
அரசு
 • மேயர்ஜிம் வாட்சன்
 • நகர மன்றம்ஒட்டாவா நகர மன்றம்
 • நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உறுப்பினர் பட்டியல்
பரப்பளவு
 • நகரம்2,778.13 km2 (1,072.9 sq mi)
 • நகர்ப்புறம்
501.92 km2 (193.79 sq mi)
 • மாநகரம்
5,716.00 km2 (2,206.96 sq mi)
ஏற்றம்
70 m (230 ft)
மக்கள்தொகை
 (2011)[3][5]
 • நகரம்8,83,391 (4th)
 • அடர்த்தி316.6/km2 (820/sq mi)
 • நகர்ப்புறம்
9,33,596
 • நகர்ப்புற அடர்த்தி1,860.1/km2 (4,818/sq mi)
 • பெருநகர்
12,36,324 (4th)
 • பெருநகர் அடர்த்தி196.6/km2 (509/sq mi)
நேர வலயம்ஒசநே−5 (கிழக்கத்திய நேர வலயம்)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (ஈடிடி)
அஞ்சல் குறி வீச்சு
K0A, K1A-K4C[1]
இடக் குறியீடு(கள்)613, 343தொலைபேசிக் குறியீடு
இணையதளம்www.ottawa.ca

1826இல் பைடவுண் என நிறுவப்பட்டு பின்னர் 1855இல் "ஒட்டாவா"வாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஒட்டாவா கனடாவின் அரசியலுக்கும் தொழினுட்பத்திற்கும் மையமாக விளங்குகிறது. ஆரம்பத்திலிருந்த இதன் எல்லைகள் பல்வேறு சிறு இணைப்புகள் மூலமாக விரிவுபடுத்தப்பட்டு 2001இல் புதிய நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. "ஒட்டாவா" என்ற பெயர் உள்ளூர் மொழியில் அடவே என்பதிலிருந்து வந்துள்ளது; இதன் பொருள் "வணிகமாடல்" என்பதாகும்.[7]

துவக்கத்தில் அயர்லாந்திய, பிரான்சிய கிறித்தவர்களாலான குடியேற்றம் தற்போது பலவகை மக்கள் வாழும் பன்முக பண்பாடுடை நகரமாக விளங்குகிறது. கனடாவில் மிகவும் படித்தவர்கள் வாழும் நகரமாக ஒட்டாவா விளங்குகிறது. இங்கு பல உயர்நிலை கல்வி, ஆய்வு மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன. உயர்ந்த வாழ்க்கைத்தரமும் குறைந்த வேலையற்றோர் தொகையும் கொண்டதாக உள்ளது. வாழ்க்கைத்தரத்திற்கான மெர்செர் மதிப்பீட்டில் (221 நகரங்களில்) 14வது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள ரிடொ கால்வாய் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Art Montague (2008). "Ottawa Book of Everything" (PDF). MacIntyre Purcell Publishing. Archived from the original (PDF) on 26 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 Justin D. Edwards; Douglas Ivison (2005). Downtown Canada: Writing Canadian Cities. University of Toronto Press. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8020-8668-6.
  3. 3.0 3.1 "Population and dwelling counts, for Canada and census subdivisions (municipalities), 2006 and 2011 censuses — 100% data". Statistics Canada. பார்க்கப்பட்ட நாள் 10 February 2010.
  4. "Population and dwelling counts, for Canada, provinces and territories, and urban areas, 2006 and 2001 censuses – 100% data". Statistics Canada. 5 November 2008. பார்க்கப்பட்ட நாள் 23 September 2011.
  5. 5.0 5.1 "Population and dwelling counts, for census metropolitan areas, 2006 and 2011 censuses – 100% data". Statistics Canada. 5 November 2008. பார்க்கப்பட்ட நாள் 23 September 2011.
  6. "National Capital Act (R. S. C., 1985, c. N-4)" (PDF). Department of Justice. 22 June 2011. p. 13 SCHEDULE (Section 2) 'DESCRIPTION OF NATIONAL CAPITAL REGION'. பார்க்கப்பட்ட நாள் 8 July 2011.
  7. Alan Rayburn (2001). Naming Canada: Stories About Canadian Place Names. University of Toronto Press. p. 231. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8020-8293-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டாவா&oldid=3546885" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES