கங்காரு[1]
கீழைச் சாம்பல் நிற பெண் கங்காரு தன் குட்டியுடன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
பகுதியாக
இனம்

மேக்ரோபஸ் ரூஃபஸ்
மேக்ரோபஸ் ஜைஜான்டியஸ்
மேக்ரோபஸ் ஃபுலிஜினோஸஸ்
மேக்ரோபஸ் ஆன்டிலோபினஸ்

கங்காரு பாலூட்டிகளில் வயிற்றில் பை உள்ள இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகின்றன.

ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே விலங்கினம் கங்காருவாகும். இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப்பையினுள்ளே இருக்கின்றது.

கங்காருகள் அவற்றின் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் கங்காருகளின் அதிப்படியான மேய்ச்சலினால் ஏற்படும் புல்வெளிகளின் இழப்பைத் தடுப்பதற்காகவும் சுட்டுக்கொல்லப்படுகின்றன.[2] கங்காரு இறைச்சியி்ல் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதால் மனிதர்களுக்கு நல்லதாகக் கருதப்படுகின்றது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 64 & 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. "Kangaroo Industry Background Kangaroo Industries Association of Australia. July 2008". Kangaroo-industry.asn.au. 31 சூலை 1997. Archived from the original on 5 பெப்பிரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்பிரல் 2009.
  3. Dow, Steve (26 September 2007). "An industry that's under the gun". Sydney Morning Herald (Fairfax Media). http://www.smh.com.au/news/environment/an-industry-thats-under-the-gun/2007/09/25/1190486311919.html?page=fullpage. பார்த்த நாள்: 2 October 2011. 

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காரு&oldid=3846650" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Association 1