கடலியல் (Oceanography) என்பது புவியியலின் பிரிவுகளில் ஒன்று. இது கடல் தொடர்பான படிப்பு ஆகும். கடல்வாழ் உயிரினங்கள், சூழல் மண்டலம் பெருங்கடல் நீரோட்டம், கடலலை, தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு உட்பட்ட பல்வேறு பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம், அறிவியலின் பிற பிரிவுகளான வானியல், உயிரியல், வேதியியல், சூழலியல், புவியியல், நிலவியல், நீரியல், வானிலையியல், இயற்பியல் ஆகியவற்றுடனான தொடர்பை அறிய முடியும்.

தெர்மோலைன் சுழற்சி

வரலாறு

தொகு
 
வளைகுடா ஓடையின் வரைபடம் - பெஞ்சமின் பிராங்கிளின், 1769-1770

முற்கால வரலாறு

தொகு

பழங்காலந்தொட்டே மனிதர்கள் கடல் அலை, ஓதம், பெருங்கடல் ஆகியன குறித்தும் அறிந்துவைத்திருந்தனர். ஓதம் பற்றிய அவதானிப்புகளை, ஆய்வுகளை அரிசுட்டாட்டில், இசுட்ராபோ போன்ற அறிஞர்கள் பதிந்துவைத்தனர். நிலப்படவரைவியலின் (மேப்) காரணமாக, கடலைப் பற்றிய அறியத் தொடங்கினர். இது கடற்கரையை ஒட்டியவாறே இருந்தது. ஆழ்கடலுக்கு அவர்கள் சென்றிருக்கவில்லை. 1513 ஆம் ஆண்டில் ஜுவான் போன்சே டி லே என்ற அறிஞர், வளைகுடா ஓடையை கண்டறிந்தார். என்றபோதும், பெஞ்சமின் பிராங்கிளின் தான் இதுபற்றிய அறிவியல்பூர்வமாக ஆய்ந்து இப்பெயரை இட்டார். பின்னர், கடல்நீரின் வெப்பநிலைகளைக் கண்டறிந்து, ஓடையின் காரணத்தை சரியாக விளக்கினார். பிராங்கிளின், டிமோதி ஃபோல்கர் ஆகியோரே வளைகுடா ஓடையை முதன்முதலாக படமாக வரைந்தவர்கள்.1769-1770.[1][2]

 
அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் ஓடையின் திசை - வரைந்தவர் ஜேம்ஸ் ரென்னெள், 1799.

18 ஆம் நூற்றாண்டில், ஜேம்ஸ் குக், லூயி பௌகென்வில்லே ஆகியோர் பசிஃபிக் பெருங்கடலினைப் பற்றிய தகவல்களைத் திரட்டினர். அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல்களைப் பற்றிய கடலியல் ஆய்வு நூல்களை முதலில் எழுதியவர் ஜேம்ஸ் ரென்னெள் என்ற அறிஞரே. 1777 ஆம் ஆண்டில், நன்னம்பிக்கை முனையை சுற்றிச் சென்ற பயணத்தின்போது லகுலாசு ஆற்றின் கரைகளையும் திசைகளையும் கண்டறிந்தார். சில்லி தீவுகள் பகுதியைச் சுற்றியிருந்த அலைகளையும் திசைகளையும் அறிந்தவர் இவரே.[3]

சார்லஸ் டார்வின் என்ற அறிஞர், பவளப் படிப்பாறைகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு ஆய்விதழை வெளியிட்டார். ராபர்ட் ஃபிட்சுராய் என்பவர் பேகல் என்ற கப்பலில் மேற்கொண்ட ஆய்வினை நான்கு நூல்களில் வெளியிட்டார் . 1841–1842 காலகட்டத்தில், எட்வர்ட் ஃபோர்ப்ஸ் என்பார், ஏகன் கடல் பகுதியை ஆய்ந்தார். ஐக்கிய அமெரிக்க கடல் ஆய்வகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த [[மேத்யூ

போண்டேன் மௌரி, கடல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். ”பிசிக்கல் ஜியாக்கரஃபி ஆஃப் த சீ” என்ற இவரது நூல், தொடக்ககால கடலியல் நூல்களில் குறிப்பிடத்தக்கது.[4]

நவீன கடலியல்

தொகு

பிரிட்டன் அரச கடற்படையின் முயற்சியால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் இருந்து, பெருங்கடல் பற்றிய அதிக தகவல்கள் தெரியத் தொடங்கின.

 
எச். எம். எசு சாலஞ்சர் கப்பல், 1872 ஆம் ஆண்டில், முதன்முறையாக கடல் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது

சேலஞ்சர் ஆய்வுப் பயணத்தின் மூலம், கடல் ஆய்வுத் துறைக்கு அடிப்படைப் பயணமாக இருந்தது.[5] 1871 ஆம் ஆண்டில், லண்டனில் உள்ள ராயல் சொசைட்டிக்கு, கடல்களில் ஆய்வு மேற்கொள்ள உதவியது பிரிட்டன் அரசு.

1872-1876 ஆம் ஆண்டுகளில், இந்த உதவியைப் பெற்ற சார்லசு வைவில் தாம்சன், ஜான் முரே ஆகியோர் சேலஞ்சர் என்ற கப்பலில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர். பிரிட்டனின் அரச கடற்படையில் இருந்த கப்பலை வாங்கி, அதில் இயற்பியல், வேதியியல் ஆய்வகங்கள் அமைத்தனர்.[6]

தாம்சனின் மேற்பார்வையில், 70,000 கடல் மைல்கள் (130,000 km) தொலைவிற்கு அந்த கப்பல் பயணித்தது.[6] நீரின் வெப்பம், ஆழம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் திரட்டப்பட்டன.[7] மேலும், ஏறத்தாழ 4,700  புதிய வகை கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய தகவலும் கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, ”1873-1876 காலப்பகுதிக்குள் உட்பட்ட சேலஞ்சர் ஆய்வுப் பயணத்தின் போது கண்டறியப்பட்ட அறிவியல் முடிவுகள்” என்ற நூல் உருவானது. இதை மேற்பார்வையிட்ட ஜான் முரே, “நம் புவியினைப் பற்றி அதிக அளவு அறிந்த கொள்ள முடிந்த வாய்ப்பு” எனக் கூறுகிறார்.

இவர், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கடலியல் ஆய்வை மேற்கொண்டார். இருபதாம் நூற்றாண்டு வரை கடலியல் ஆய்வு குறித்த முதன்மையான கழகங்களில் இதுவும் ஒன்று.[8]. அட்லாண்டிக் கடற்பகுதியில் மண்வளத்தைப் பற்றி ஆய்ந்த முதல் நபரும் இவரே. கடல் நீரோட்டத்தை, உப்புத்தன்மை, வெப்பம் முதலியவற்றால் கண்டறிய முனைந்தார். பவளப் பாறைகளின் வளர்ச்சி குறித்தும் கண்டறிந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், மற்ற ஐரோப்பிய நாடுகளும் அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிக்கத் தொடங்கின. கடலியல் ஆய்வுக்கென்றே, ”அல்பாற்றசு” என்ற கப்பல் 1882 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1893 ஆம் ஆண்டில், ஃபிரீட்யோஃப் நான்சேன் என்ற அறிஞரின் கப்பல் ஆர்ட்டிக் கடல் பகுதியில் பனியால் உறைந்தது. இதன் விளைவாக, கடலியல் ஆய்வு, சூழலியல், வானியல் குறித்த பல்வேறு தகவல்களையும் திரட்டினார்.

 
பெருங்கடல் நீரோட்டம் (1911)

1907 - 1911 காலப்பகுதியில், ஓட்டோ கிரேயீல் என்ற அறிஞர் கடலியல் தொடர்பான நூலை வெளியிட்டார். இது பொதுமக்களையும் கடலியல் ஆய்விற்கு ஈர்க்கச் செய்தது.[9] 1910 ஆம் ஆண்டில், நான்கு மாதப் பயணமாக, ஜான் முரே, ஜோஹான் ஹியார்ட் ஆகியோர் வடக்கு அட்லாண்டிக் பகுதிக்குச் சென்றனர். அங்கு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, 1912 ஆம் ஆண்டு, “கடலின் ஆழம்” என்ற பெயரில் நூல் வெளியிட்டனர்.

ஒலியைக் கொண்டு கடல் ஆழத்தை கண்டறியும் பணி 1914 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1925 - 1927 ஆண்டுகளில், எதிரொலிக்கும் கருவியின் மூலம், 70,000 ஆழ அளவுகளில் கண்டறிந்தனர்.

1942, சுவெர்டிரப், பிளெமிங் ஆகியோர் “தி ஓசன்” என்ற நூலை பதிப்பித்தனர். இதைப் போன்றே, “தி சீ” என்ற மூன்று தொகுப்புகளைக் கொண்ட நூலினை, ஹில் என்பார் 1962 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 1966 ஆம் ஆண்டில், “கடலியலுக்கான கலைக்களஞ்சியம்” என்ற நூலை ரோட்சு பேர்பிரிட்சு வெளியிட்டார். 1950களில், அகஸ்தே பிக்கர்ட், டிரியெஸ்ட் என்ற படகினைப் பயன்படுத்தி, ஆழத்தை அறிந்தார்.

1970களில் இருந்து, கடலியல் ஆய்வுகளுக்கு அதிகளவிலான கணினிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றைக் கொண்டு, கடலின் சூழ்நிலை, வெப்பம் உட்பட்ட பல்வேறு காரணிகளைக் கணிக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

1990 ஆம் ஆண்டில் தொடங்கி 2002 வரை உலக கடல் ஆய்வு சோதனையின் மூலம, தரைவழி தகவல்கள் பல சேகரிக்கப்பட்டன.

அண்மைக் காலங்களில், கடல்நீர் அமிலம் ஆதல், கடலில் வெப்பம், பெருங்கடல் நீரோட்டம், எல் நீனோ-தெற்கத்திய அலைவு, கார்பன் சுழற்சி, கடற்கரையோர மண் அரிப்பு, வானிலையாலழிதல், புவி சூடாதல் உட்பட்டவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடலியல் துறை

தொகு

கடலியல் குறித்து கற்பதால, உலகத்தின் சுற்றுச்சூழல் குறித்த பல்வேறு தகவல்கள் திரட்டப்படுகின்றன. புவி வெப்பமயமாதல், வாழும் பகுதி ஆகியனவும் இதற்கு எடுத்துக்காட்டுகள். கடலியலுடன், புவியியல், வேதியியல், உயிரியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரிவுகள்

தொகு
 
தெற்கு அரைக்கோளத்தில்

கடலியலில் பிரிவுகள் உள்ளன.

  • உயிர்சார் கடலியல் : கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்களை, அவற்றின் சூழல்களைப் பற்றியது.
  • வேதிசார் கடலியல்: கடலில் நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றியது.
  • புவிசார் கடலியல்: புவிமட்டத்திற்கும் கடலுக்கு உண்டான தொடர்பு பற்றியது
  • இயல்புசார் கடலியல்: கடலின் இயல்புகளான அலை, வெப்பம், உப்புத்தன்மை, பெருங்கடல் நீரோட்டம், அலை ஆகியவற்றைப் பற்றியது.

ஆய்வகங்கள்

தொகு

கடல் ஆய்வுக்கான பன்னாட்டுக் குழு, 1902 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

மேலும் பார்க்கவும்

தொகு

தொடர்புடைய துறைகள்:

உள்தலைப்புகள்:

சான்றுகள்

தொகு
  1. 1785: Benjamin Franklin's 'Sundry Maritime Observations'
  2. Wilkinson, Jerry. History of the Gulf Stream January 01, 2008.
  3.    "Rennell, James". Dictionary of National Biography 48. (1896). London: Smith, Elder & Co. 
  4. Williams, Frances L. Matthew Fontaine Maury, Scientist of the Sea. (1969) ISBN 0-8135- 0433-3.
  5. Then and Now: The HMS Challenger Expedition and the 'Mountains in the Sea' Expedition, Ocean Explorer website (NOAA), accessed 01/02/2012
  6. 6.0 6.1 Rice, A.L. (1999). "The Challenger Expedition". Understanding the Oceans: Marine Science in the Wake of HMS Challenger. Routledge. pp. 27–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85728-705-9. {{cite book}}: line feed character in |title= at position 61 (help)
  7. Oceanography: an introduction to the marine environment (Peter K. Weyl, 1970), p.49
  8. "Sir John Murray (1841-1914) - Founder Of Modern Oceanography". Science and Engineering at The University of Edinburgh. பார்க்கப்பட்ட நாள் 07 November 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. Otto Kr୭el (1907). [Online Abstract Handbuch der Ozeanographie]. J. Engelhorn. Online Abstract. 

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கடலியல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலியல்&oldid=3947280" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Done 1
Story 1