கீழவை
கீழவை (lower house) என்பது ஈரவை சட்டவாக்க அவைகளைக் கொண்ட ஒரு நாட்டின் ஓர் அவையைக் குறிக்கும். மற்றையது மேலவை அல்லது செனட் சபை எனப்படும்.[1]
அதிகாரபூர்வமாக இது மேலவையின் கீழே அமைந்திருந்தாலும், பெரும்பாலான நாடுகளில் கீழவைகளே அதிக செல்வாக்கு மிகுந்த சட்டவாக்க அவையாக செயல்படுகின்றன.
ஓரவை மட்டுமே கொண்ட சட்டவாக்க அவை ஓரவை முறைமை கொண்ட நாடு எனப்படுகிறது.
பெரும்பாலான கீழவைகள் நாடாளுமன்ற அவை, பிரதிநிதிகள் அவை, அல்லது பொது அவை என அழைக்கப்படுகின்றன.
தனித்துவமான பெயர்கள்
தொகுசில நாடுகளில் கீழவைகள் தனித்துவமான பெயர்களால் அழைக்கப்படுகின்றன:
- மக்களவை (இந்தியா)
- டேவான் ராக்யாட் (மலேசியா)
- மாசிலீசு (கசக்ஸ்தான்)
- கீஸ் அவை (மாண் தீவு)
- செச்சிம் (போலந்து)
- அரச தூமா (உருசியா)
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bicameralism (1997) by George Tsebelis