குரோவ் (Kurów; ([ˈகுரூஃப்] (கேட்க))) தென் கிழக்கு போலந்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். 2,811 (2005 ஆம் ஆண்டில்) மக்கள் இங்கு வாழ்கின்றனர்.

Kurów
Village
Kurów-இன் சின்னம்
சின்னம்
Location of Kurów
ஆள்கூறுகள்: 51°23′23″N 22°11′10″E / 51.38972°N 22.18611°E / 51.38972; 22.18611
நாடு போலந்து
மாகாணம்லுப்லின்
கவுண்டிபுலாவி
மாநகரசபைகுரோவ்
உருவாக்கம்~ 12-ஆம் நூற்றாண்டு
நகர உரிமை1442–1870
பரப்பளவு
 • மொத்தம்11.33 km2 (4.37 sq mi)
ஏற்றம்
157 m (515 ft)
மக்கள்தொகை
 (31.12.2018)
 • மொத்தம்2,725
 • அடர்த்தி241/km2 (620/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல்
24-170
இடக் குறியீடு+48 81
வாகனக் குறியீடுLPU

வரலாறு

தொகு
 
போலந்தில் குரோவ் நகரம்

1431-1442 காலப்பகுதியில் இக்கிராமத்துக்கு நகரத்துக்கான உரிமை வழங்கப்பட்டது. அயல் நகரங்களில் இருந்து உணவு வணிகம் நடைபெறும் முக்கிய நகராக இருந்து வந்தது. பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இந்நகரத்தில் அமைந்திருந்தன. 16ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மத போதனைகளில் ஒன்றான கால்வினிசம் இங்கு பரவியிருந்தது. 1660களில் இக்கிராமத்தின் பலரும் ஆரியனிசத்தைப் ([1]) பின்பற்றினர்.

1795-இல் இந்நகரம் ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1815-இல் போலந்துடன் இணைக்கப்பட்டது. 1831 பெப்ரவரியில் இங்கு இடம்பெற்ற கிளர்ச்சியின் போது, யோசப் துவெர்னிக்கி தலைமையிலான போலந்துப் படையினர் உருசியர்களைத் தோற்கடித்தனர். 1870-இல் இந்நகரம் தனது நகர அந்தஸ்தை இழந்தது. இன்றும் அந்த அந்தஸ்தை மீளப் பெற முடியவில்லை.

1939 செப்டம்பர் 9 இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தில் இந்நகரம் செருமனியரின் பெரும் தாக்குதலுக்கு உள்ளானது. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் பலர் கொல்லப்பட்டனர்.

போலந்தின் முன்னாள் கம்யூனிசத் தலைவரும் அதிபருமான யாருசெல்ஸ்கி இக்கிராமத்தில் பிறந்தவர்.

அடிக்குறிப்பு

தொகு
  1. கி.பி. 4ஆம் நூற்றண்டில் எகிப்தில் வாழ்ந்த ஆரியுஸ் (Arius) என்னும் எகிப்திய மதகுருவின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோவ்&oldid=3396916" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES