செங்கல் (Brick) என்பது களிமண்ணை செவ்வக வடிவில் சூளையில் அல்லது வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செயற்கைக் கல்லாகும். கட்டிடங்களையும் நடைபாதைகளையும் அமைக்க செங்கல் பயன்படுகிறது.[1][2][3]

செங்கல் அடுக்கம்
செங்கற் சுவர்

வரலாறு

தொகு

கி.மு 7500 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலில் வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செங்கல் கற்களை மெசப டோமியாவில் (தற்போதைய ஈராக்) கி.மு 4000 - ம் வாக்கில் உருவம் பெற்றது.

செங்கல்லின் அளவு

தொகு

செங்கல்லின் நியம அளவு = 65mm x 102.5mm x 215mm செங்கல்லின் தோற்ற அளவு = 75mm x 112.5mm x 225mm (செங்கல்லின் தோற்ற அளவு என்பது சுவர் ஒன்றில் கட்டப்பட்ட பின்னரான அளவாகும்)

 
செங்கல் சூளை

மூலப்பொருட்கள்

தொகு

பொதுவாக, செங்கல் பின்வரும் மூலப்பொருட்களை கொண்டுள்ளது.

1. சிலிக்கா - எடையில் 50% முதல் 60% வரை
2. அலுமினா - எடையில் 20% முதல் 30% வரை
3. சுண்ணாம்பு - எடையில் 2% முதல் 5% வரை
4. இரும்பு ஆக்சைடு - எடையில் 5% முதல் 6% வரை
5. மக்னீசியம் - எடையில் 1% விட குறைவாக

செங்கல் உற்பத்தி செய்ய ஏற்ற களியின் பண்புகள்

தொகு

1.நுண்ணிய தன்மை

தொகு

பொருத்தமான களித் துணிக்கைகள் 0.075 mm அளவை விட குறைவாக இருக்க வேண்டும்.

2.மணல் கட்டமைப்பு

தொகு

களியுடன் இயற்கையாகவே சேர்ந்து இருக்கக்கூடிய மணலை இது குறிக்கும். களியுடன் சேர்ந்து இருக்கக் கூடிய மணல் 20%-30% ஆக காணப்பட வேண்டும்.

3.கழிவுப் பொருட்கள் அற்றிருத்தல்

தொகு

4.சிறு கற்கள் பரல் போன்றவை அற்றிருத்தல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Interlocking bricks & Compressed stablized earth bricks - CSEB". Buildup Nepal.
  2. "Bricks that interlock".
  3. W., Beamish, A. Donovan (1990). Village-level brickmaking. Vieweg. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-528-02051-2. இணையக் கணினி நூலக மைய எண் 472930436.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கல்&oldid=4099073" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Done 1