சோளி (choli) (இந்தி: चोली, உருது: چولی, குசராத்தி: ચોળી, மராத்தி: चोळी, நேபாளி: चोलो cholo) தென்னிந்தியாவில் (கன்னடம்: ರವಿಕೆ, தெலுங்கு: రవికె, தமிழ்: இரவிக்கை எனப்படும். வட இந்தியப் பெண்களின் மார்பை மறைக்கும் சோளி மேல் ஆடை, பொதுவாகக் குட்டையாக வெட்டப்பட்டு இருக்கும். இது இந்தியத் துணைகண்டத்தில் புடவையுடன் அணியப்படுகிறது. சோளி காக்ரா சோளி உடையின் ஒரு பகுதி ஆகும். வட இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பாலன்பூர் பகுதிகளில் சோளியை போல்கா என அழைப்பர்.

பெண்களின் மேலாடையான சோளி, ஆண்டு 1872.
சோளி வடிவங்கள்

சோளியின் பரிணாம வளர்ச்சி

தொகு
 
குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியின் சோளி
உத்தரப் பிரதேசத்தின் விரஜ பிரதேசத்தில் பெண்கள் சோளியின் பின்புறத்தை கழுத்தைச் சுற்றி கயிற்றால் கட்டியிருப்பர்.
 
பண்டைய முழுக்கை சோளி வடிவம்
 
சித்திரத்தையல்கள் கொண்ட கன்னடப் பெண்களின் சோளி, ஆண்டு 1855–1879

பெண்கள் அணியும் பண்டைய மார்புக் கச்சையிலிருந்து சோளியாக வடிவம் மாறியது.[1][2] கிமு முதல் ஆயிரமாவது ஆண்டுகளில் மகாராட்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் கண்டுபிடித்த ஓவியங்கள் மூலம் சோளியின் முதல் வடிவம் கிடைக்கப்பெற்றது.[1] மூன்றாம் சஙக கால இலக்கியமான (காலம்:கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 4ம் நூற்றாண்டு வரை) சிலப்பதிகாரம் காப்பியத்தில் பெண்கள் மேலாடைக்கும், கீழாடைக்கும் சேர்த்து ஒரே துணியைக் கொண்டு உடலை மூடியிருந்தனர்.[3]கிபி முதல் நூற்றாண்டில் சோளி பல பிரதேசங்களுக்கு உகந்தவாறு உருவாகியது என பண்டைய ஓவியங்களும், சிற்பங்களும் எடுத்துரைக்கிறது.[1] கிபி பனிரெண்டாம் நூற்றாண்டின் காஷ்மீர அறிஞரான கல்ஹானர் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமசுகிருத இலக்கியத்தில், சோளி எனும் பெண்கள் அணியும் மார்புக் கச்சையானது, தக்காணத்திலிருந்து காஷ்மீர அரசவை பெண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது எனக்குறித்துள்ளார்.[4]

துவக்க கால சோளிகள் மார்பை மூடியவாறும், முதுகுப் பக்கம் நூலால் கட்டப்பட்டிருக்கும். இவ்வகையான சோளிகள் தற்போதும் இராஜஸ்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் பெண்கள் அணிந்துள்ளனர்.[5] தமிழ்நாட்டின் இரவிக்கை பெண்களின் மார்பையும், முதுகையும் மறைத்திருக்கும் வகையில் வடிவமைத்திருப்பர். ஆனால் வட இந்தியாவில் சோளி மார்பை மறைந்திருப்பதுடன், முதுகுப் பக்கத்தில் நூலால் கட்டப்பட்டிருக்கும். இந்தி மொழி பேசும் பகுதிகளான அரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் பெண்கள் சோளி மீது கன்சிலி எனும் துணியை முகத்தை மறைக்க முக்காடாகப் போட்டுக் கொள்கின்றனர்.[6]

வரலாற்று ஓவியங்கள்

தொகு

புகைப்படங்கள்

தொகு

சோளியின் வடிவம் மாறும் காலங்கள்

தொகு
 
முதுகு திறந்த சோளி கட்டிய திரைப்பட நடிகை வித்யா பாலன்[7][8]

பாரம்பரியமாக, புடவையின் அதே துணியிலிருந்து சோளி தயாரிக்கப்படுகிறது. இதற்காக பல புடவை தயாரிப்பாளர்கள், புடவையின் நீளத்தை கூட்டுகிறார்கள். இதனால் பெண்கள் புடவையின் முடிவில் உள்ள அதிகப்படியான துணியை துண்டித்து, பொருத்தமான சோளியை தைக்க பயன்படுத்துகிறார்கள். சோளிக்கு பருத்தி சார்ந்த பொருட்கள் மற்றும் பட்டு ஆகியவை மிகவும் வசதியானதாக பரவலாகக் கருதப்படுகிறது.[9] சிஃப்பான் மற்றும் பட்டு முறையான சந்தர்ப்பங்களுக்கு மிகவும் பொருத்தமானவை.[10] வடிவமைப்பாளர்கள் சோளியை பரிசோதித்து, இந்திய துணைக்கண்டத்தில் நவீன கலாச்சார பாணியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.முதுகு இல்லாத சோளி அல்லது சரம் கொண்ட சோளிகள் தயாரித்து அசத்துகிறார்கள்.[8]

வடிவமைப்பாளரும் அழகியல் கடை உரிமையாளருமான அனுபமா ராஜ் கருத்து தெரிவிக்கையில், "சோளியை பலவிதமான ஆடைகளுடன் அணியக்கூடிய வகையில் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சோளியை இரவிக்கையின் சிதைந்த வடிவமாக நாம் பார்க்கிறோம். நாம் சோளியை மறுகட்டமைக்க வேண்டும்."வடிவமைப்பாளராக மாறிய ஏற்றுமதியாளரான பாபி மாலிக் கருத்து தெரிவிக்கையில், "பெண்களுக்காக உருவாக்கப்படும் அனைத்து ஆடைகளிலும் சோளி மிகவும் உணர்வு பூர்வமானது. இது பெண்மையின் தோற்றத்தைப் புகழ்வது மட்டுமல்லாமல், ஒரு பெண்ணின் காதல் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. இந்திய ஆடைவடிவமைப்பாளர்கள் சோளிக்கு சர்வதேச தோற்றத்தை கொடுத்து இன்னும் அழகாக்குகின்றனர்.[11]

சோளியின் தற்போதைய வடிவங்கள்

தொகு

பிரபல திரைப்படத்தில் சோளிப் பாட்டு

தொகு

சஞ்சய் தத், மாதுரி தீட்சித் நடித்து 1993ல் வெளியான கல் நாயக் எனும் இந்தி திரைப்படத்தில் சோளி கி பீச்சே கியா ஹை பாடப்பட்ட பாட்டு இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.[சான்று தேவை]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Prachya Pratibha, 1978 "Prachya Pratibha, Volume 6", p. 121
  2. Agam Kala Prakashan, 1991 "Costume, coiffure, and ornaments in the temple sculpture of northern Andhra", p. 118
  3. Linda Lynton, Sanjay K. Singh (2002) "The Sari: Styles, Patterns, History, Techniques.", p. 40
  4. Katiyar, Vijai Singh (2009). Indian saris : traditions, perspectives, design. New Delhi: Wisdom Tree in association with National Institute of Design, Ahmedabad. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183281225. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  5. Chander, Prakash (2003). India: past & present – Prakash Chander. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176484558. பார்க்கப்பட்ட நாள் 13 November 2011 – via Google Books.
  6. Bhandari, Vandana (2005). Costume, textiles and jewellery of India: traditions in Rajasthan. Mercury Books. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780811810845.
  7. Nimisha Tiwari (19 June 2011). "The choli lowdown!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 3 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103172821/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-19/trends/29493005_1_choli-saree-blouse. 
  8. 8.0 8.1 "Vidya Balan puts plunge cholis on fashion map". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. December 20, 2011 இம் மூலத்தில் இருந்து 2012-07-01 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120701175127/http://articles.timesofindia.indiatimes.com/2011-12-20/trends/30474361_1_cholis-corsets-neeta-lulla. 
  9. Sarkar, Neeti (June 26, 2010). "Choli ke peeche". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article485880.ece. 
  10. Singh, A. D. (March 10, 2012). "Summer breezers". தி டெக்கன் குரோனிக்கள் இம் மூலத்தில் இருந்து 17 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120317155257/http://www.deccanchronicle.com/channels/lifestyle/fashion/summer-breezers-695. 
  11. Roy, Sumona (August 31, 2002). "Deconstructing the choli into daring designs". The Tribune. http://www.tribuneindia.com/2002/20020831/windows/fashion.htm. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளி&oldid=3742679" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
design 3
Done 1
Story 1