நகர்படி (Escalator) என்பது, மக்களைக் கட்டிடங்களின் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு பொறிமுறையாகும். படி போன்ற அமைப்பைக் கொண்ட இதன் படிகள் மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கித் தொடர்ச்சியாக நகருமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வழமையான படிக்கட்டுகளிற் போல மக்கள் அதன்மீது ஏற வேண்டியதில்லை. படிகளே நகர்ந்து அவர்களைச் செல்ல வேண்டிய இடத்துக்குத் தோக்கிச் செல்கின்றன. இயங்கிக் கொண்டிருக்கும் உலோகப் பட்டிகள் மீது பொருத்தப்பட்டுள்ள இப் படிகள் எப்பொழுதும் கிடை மட்டமாகவே இருக்கும். இதனால் மக்கள் இதன் மீது நின்று கொண்டு மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கிச் செல்ல முடியும்.

இலண்டனில் கனரி வார்ஃப் (Canary Wharf) இலுள்ள நகர்படிகள்.

நகர்படிகள் உயர்த்திகளைப் போல் வேகமாகச் செல்வதில்லை ஆயினும், உயர்த்திகளைவிடக் கூடிய அளவில் மக்களை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்ல வல்லவை. அத்துடன், உயர்த்திகளுக்காகக் காத்திருப்பதுபோல் இவற்றுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.[1][2][3]

பரவமைப்பு (Lay-out)

தொகு

நகர்படிகள் பொதுவாகக் கட்டிடங்களின் நிலத்தளத்துக்கு அண்மையிலுள்ள சில தளங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களுக்காகவே அமைக்கப்படுகின்றன. பொதுவாக நகர்படிகள் இணைகளாகவே அமைக்கப்படுகின்றன. இவற்றுள் ஒன்று தொடர்ச்சியாக மேல் நோக்கியும், மற்றது கீழ் நோக்கியும் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனாலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு அமைவதில்லை. பெரிய அங்காடித் தொகுதிக் கட்டிடங்களில், விற்பனைக்கு இருப்பவற்றை மக்கள் பார்ப்பதற்கான வாய்ப்புக்களைக் கூட்டுவதற்காக, ஏறுவதற்கும் இறங்குவதற்குமான நகர்படிகளை அருகருகே அமைக்காமல் ஒன்றுக்கொன்று தொலைவில் இருக்குமாறு அமைப்பதுண்டு.

வடிவமைப்பு

தொகு
 
பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள நகர்படி,சென்னை,இந்தியா

வழமையான படிக்கட்டுகளில் இருப்பதுபோல் நகர்படிகளில், இடையில் படிமேடைகள் இருப்பதில்லை. படிகள் தொடர்ச்சியாகவே ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளம் வரை செல்கின்றன. பெரும்பாலான நகர்படிகள் நேரானவை. ஆயினும், சில இடங்களில் வளைவான நகர்படிகளும் உள்ளன. இவற்றில் படிகள் மட்டுமன்றிப் பக்கங்களிலுள்ள தடுப்புகளுக்கு மேல் அமையும் பற்றுக்கோடுகளும் (Hand Rail) நகரும்படி அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர்படி&oldid=4099790" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
languages 1