நைலான் 66

நைலான் பலபடி மற்றும் செயற்கை இழை

நைலான் 66 (Nylon 66, நைலான் 6-6, நைலான் 6/6, அல்லது நைலான் 6,6) என்பது ஒரு வகையான பாலியமைடு ஆகும். நைலான்கள் பல வகைகளில் காணப்பட்டாலும், துணி மற்றும் நெகிழித் துறைகளில் பயன்படும் இரண்டு வகை நைலான்களில் நைலான் 6 மற்றும் நைலான் 66 ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படுபவை ஆகும். நைலான் 6,6 1935 பெப்பிரவரி 28 இல் வாலசு கரோத்தர்சு என்னும் அமெரிக்க வேதியியலாளரால் உருவாக்கப்பட்டது.[1][2] இது எக்சாமெதிலீன் டை அமீன் மற்றும் அடிபிக் அமிலம் ஆகிய இரண்டு மூலக்கூறுகள் சோ்ந்த சோ்மம் ஆகும். இந்த இரண்டு மூலக்கூறுகளுமே தங்களில் 6 கார்பன் அணுக்களைக் கொண்டவை. இதன் காரணமாகவே இந்த நைலான் வகையானது, நைலான் 6,6 என அழைக்கப்படுகிறது.[3]

நைலான் 66
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாலி[இமினோல்(1,6-டையாக்சோயெக்சாமெத்திலீன்) இமினோயெக்சாமெத்திலீன்]
வேறு பெயர்கள்
பாலி(எக்சாமெத்திலீன் அடிப்பமைடு), பாலி (என்,என்'-எக்சாமெத்திலீன் அடிப்பீன்டையமைடு), மரனைல், அல்ட்ராமிட், சைட்டைல், அக்ரோமிட், டியூரெதான், பிரையனைல், வைடைன்
இனங்காட்டிகள்
32131-17-2
ChemSpider none
பப்கெம் 3032893
பண்புகள்
(C12H22N2O2)n
அடர்த்தி 1.314 கி/மில்லி (சைட்டெல்)
உருகுநிலை 507 °F (264 °C)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு முறை

தொகு
 

எக்சாமெதிலீன் டை அமீன் மற்றும் அடிப்பிக் அமிலம் ஆகியவை பல்படியை உருவாக்கும் ஒரு குறுக்க வினையில் ஈடுபட்டு நைலான் 66 கிடைக்கிறது.[3]

பயன்பாடுகள்

தொகு

2011 ஆம் ஆண்டில் உலக அளவில் நைலான் 66 ஆனது 2 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டது. அந்த கால கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டவற்றில் பாதிக்கு மேல் செயற்கை இழைகளும் மீதமுள்ளவற்றை பொறியியல் சார்ந்த ரெசின்களும் இடம் பிடித்தன. மிக அதிக அளவு வலிமை, உறுதித்தன்மை, வெப்பம் மற்றும் வேதிப்பொருட்களுக்கு எதிரான நிலைப்புத்தன்மை ஆகியவை தேவைப்படம் இடங்களில் நைலான் 66 பயன்படுத்தப்படுகிறது. துணிகள் நெய்வதிலும், உறைகள், துாாிகைகள் தயாாிப்பதிலும், நைலான் பயன்படுகிறது. சுருங்கிய நைலான் இழைகள் மீள் தன்மையுடைய பட்டைகள் (எலாஸ்டிக்) தயாாிக்கவும் பயன்படுகிறது.

வேதியியல்

தொகு

நைலான்கள் குறுக்க வினையினால் கிடைக்கப்பெற்ற இணை பலபடியாகும். இவை சம பங்குள்ள அமீன் மற்றும் காா்பாக்சிலிக் அமிலம் ஆகிய இரண்டு வினைசெயல் தொகுதிகளைக் கொண்ட ஒற்றைப்படிகள் வினைபுரிவதால் கிடைக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. American Chemical Society National Historic Chemical Landmarks. "Foundations of Polymer Science: Wallace Carothers and the Development of Nylon". ACS Chemistry for Life. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2015.
  2. "Wallace Hume Carothers". Chemical Heritage Foundation. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2016.
  3. 3.0 3.1 வேதியியல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தொகுதி 2. தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம், சென்னை. 2007. p. 407.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைலான்_66&oldid=3922039" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES