பட்டாயா [a] என்பது கிழக்கு தாய்லாந்தில் உள்ள ஒரு நகரமாகும். இது சோன்புரி மாகாணத்தில் இரண்டாவது பெரிய நகரமும் தாய்லாந்தின் எட்டாவது பெரிய நகரமுமாகும். இது தாய்லாந்து வளைகுடாவின் கிழக்கு கடற்கரையில், பேங்காக்கின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர்கள் (62 mi) தொலைவில் உள்ளது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி இங்கு 328,961 பேர் வசிக்கின்றனர். [2]

Pattaya
พัทยา
பட்டாயா மாநகரம்
เมืองพัทยา
இடமிருந்து: பட்டாயா பனோரமா, நோங் நூச் கார்டன், பட்டாயாவில் சூரியன் மறைவு, பட்டாயா பறவை நோக்கில், சத்தியத்தின் சரணாலயம், வாக்கிங் ஸ்ட்ரீட்.
அலுவல் சின்னம் Pattaya
சின்னம்
Map
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Thailand Bay of Bangkok" does not exist.
ஆள்கூறுகள்: 12°56′09″N 100°53′20″E / 12.9357°N 100.889°E / 12.9357; 100.889
நாடுதாய்லாந்து
மாகாணம்சோன்புரி
மாவட்டம்பேங் லாமுங்
சுயநிர்வாக நகராட்சி29 நவம்பர் 1978
அரசு
 • வகைசிறப்பு ஆளுகை மாநகரம்
பரப்பளவு
 • Special governed city53.4 km2 (20.6 sq mi)
 • நகர்ப்புறம்
727 km2 (281 sq mi)
 • பரப்பளவு தரவரிசை8th
மக்கள்தொகை
 (2019)[1]
 • Special governed city1,19,532
(Registered residents)
 • தரவரிசை10th
 • அடர்த்தி2,238/km2 (5,800/sq mi)
 • நகர்ப்புறம்
3,28,961
 • பெருநகர்
(Pattaya-Chonburi Metropolitan Area – Conurbation)
9,99,092
நேர வலயம்ஒசநே+7 (ICT)
அஞ்சல் குறியீட்டு எண்
20150
தொலைபேசி குறியீடு038
ISO 3166-2TH-S
இணையதளம்www.pattaya.go.th

பட்டாயா மாநகரமானது பாங் லாமுங் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு உள்ளாட்சி அமைப்பு பகுதியாக, 119,532 மக்கள்தொகை கொண்டதாக உள்ளது. இது நோங் ப்ரூ மற்றும் நா க்ளூவா மற்றும் ஹுவாய் யாய் மற்றும் நோங் பிளா லையின் சில பகுதிகளை உள்ளடக்கியது.

பட்டாயாவானது பட்டாயா-சோன்புரி பெருநகரப் பகுதியின் மையத்தில் உள்ளது (1,000,000 மக்கள்தொகை கொண்ட சோன்புரி மாகாணத்தில் உள்ள நகரம் ), இது தாய்லாந்தின் மூன்றாவது பெரிய பெருநகரப் பகுதியாகும்.

வரலாறு

தொகு

பெயர்

தொகு

பட்டாயாவின் பெயர், அயுத்தாயாவிலிருந்து சந்தாபுரி நோக்கிய ஃப்ராயா தக் (பின்னர் அரசர் தக்சின்) மற்றும் அவரது இராணுவத்தினரின் அணிவகுப்பிலிருந்து உருவானது. இது 1767இல் பர்மியர்களின் முன்னாள் தலைநகரின் வீழ்ச்சிக்கும் முன்னர் நிகழ்ந்தது. அவரது படைகள் பட்டாயா என்று தற்போது அறியப்படும் பகுதிக்கு வந்தபோது, அவர் தன் வழியில் குறுக்கிட முயற்சித்த நை க்ளோமின் படைகளை எதிர்கொண்டார். இரு தலைவர்களும் நேருக்குநேராகப் போரிட்ட போது நை க்ளோம், ஃப்ராயாவின் கண்ணியமான நடவடிக்கையையும் அவரது படையினரின் கண்டிப்பான ஒழுக்கத்தையும் கண்டு வியந்தார். பின்னர் அவர் போரிடாமல் சரணடைந்தார். பின்னர் ஃபிரேயா தக் தனது படைகளுடன் அவரை சேர்ந்துக்கொண்டார்.

படைகள் ஒன்றையொன்று எதிர்கொண்ட இடம் அதன் பிறகு "தப் பிரேயா" என்று அழைக்கப்பட்டது, அதாவது "பிரேயாவின் இராணுவம்". [3] தப் பிரயா பின்னர் பட்டாயா என மாற்றப்பட்டது, அதாவது 'மழைக்காலத்தின் தொடக்கத்தில் தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி வீசும் காற்று' என்பதாகும். [4]

வளர்ச்சி

தொகு
 
1964 இல் பட்டாயா கடற்கரை
 
பட்டாயா கடற்கரையில் யுஎஸ்.எஸ் நியூ ஜெர்சியின் கப்பல் குழு உறுப்பினர், 1987

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, தொழிலதிபர் பர்னியா சாவலிதம்ரோங் பட்டாயாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உணர்ந்தார். மேலும் அரசு நிர்வாகத்திற்கு சிறிது நிலத்தை வழங்கினார். பட்டாயா நகர மண்டபம் பின்னர் இந்த நிலத்தில் கட்டப்பட்டது. [5]

1960கள் வரை பட்டாயா ஒரு மீன்பிடி கிராமமாகவே இருந்ததுவந்தது. ஆனால் வியட்நாம் போரின் போது, அமெரிக்கப் படைவீரர்கள் (ஓய்வு மற்றும் மனமகிழ்ச்சி) வரத் தொடங்கியபோது, சுற்றுலா தொடங்கியது. 29 யூன் 1959 அன்று கோராட்டில் உள்ள ஒரு தளத்திலிருந்து வந்த ஒரு பெரிய படைவீரர்கள் குழு, கடற்கரையின் தெற்கு முனையில் உள்ள ஃபிரேயா சன்தார்னிலிருந்து வீடுகளை வாடகைக்கு எடுத்தது. அன்று முதல் பட்டாயா மிகவும் பிரபலமான கடற்கரை சுற்றுலாத் தலமாக உராவாகத் தொடங்கியது. [6] [7]

1978, நவம்பர், 29 அன்று பட்டாயாவுக்கு தாய்லாந்து அரசாங்கம் நகர அந்தஸ்து வழங்கியது. [3] 1978 இல், இது ஒரு சிறப்பு ஆட்சி நகரமாகவும் ஆனது. [8]

1981 ஆம் ஆண்டில், தொழிலதிபர் லெக் வீரியபன் சத்தியத்தின் சரணாலயம் என்ற கட்டடத்தைக் கட்டத் தொடங்கினார். முற்றிலும் மரத்தால் ஆன அது முடிக்கப்பட்டவில்லை. [9]

21 ஆம் நூற்றாண்டு

தொகு

2004 இல், நிருன் வத்தனாசார்ட்சாடன் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராவார். [10] 2008 மேயர் தேர்தலில், இத்திபோல் குன்ப்ளூம் பட்டாயாவின் மேயரானார். மேயராக, இத்திபோல் இருந்தபோது பாலி ஹாய் பியர் அருகே உள்ள வாட்டர்ஃபிரண்ட் சூட்ஸ் மற்றும் ரெசிடென்ஸ் காண்டோமினியத்தின் கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்தார். இது சர்ச்சைக்குரிய ஒன்றாக ஆனது. [11] அவரது அந்த ஒப்புதலுக்குப் பின்னர் 2023 இல் ஊழல் தொடர்பாக அவர் கைது செய்ய வழிவகுத்தது. [12]

2014 ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து, அமைதி மற்றும் ஒழுங்குக்கான தேசிய கவுன்சில் 2018 ஆம் ஆண்டு வரை இரண்டு மேயர்களை நியமித்தது, பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா, இத்திபோலின் சகோதரர் சோந்தயா குன்ப்லோமை மேயராக நியமித்தார். [13] [14] மேயர் சோண்டயா ராவ் ரக் பட்டாயா கட்சியை உருவாக்கினார், இது 2022 மேயர் தேர்தலில் போரமெட் என்காம்பிசெட் தலைமையில் வெற்றி பெற்றது, அவர் மேயராக பணியாற்றினார். [15]

கோவிட்-19 பெருந்தொற்றின் போது, உருவான பயணக் கட்டுப்பாடுகளால் சுற்றுலா முடங்கியதால் பட்டாயாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. [16]

2010 களில் இருந்து 2020 கள் வரை, பட்டாயா ஒரு பாலியல்-நகரம் என்ற பொதுக் கருத்தை மாற்றி குடும்பங்களுக்கு ஏற்ற இடம் என்று மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுனி பிளாசாவில் (ஓரினச்சேர்க்கையாளர்களின் இரவு வாழ்க்கைக்கு பெயர் பெற்றது) சிறார்களை பாலியலுக்கு பயன்படுத்தும் விடுதிகள் மூடப்பட்டன, மேலும் வாக்கிங் ஸ்ட்ரீட்டில் உள்ள கோகோ பார்களின் அளவு குறைந்தன. [17] இருப்பினும், தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட Deutsche Welle என்ற ஜெர்மானிய தொலைக்காட்சியின் 2023 ஆவணப்படம், பட்டாயாவின் பாலியல் தொழில் மற்றும் குழந்தை விபச்சாரத்துடன் அதன் தொடர்பு பற்றிய கவலைகளை மீண்டும் எழுப்பியது. [18]

பட்டாயா அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக மழைக்காலங்களில் பாதிக்கபடுகிறது. 27, ஆகத்து, 2021 அன்று பெய்த மழையால் பல முக்கியமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின, சில பகுதிகளில் இரண்டு மீட்டர் உயரம் வரை வெள்ளம் சென்றது. பட்டாயா நகர அதிகாரிகள் ஆகத்து வெள்ளத்தை ஒரு தசாப்தத்தில் பட்டாயாவின் மிக மோசமான வெள்ளம் என்று அழைத்தனர். [19]

4 நவம்பர் 2023 அன்று, பட்டாயாவுக்கு மிக உயர்ந்த வளர்ச்சிப் பிரிவிற்கான நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கான மதிப்பீடு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பாங்காக்கில் உள்ள அரசு இல்லத்தில் போரமேட்டுக்கு தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கியது. [20]

காலநிலை

தொகு

பட்டாயா வெப்ப மண்டல ஈர மற்றும் உலர் காலநிலையைக் கொண்டுள்ளது, அது பின்வரும் பருவகாலங்களாகப் பிரிக்கப்படுகிறது: இளவெப்பமான மற்றும் உலர்ந்த பருவம் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை), வெப்பமான மற்றும் ஈரப்பதம் மிக்க பருவம் (மார்ச் முதல் மே வரை) மற்றும் வெப்பமான மற்றும் மழை மிக்க பருவம் (ஜூன் முதல் அக்டோபர் வரை).

தட்பவெப்ப நிலைத் தகவல், பட்டாயா (1991–2020, extremes 1981-present)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36.0
(96.8)
37.1
(98.8)
37.3
(99.1)
37.0
(98.6)
36.6
(97.9)
35.4
(95.7)
34.9
(94.8)
34.5
(94.1)
33.7
(92.7)
33.8
(92.8)
35.6
(96.1)
35.9
(96.6)
37.3
(99.1)
உயர் சராசரி °C (°F) 30.6
(87.1)
31.2
(88.2)
32.0
(89.6)
33.0
(91.4)
32.7
(90.9)
32.0
(89.6)
31.6
(88.9)
31.4
(88.5)
31.1
(88)
30.9
(87.6)
30.8
(87.4)
30.2
(86.4)
31.46
(88.63)
தினசரி சராசரி °C (°F) 26.5
(79.7)
27.3
(81.1)
28.3
(82.9)
29.4
(84.9)
29.4
(84.9)
29.0
(84.2)
28.6
(83.5)
28.5
(83.3)
27.9
(82.2)
27.2
(81)
27.1
(80.8)
26.4
(79.5)
27.97
(82.34)
தாழ் சராசரி °C (°F) 23.5
(74.3)
24.5
(76.1)
25.5
(77.9)
26.4
(79.5)
26.6
(79.9)
26.4
(79.5)
26.2
(79.2)
26.1
(79)
25.4
(77.7)
24.7
(76.5)
24.3
(75.7)
23.3
(73.9)
25.24
(77.44)
பதியப்பட்ட தாழ் °C (°F) 16.4
(61.5)
17.5
(63.5)
17.7
(63.9)
19.4
(66.9)
21.5
(70.7)
21.3
(70.3)
21.4
(70.5)
22.0
(71.6)
21.5
(70.7)
19.8
(67.6)
16.7
(62.1)
14.6
(58.3)
14.6
(58.3)
பொழிவு mm (inches) 16.3
(0.642)
19.9
(0.783)
47.3
(1.862)
67.9
(2.673)
121.1
(4.768)
132.1
(5.201)
103.6
(4.079)
91.2
(3.591)
213.6
(8.409)
224.5
(8.839)
56.6
(2.228)
11.7
(0.461)
1,105.8
(43.535)
ஈரப்பதம் 73.7 75.9 77.8 77.2 77.5 77.4 77.5 78.1 81.3 83.2 75.3 70.3 77.1
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 1.6 1.8 3.3 5.0 9.0 9.8 9.5 9.1 13.2 14.4 4.0 1.5 82.2
சூரியஒளி நேரம் 229.4 211.9 238.7 204.0 155.0 114.0 117.8 114.7 108.0 145.7 189.0 226.3 2,054.5
Source #1: உலக வானிலையியல் அமைப்பு[21]
Source #2: Office of Water Management and Hydrology, Royal Irrigation Department (sun 1981–2010)[22](extremes)[23]

மக்கள்வகைப்பாடு

தொகு

பட்டாயாவானது பட்டாயா-சோன்புரி பெருநகரப் பகுதியின் மையத்தில் உள்ளது (1,000,000 மக்கள்தொகை கொண்ட சோன்புரி மாகாணத்தில் உள்ள நகரம் ), இது தாய்லாந்தின் மூன்றாவது பெரிய பெருநகரப் பகுதியாகும்.

புவியியல்

தொகு

தாய்லாந்து வளைகுடாவில் உள்ள பட்டாயா, சோன்புரி மாகாணத்தின் பாங் லாமுங் மாவட்டத்தில் பாங்காக் நகருக்கு தெற்கே தோராயமாக 160 கிலோமீட்டர் (99 மைல்) தொலைவில் உள்ளது.

பட்டாயா நகரமானது சிறப்பு நகராட்சிப் பகுதியாகும், இது முழு டம்பன் நோங் புரூ (நாங்ப்ரூயே) மற்றும் நா க்ளுயீயே (நாக்ளுவா) மற்றும் ஹுவாய் யாய் மற்றும் நாங் ப்ளா லாய் பகுதிகளை உள்ளடக்கியது. பட்டாயாவின் வடக்கு எல்லையாக உள்ள பேங் லாமுங் நகரிம் உள்ளது.

"பெரிய பட்டாயா" பேங்லாமங்கின் (சோன் பூரி மாகாணத்தை உருவாக்கும் பதினோறு மாவட்டங்களில் ஒன்றாகும்) பெரும்பாலான பங்களாமுக்கின் கடற்கரைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அது, நக்குலா கடற்கரையின் (வடக்கு கடற்கரை) கிழக்கு மற்றும் பட்டாயா கடற்கரை (பிரதான கடற்கரை) மற்றும் புத்தா ஹில் உயர்ப்பகுதி (பட்டாயா கடற்கரையின் தெற்கில் அடுத்ததாக அமைந்துள்ளது) ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரிய வடக்குப் பிரிவாகவும், டாங்டன் கடற்கரையை உள்ளடக்கிய, ஜோம்ட்டியன் கடற்கரையின் கிழக்குப் பகுதியைக் கொண்டுள்ள சிறிய தெற்குப் பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளும் தீவுகளும்

தொகு
பட்டாயா விரிகுடா பகுதி ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரை ஓய்வு விடுதிகளில் ஒன்றாகும். இது பாங்காக்கிற்கு அடுத்து தாய்லாந்தில் அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாகும்.
 
சூரிய மறைவு நேரத்தில் பட்டாயா கடற்கரை.

விரிகுடாப் பகுதியின் பிரதான பகுதி இரண்டு முக்கிய கடற்கரைப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. பட்டாயா கடற்கரையானது நகரின் மையப்பகுதிக்கு இணையாக உள்ளது. மேலும் அது குளியல் விரும்பிகள் மற்றும் பொழுதுபோக்குபவர்களுக்கான பிரதான இலக்காக உள்ளது, மேலும் சென்ட்ரல் ரோடிலிருந்து (பட்டாயா க்ளாங்) தெற்கு நோக்கி துறைமுகம் வரையிலும் பரவியுள்ள பகுதியானது, நகரின் ரெஸ்டாரண்ட்டுகள், மோட்டார் சைக்கிள் வாடகை நிலையங்கள் மற்றும் இரவுநேர உல்லாச மையங்கள் போன்றவற்றுக்கு மையமானதாக உள்ளது.
விரிகுடாவின் தெற்குப் பகுதியிலுள்ள ஜோம்டியன் கடற்கரையானது (தாய் மொழி: หาดจอมเทียน) நகரின் தெற்குப் பகுதியில் உள்ள பட்டாயா கடற்கரையிலிருந்து பிராட்டும்னக் மலையின் உயர்ப்பகுதியால் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் அது கடற்கரை விடுதிகள், பெரும் கட்டட வளாகங்கள், கூட்டுரிமை வீடுகள் மற்றும் ஓய்வுவிடுதிகள் போன்றவை நிறைந்த பகுதியாகவும் பிரதானமாக குடியிருப்புப் பகுதியாகவும் உள்ளது. இங்கு ஜெட் ஸ்கைகள், பாராசெய்லிங் மற்றும் சிறு படகோட்டம் போன்ற நீர் விளையாட்டுகளும் உள்ளன. ஜோம்டியன் மாவட்டமானது ஆசியாவின் மிகப்பெரிய உல்லாச விடுதி பகுதிகளில் ஒன்றாகும், அங்கு 4000+ அறைகள் கொண்ட அம்பாசடார் சிட்டி ஜோம்டியன் உள்ளது.

 
பட்டாயா கடற்கரை

கடற்கரைக்கு அப்பாலுள்ள தீவுகள்: மு கோ லான் (หมู่เกาะล้าน) , "அருகாமைத் தீவுகள்", கோ லான் (பிரதான தீவு), கோ சாக் மற்றும் கோ க்ரோக் ஆகியவை பட்டாயா கோ லான் (தாய் மொழி: เกาะล้าน) அல்லது "கோரல் தீவின்" மேற்குக் கடற்கரைகளிலிருந்து 7.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன, மு கோ ஃபை (หมู่เกาะไผ่), "தொலைத் தீவு", கோ ஃபை (பிரதான தீவு), கோ மேன் விச்சாய், கோ ஹூ சேங் மற்றும் கோ குளுங் பாடான் ஆகியவை "அருகாமைத் தீவுகளின்" மேற்குப் பகுதில் மேலும் தொலைவில் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ளன மற்றும் மு கோ ஃபையின் தெற்குப் பகுதியில் தென்மேற்குக்கு அப்பால் கோ ரின் அமைந்துள்ளது. இந்தக் குழுக்களிலுள்ள பெரும்பாலான தீவுகளை வேகப் படகுகளின் மூலம் 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் அடைய முடியும், பயணப்படகின் மூலம் சென்றால் சுமார் 45 நிமிடங்கள் ஆகலாம். "அருகாமைத் தீவுகள்", "தொலைத் தீவுகள்" மற்றும் "கோரல் தீவு" ஆகிய பெயர்கள் சுற்றுலாத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, தீவுக்கூட்டங்களுக்குப் பெயரிடும் மரபுகள் எதனடிப்படையிலும் வைக்கப்பட்டவை அல்ல, மேலும் ராயல் தாய் நேவியின் கடலியல் சேவைகளால் வெளியிடப்படும் கப்பலுக்கான விளக்கப்படங்களில் இடம்பெறுவதில்லை. தீவுகளில் பெரும்பாலானவை சுற்றுலாக் கடற்கரைகளைக் கொண்டுள்ளன. மேலும் ஸ்கூபா டைவிங் விளையாட்டு வசதிகளைக் கொண்டுள்ளன.

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "รายงานสถิติจำนวนประชากรและบ้านประจำปี พ.ศ.2562" [Statistics, population and house statistics for the year 2019]. Registration Office Department of the Interior, Ministry of the Interior (in தாய்). 31 December 2019. Archived from the original on 14 June 2019. பார்க்கப்பட்ட நாள் 10 March 2020, archiving is not necessary because DOPA provides data from 1993 to future years.
  2. "Department of Provincial Administration พ.ศ.2565" (in தாய்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.
  3. 3.0 3.1 "Pattaya History and the Facts". Lets Go Pattaya. பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.
  4. "History". thaiwaysmagazine.com. பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.
  5. "The History of Pattaya from 1787 to 1975 – Siam Royal View Pattaya". 2013-07-11. பார்க்கப்பட்ட நாள் 2023-11-07.
  6. Schauseil, Jan. "Sattahip and the history of GIs coming to Pattaya". One Stop Pattaya. Archived from the original on 24 July 2015. பார்க்கப்பட்ட நாள் 12 April 2015.
  7. "Welcome to Pattaya". Sawadee.com. 2018. Archived from the original on 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.
  8. "Pattaya, a former quiet fishing village – Thailand News". 2022-07-31. பார்க்கப்பட்ட நாள் 2024-02-11.
  9. "History – Sanctuary of truth museum". sanctuaryoftruthmuseum.com. பார்க்கப்பட்ட நாள் 2023-11-07.
  10. "Tide of change threatens Khunpluem dynasty's dominance in Pattaya elections". thaipbsworld.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-14.
  11. Judd, Adam (2020-09-12). "The story behind the abandoned Waterfront condo near Bali Hai Pier in Pattaya". The Pattaya News. பார்க்கப்பட்ட நாள் 2023-10-12.
  12. "Former Pattaya mayor arrested, released on bail". https://www.bangkokpost.com/thailand/general/2660614/former-pattaya-mayor-arrested-released-on-bail. 
  13. "Police general named Pattaya mayor". https://www.bangkokpost.com/thailand/general/1199640/police-general-named-pattaya-mayor. 
  14. "Sontaya becomes mayor". https://www.bangkokpost.com/thailand/general/1546598/sontaya-becomes-mayor. 
  15. Judd, Adam (2022-05-22). "Poramase "Beer" Ngampiches looks set to be next Pattaya mayor after unofficial results have come in". The Pattaya News. பார்க்கப்பட்ட நாள் 2023-10-15.
  16. "Thailand's tourist haven Pattaya devastated as coronavirus hits travel". Reuters. 2020-03-29. https://www.reuters.com/article/health-coronavirus-thailand-tourism-idINKBN21G08X. 
  17. Kenyon, Barry (2023-12-05). "Sex scandal in Pattaya: today's news is tomorrow's history". Pattaya Mail. பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
  18. "Documentary rocks Pattaya tourism". The Phuket News. பார்க்கப்பட்ட நாள் 5 December 2023.
  19. "Pattaya flooded again, residents vent frustration". Bangkok Post. https://www.bangkokpost.com/thailand/general/2178451/pattaya-flooded-again-residents-vent-frustration. 
  20. "Pattaya wins award for unmatched Integrity and Transparency Assessment". Pattaya Mail. 2023-11-04. பார்க்கப்பட்ட நாள் 2023-11-07.
  21. "World Meteorological Organization Climate Normals for 1991–2020". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 12 October 2023.
  22. "ปริมาณการใช้น้ำของพืชอ้างอิงโดยวิธีของ Penman Monteith (Reference Crop Evapotranspiration by Penman Monteith)" (PDF) (in தாய்). Office of Water Management and Hydrology, Royal Irrigation Department. p. 95. Archived (PDF) from the original on 2 October 2018. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016.
  23. "Climatological Data for the Period 1981–2010". Thai Meteorological Department. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாயா&oldid=4162924" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Done 2
News 5
Story 7