பாடவேளை (Period) என்பது பள்ளி/கல்லூரிகளில் பாடங்கள்/வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தினைக் குறிப்பதாகும். [1] இவை பொதுவாக 30 முதல் 60 நிமிடங்கள் வரை நீடிக்கும், ஒரு நாளைக்கு சுமார் 3 முதல் 10 பாடவேளைகள் இருக்கும். இருப்பினும், குறிப்பாக உயர் கல்வியில், அதிகமான பாடவேளைகள் இருக்கலாம். இந்த பாடவேளைகளின் எண்ணிக்கை மற்றும் கால அளவை ஆசிரியர்கள் தீர்மானிக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு பாடவேளைகளும் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை ஒழுங்குபடுத்துகிறார்கள்.இதில் வாரத்தில் ஒரு பாடவேளையாவது உடற்கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. [2] ஒரு பாடவேளை எப்போது தொடங்குகிறது மற்றும் முடிவடைகிறது என்பதைக் குறிக்க ஒரு பள்ளி மணி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

சான்றுகள்

தொகு
  1. "Definition of Class Period by The Free Dictionary". Farlex. பார்க்கப்பட்ட நாள் July 22, 2011.
  2. "The Times of India: Gill wants a compulsory sports period in schools". The Times Of India. April 25, 2010. http://timesofindia.indiatimes.com/india/Gill-wants-a-compulsory-sports-period-in-schools/articleshow/5854061.cms#ixzz0yHgn7YRb. பார்த்த நாள்: July 22, 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடவேளை&oldid=3891001" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
CMS 1
languages 1