பிராடா எஸ்.பி. ஏ. என்பது ஓர் இத்தாலிய நவநாகரிக முத்திரை, இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடம்பரப் பொருட்களை (உடனடியாக அணியும் உடை, தோல் பொருட்கள், காலணி, பெட்டி மற்றும் தொப்பி) தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தது, இது மரியோ பிராடா அவர்களால் உருவாக்கப்பட்டது. அந்த முத்திரை ஒரு கௌரவச் சின்னம்.[1]

Prada
வகைPrivately held
நிறுவுகை1913
நிறுவனர்(கள்)Mario Prada
தலைமையகம்Milan, Italy
அமைவிட எண்ணிக்கைWorldwide boutiques
முதன்மை நபர்கள்Miuccia Prada, Head Designer
Patrizio Bertelli, CEO
Vincenzo Prada, SVP & COO
Sebastian Suhl, SVP & CCO
Donatello Galli, CFO
தொழில்துறைFashion
உற்பத்திகள்Luxury goods
வருமானம்3.2 billion €
இணையத்தளம்www.prada.com

வரலாறு

தொகு

அடித்தளங்கள்

தொகு

அந்த நிறுவனம் 1913 ஆம் ஆண்டில் மரியோ பிராடா மற்றும் அவருடைய சகோதரர் மார்டினோ[2] அவர்களால் ஒரு தோல்பொருள் விற்பனைக் கடையாக - ஃப்ராடெல்லி பிராடா (ஆங்கிலம்: பிராடா சகோதரர்கள் ) - இத்தாலியின் மிலான்-இல் திறக்கப்பட்டது.[1][3] அந்தக் கடை ஆரம்பத்தில் தோல் பொருட்களை விற்பனை செய்தது மேலும் ஆங்கில ஸ்டீமர் டிரங்க்குகள் மற்றும் கைப் பைகளை இறக்குமதி செய்தது.[4]

வியாபாரத்தில் பெண்கள் பங்குபெறக்கூடாது என்று மரியோ பிராடா எண்ணியிருந்தார், அதனால் அவர் தன் வீட்டுப் பெண்கள் பட்டறைக்குள் வருவதைத் தடுத்தார். இதற்கு எதிர்மாறாக மரியோவின் மகனுக்கு இந்த வியாபாரத்தில் எந்த விருப்பமும் இருக்கவில்லை. அதனால் அவருடைய மகள் லூய்சியா பிராடா[2] தான் அவருடைய வாரிசாக தலைமையேற்று அந்த நிறுவனத்தைக் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் வரை நடத்தினார்.[4] லூய்சியாவின் மகள் மையூக்சியா பிராடா 1970 ஆம் ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்து இறுதியில் 1978 ஆம் ஆண்டில் தன்னுடைய தாயிடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்[2].

மையூக்சியா, போகோன்-லிருந்து தண்ணீர் புகா பேக்பாக்குகளை செய்யத் தொடங்கினார்.[1][3] 1977 ஆம் ஆண்டில் அவர் பாட்ரிசியோ பெர்டெல்லியை சந்தித்தார், 17 வது வயதிலேயே தன்னுடைய சொந்த தோல் பொருள் வியாபாரத்தைத் தொடங்கியிருந்த இத்தாலியரான இவர் விரைவிலேயே இந்த நிறுவனத்தில் சேர்ந்தார்.[4] பிராடா நிறுவனத்தின் மேம்பட்ட முடிவுகளுக்காக அவர் மையூக்சியாவுக்குப் பல ஆலோசனைகளைக் கூறினார், இவரும் அந்த ஆலோசனைகளைக் கடைப்பிடித்தார். ஆங்கிலப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தும்படியும், இருக்கும் லக்கேஜ்களின் பாணியை மாற்றியமைக்குமாறு ஆலோசனை கூறியதும் அவரே.[4]

உயர் நவநாகரீகத்தில் பிராடாவின் முன்னேற்றம்

தொகு

மையூக்சியா, நிறுவனத்தை 1978 ஆம் ஆண்டில் தன்வசம் பெற்றார், அதற்குள்ளாகவே நிறுவனத்தின் விற்பனை யு.எஸ். $450,000 ஆக இருந்தது.[4] பெர்டெல்லியை தன்னுடைய வர்த்தக மேலாளராக இணைத்துக்கொண்டு, வடிவமைப்புகளில் தன்னுடைய படைப்புத்திறனை நிறைவேற்ற மையூக்சியாவுக்கு நேரம் கிடைத்தது.[1] அவர் தன்னுடைய எண்ணங்களை பிராடாவில் சேர்த்துக்கொள்ள முனைவார், பிராடாவும் அதற்கேற்றவாறு மாறிக்கொள்ளும்.[1] அவர் தன்னுடைய முதல் பேக்பாக் மற்றும் டோட் தொகுப்புகளை 1979 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அவை ஒரு கடினமான இராணுவ ஸ்பெக் கருப்பு நைலானால் செய்யப்பட்டது, இவற்றை அவளுடைய தாத்தா ஸ்டீமர் டிரங்குகளின் உறைகளாகப் பயன்படுத்திவந்தார்.[4] ஆரம்ப வெற்றி உடனடியாக ஏற்படவில்லை, விளம்பரங்களின் பற்றாக்குறை மற்றும் உயர்ந்த விலை காரணமாக அவை விற்பனையாவதில் கடினம் ஏற்பட்டது, ஆனால் அந்த வரிகள் பின்னாளில் அவருடைய முதல் வர்த்தக ரீதியான வெற்றியாக அமைந்தது.[4] அடுத்தது, மையூக்சியா மற்றும் பெர்டெல்லி உலகெங்கிலுமுள்ள மேல்தட்டு பல்துறை அங்காடிகள் மற்றும் பொடிக்குகளில் பைகளுக்கான ஒட்டுமொத்த கணக்கினை ஏற்படுத்த முடிவுசெய்தனர்.[4] 1983 ஆம் ஆண்டில், பிராடா அசல் கடையை நினைவுறுத்தும் இரண்டாவது பொட்டிக்கை மிலானில் திறந்தது, ஆனால் இது அதற்கு நேர்மாறாக நேர்த்தியான நவநாகரிகத்துடன் இருந்தது. இது கேல்லெரியா விட்டோரியோ இமானுவேல் II இன் ஷாப்பிங் மாவட்டத்தில் திறக்கப்பட்டது.[4]

அதற்கு அடுத்த ஆண்டே பிராடா தன்னுடைய நைலான் பைகளை வெளியிட்டது.[4] அதே ஆண்டில், ஃப்ளோரன்ஸ், பாரிஸ், மாட்ரிட் மற்றும் நியூயார்க் நகரம் ஆகியவற்றின் முக்கியமான ஷாப்பிங் மாவட்ட இடங்களில் ஐரோப்பா கண்டம் நெடுகிலும் பிராடா தன்னுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தியது.[4] 1984 ஆம் ஆண்டில் காலணி விற்பனையும் தொடங்கப்பட்டது.[4] 1985 ஆம் ஆண்டில் மையூக்சியா புகழ்பெற்ற பிராடா கைப்பைகளை வெளியிட்டார், இது மிக விரைவிலேயே தனிச்சிறப்புமிக்க பொருளானது.[1] அது நடைமுறைக்கேற்ற வகையிலும் நவ நாகரிகமானதாகவும், செயல்பாட்டுடைமையாகவும் கட்டுறுதியுடனும் இருந்தது. 1987 ஆம் ஆண்டில் மையூக்சியாவும் பெர்டெல்லியும் திருமணம் செய்துகொண்டனர்.[4] 1989 ஆம் ஆண்டில் பிராடா தன்னுடைய, பெண்கள் உடனடியாக அணியக்கூடிய உடைகளைத் தொடங்கியது, அதன் வடிவங்கள் அவற்றுக்கான கீழிறங்கிய இடுப்பு சுற்றளவு மற்றும் குறுகிய பெல்ட்களுக்குப் பெயர்பெற்றது.[4] பிராடாவின் சுத்தமான தொழில்போக்கு, வளமையான துணிவகைகள் மற்றும் அடிப்படை வண்ணங்களை நவநாகரிக உலகம் கவனிக்கத்த் தொடங்கியவுடன் பிராடாவின் பிரபலத்தன்மை உச்சிக்குச் சென்றது.[1] டைம் பத்திரிக்கை, அவற்றின் ஆடைகளை "அசைக்கமுடியாத, பாரம்பரியமிக்க நல்லொழுக்கத்துடன் மிக நவீனமான தொழிற்துறை சார்ந்த பளபளப்பு இணைக்கப்பட்டுள்ளது" என்று விவரித்தது.[4] உண்மையே, பிராடா நிறுவனத்திலிருந்து வந்த வடிவங்கள் பெண்ணிய ஊழியர் அழகுணர்ச்சியைப் பிரதிபலித்தது, இது இதர உயர்-நவநாகரிக பிராண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதை நேர்மாறான தனித்தன்மை உடையதாக ஆக்கியது.[4] அதிகத் திறனுடைய வேலையில் இருக்கும் செல்வச்செழிப்புமிக்க பெண்களுடன் அது அடையாளப்படுத்தப்பட்டது."[4] இவ்வாறு, தன்னுடைய பெண்களின் பைகள் "சீருடைகள்" என்று மையூக்சியா தானே அதை அழைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.[4]

அந்த லேபிலுக்கான முத்திரை, லூயில் வூய்ட்டான் போன்ற இதர புகழ்பெற்ற ஆடம்பர பிராண்டுகளின் பைகளில் இருந்த முனைப்பான வடிவம் போன்று பிராடா இல்லை.[4] மேலும் அதன் கவர்ச்சி, உடைகள் உட்பட, "செல்வாக்கு நிலைக்கு எதிரான" அல்லது "போலி பகட்டுக்கு நேர்எதிர்" பிம்பமாக இருந்தது.[4]

1990 ஆம் ஆண்டுகள்

தொகு

பிராடாவின் படைக்கும் திறன் அதை மிகவும் செல்வாக்குமிக்க நவநாகரிக நிறுவனங்களில் ஒன்றாக ஆக்கியது,[1] மேலும் 1990 ஆம் ஆண்டுகளில் அந்த பிராண்ட் உயர் மதிப்புமிக்க உடைமைப் பொருளாக ஆனது.[4] பிராடா கையொப்பமானது, பெரும்பாலும் கருப்பு, பழுப்பு, சாம்பல், பச்சை மற்றும் க்ரீம் நிறங்களில் எளிமையான அதே நேரத்தில் தூண்டப்படுகிற நாகரிகங்களில் வளமிக்க ஆடைகளை உட்கொண்டிருந்தது. லைஃப் இன் இட்டாலி ஆடை உடுத்துதலை இவ்வாறு கூறுகிறது, "மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது மற்றும் அதிகமான தோலை வெளிப்படுத்தாமல் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது. துணைப்பொருட்களில் உள்ளடங்குபவை மெலிந்த தோல் பெல்ட்கள், நாகரிகத் தோற்றமுடைய உயர்ந்த ஹீல் வைத்த காலணிகள் மற்றும் புகழ்பெற்ற கைப்பையும் கூட."[1]

1990 ஆம் ஆண்டின் விற்பனை £ 70 பில்லியன் அல்லது யுஎஸ் $31.7 மில்லியன் ஆக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.[4] பார்ட்ரிஸியோ டி மார்கோ நிறுவனத்துக்காக ஆசியாவில் பணி புரிந்துவிட்டு அமெரிக்காவில் வளர்ச்சிபெற்ற வர்த்தகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஃபேஷன் பத்திரிக்கை ஆசிரியர்களிடத்தில் பிராடா பைகள் பிரபலமாவதற்கு அவர் அந்தப் பைகளை பல்துறை அங்காடிகளில் பிரதானமாக காட்சிப்படுத்துவதில் வெற்றிபெற்றார். பிராடாவின் தொடர்ச்சியான வெற்றிகள் அவற்றின் "உழைக்கும்-வர்க" பொருளே கற்பித காரணமாக இருந்தது, இதை, நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் ஜினியா பெல்லாஃபான்டே இவ்வாறு அறிவித்தார், "உயர்-தொழில்நுட்பத்துடன் கூடிய 1990 ஆம் ஆண்டுகளின் ஐபிஓ காலகட்டத்தில் அது மிக கவர்ச்சிகரமானதாக ஆகிக் கொண்டிருக்கிறது."[4] அதோடல்லாமல் இப்போது கணவன் மனைவியாக இருக்கும் மையூக்சியா மற்றும் பெர்டெல்லி பிராடா லேபிலை ஒரு எச்சரிக்கையான விரிவாக்கத்துடன் கொண்டு சென்று பொருட்களை தற்செயலாகக் கிடைக்கப்பெறச் செய்தனர்.[4]

1992 ஆம் ஆண்டில் ஆடைகளின் பிராண்டான மையூ மையூ தொடங்கப்பட்டது, இது மையூக்சியாவின் புனைபெயராகும். "ஒட்டும் தன்மையுடைய சிந்தடிக் துணிவகை"யால் உருவாக்கப்பட்ட ஆடைகளை வழங்கியதன் மூலம் இளம் வாடிக்கையாளர்களின் தேவையை மையூ மையூ நிறைவேற்றியது.[4] 1993 ஆம் ஆண்டுக்குள் பிராடாவுக்கு கௌன்சில் ஆஃப் ஃபேஷன் டிசைனர்ஸ் ஆஃப் அமெரிக்காவின் துணைபொருட்களுக்கான விருது கிடைத்தது.[1][3]

ஆண்கள் உடனடியாக அணியும் ஆடைகளின் தொகுப்பு 1990 ஆம் ஆண்டுகளின் இடையில் தொடங்கப்பட்டது.[4] 1994 ஆம் ஆண்டுக்குள் விற்பனை யுஎஸ் $210 மில்லியனாக இருந்தது, இதில் துணிக்கான விற்பனை மட்டுமே 20% இருந்தது (1995 ஆம் ஆண்டில் இது இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது).[4] 1995 ஆம் ஆண்டில் பிராடா, CFDA விடமிருந்து மற்றொரு விருதினைப் பெற்றது இது "ஆண்டின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்"க்கானது[3][5] 1996 ஆம் ஆண்டில் நியூயார்க், மன்ஹாட்டனில் 18,000 சதுரஅடி பிராடா பொடிக் திறக்கப்பட்டது, அந்த நேரத்தில் அந்த சங்கிலித் தொடர் கடைகளில் அதுதான் மிகப்பெரியது.[4] இதற்குள்ளாக பிராடா நிறுவனம் உலகம் முழுவதும் 40 இடங்களில் இயங்கத் தொடங்கிவிட்டது, இதில் 20 ஜப்பான்-இல் இருந்தது.[4] நிறுவனம் எட்டு தொழிற்சாலைகளை உடைமை கொண்டிருந்தது மேலும் இத்தாலியிலுள்ள 84 இதர தயாரிப்பாளர்களிடம் வேலையை உள்குத்தகை செய்திருந்தது. மையூக்சியாவின் பிராடா மற்றும் பெர்டெல்லி நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டில் பிராபார் பி.வி. உருவாக்கப்பட்டது.[4] எனினும் அந்தப் பெயர் பின்னர் பிராடா பி.வி. என்று மாற்றப்பட்டது மேலும் பாட்ரிஸியோ பெர்டெல்லி, பிராடா ஆடம்பர நிறுவனத்தில் முக்கிய செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

1997 ஆம் ஆண்டில் பிராடா ஈட்டிய வருமானம் யுஎஸ் $674 மில்லியன்.[4] அதே ஆண்டில மற்றொரு அங்காடி மிலனில் திறக்கப்பட்டது. அந்த அங்காடி திறக்கப்படுவதற்கு முன்னர் பெர்டெல்லி அதன் அமைப்பில் மிகவும் அதிருப்தி ஏற்பட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவிக்கிறது.[4] குஸ்ஸி குழாமில் கூட பிராடா பங்குகளைப் பெற்றது, பின்னர் குஸ்ஸியை "தன்னுடைய மனைவியின் வடிவங்களை கண்மூடித்தனமாக பின்பற்றி"யதாகப் பழி கூறினார்.[4] 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெர்டெல்லி யுஎஸ்$260 மில்லியனில் 9.5% வட்டியை இலாபமாகப் பெற்றார்.[4] குஸ்ஸி குழாமை அவர் கைப்பற்ற முயன்று வருவதாக பகுப்பாய்வாளர்கள் ஊகம் கூறத் தொடங்கினர். எனினும் இந்தக் கூற்று நடைமுறையில் சாத்தியமில்லை, ஏனெனில் அந்த நேரத்தில் பிராடா இன்னமும் ஒரு சிறு நிறுவனமாக இருந்தது அது கடனிலும் இருந்தது. ஃபண்டிங் யூனிவர்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது "குறைந்த பட்சமாக அதற்கு இருந்தது, பிராடா, குஸ்ஸியின் மிகப்பெரும் பங்குதாரர்களில் ஒருவராக அதற்குக் குரல் கொடுக்கும் உரிமை கொண்டிருந்தது, (நிர்வாகிகள் சபையில் இடம் கோருவதற்கு 10 சதவிகித பிடிப்பைக் கொண்டிருக்கவேண்டும்), மேலும் குஸ்ஸியை யாராவது எடுத்துக்கொள்ள முயற்சி செய்தால் பிராடாவுக்குத் தான் மிக அதிக இலாபம் கிடைக்கவிருக்கிறது."[4] இருந்தபோதிலும், பெர்டெல்லி தன்னுடைய பங்குகளை மோயிட்-ஹென்னெஸ்ஸி • லாய்ஸ் வுய்ட்டோன் தலைவர் பெர்னார்ட் அர்னௌல்ட்க்கு 1998 ஆம் ஆண்டு ஜனவரியில் யுஎஸ்$140 மில்லியன் இலாபத்துடன் விற்றார்.[4] உண்மையிலேயே அர்னௌல்ட் தான் குஸ்ஸியைக் கைப்பற்ற முயன்றுகொண்டிருந்தார். LVMH சிறிது காலமாகவே ஃபேஷன் நிறுவனங்களை வாங்கிக்கொண்டிருந்தார் அவர் ஏற்கெனவே டையார், கிவன்சி மற்றும் இதர ஆடம்பர பிராண்ட்களை உடைமைக் கொண்டிருந்தார். என்றாலும் குஸ்ஸி 45$ முதலீட்டைத் தொழிலதிபர் ஃப்ராங்காய்ஸ் பினௌல்ட்டுக்கு யுஎஸ்$3 பில்லியனுக்கு விற்றதன் மூலம் அவரைத் தடுத்து நிறுத்திவிட்டார்.[4] ஆண்களுக்கான முதல் பொட்டிக்கை பிராடா லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 1998 ஆம் ஆண்டில் திறந்தது.[3]

குஸ்ஸி குழுமம் மற்றும் LVMH போன்றே தானும் ஆடம்பர பிராண்ட்களின் ஒரு முன்னணி முகவரியைக் கொண்டிருப்பதில் பிராடா திடமாக இருந்தது. 1999 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பிராடா, நியூ யார்க்கை அடிப்படையாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருந்த ஹெல்முட் லாங்க்கின் நிறுவனத்தில் 51% த்தை யுஎஸ்$40 மில்லியனுக்கு வாங்கியது. லாங்கின் நிறுவனத்தின் மதிப்பு சுமார் யுஎஸ்$100 மில்லியனாக இருந்தது. சில மாதங்களுக்குப் பின்னர், ஜில் சாண்டர் ஏ.ஜி. ஒட்டுமொத்தத்தையும் கட்டுக்குள் கொண்டுவருவதற்குப் பிராடா யுஎஸ்$105 மில்லியன் கொடுத்தது, ஜெர்மன் ஆதார நிறுவனமான அது ஆண்டு வருமானமாக யுஎஸ்$100 மில்லியனைக் கொண்டிருந்தது. இந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் பிராடா ஜெர்மனியில் தன் இருப்பைப் பதிய வைக்க முடிந்தது, மேலும் சில மாதங்களுக்குப் பின்னர் ஜில் சாண்டர் தன் பெயரளவில் இருந்த நிறுவனத்திலிருந்து விலகினார்.[4] ஆங்கில காலணி தயாரிப்பு நிறுவனமான சர்ச் & கம்பெனியும் கூட பிராடாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது, அப்போது பிராடா அந்த நிறுவனத்தின் 83% த்தை யுஎஸ்$170 மில்லியனுக்கு வாங்கியது.[4] பிராடா கண் அணிகளைத் தயாரிப்பதற்கு அந்த ஆண்டில் பிராடா மற்றும் டீ ரிகோ குழாம் இடையில் ஒரு கூட்டு வர்த்தக முயற்சியும் கூட ஏற்படுத்தப்பட்டது[4] 1999 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் பிராடா LVMH உடன் இணைந்து ரோம்-ஐ ஆதாரமாகக் கொண்டிருந்த ஃபெண்டி எஸ்.பி.ஏ.வில் 51% முதலீட்டுக்கான போட்டியில் குஸ்ஸியை வீழ்த்தியது.[4] பிராடா மற்றும் LVMH இரண்டுமாகச் சேர்ந்த ஒட்டுமொத்தமாக செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தொகையான யுஎஸ்$520 மில்லியனில் பிராடாவின் வாங்கப்பட்ட பங்கு (25.5%) யுஎஸ்$241.5 மில்லியனாக மதிப்பிடப்படுகிறது.[4] ஃபெண்டி நிதிநிலையில் அவ்வளவாக சரிவர செயல்படாததால் பிராடா அதன் கடன்களை ஏற்றுக்கொண்டது.

இந்தக் கைப்பற்றல்கள், பிராடாவை ஐரோப்பாவின் ஆடம்பர பொருட்களின் சந்தையின் உச்சிக்குக் கொண்டு சென்றது.[4] 1996 ஆம் ஆண்டைக் காட்டிலும் வருமானம் மும்மடங்காகி £2 டிரில்லியனுக்குக் கொண்டு சென்றது. வெளிப்படையான வெற்றிகள் இருந்தபோதிலும் நிறுவனம் இன்னமும் கடனில் இருந்தது.[4]

21 ஆம் நூற்றாண்டுக்குள் ஒரு புதிய கண்ணோட்டம்

தொகு

2000 ஆம் ஆண்டுகளில் நிறுவனத்தின் இணைப்புகள் மற்றும் வாங்கும் ஆரவாரம் குறையத்தொடங்கியது. இருந்தாலும், அஸ்சிடைன் அலேயாவுடன் ஒரு தளர்ந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது.[6] 2000 ஆம் ஆண்டில் தோல் பராமரிப்பு பொருட்கள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் யூனிட் டோஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. 30-நாள் பயன்படுத்தக்கூடிய சுத்தப்படுத்தும் லோஷன் சில்லரை விலையான யுஎஸ்$100 க்கு விற்பனை செய்யப்பட்டது.[4] யுஎஸ்$850 மில்லியனுக்கும் மேலான கடன்களை அடைப்பதற்காக, நிறுவனத்தின் 30% த்தை மிலன் பங்குச் சந்தையில் பட்டியலிட நிறுவனம் 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திட்டமிட்டது. இருந்தபோதிலும், அமெரிக்கா மற்றும் ஜப்பானில் ஆடம்பரப் பொருட்களின் மீது செலவு செய்தல் குறைந்து வந்ததால் அந்த விற்பனைகள் நிதானமடைந்தது. தன்னுடைய வங்கியாளர்களின் வற்புறுத்தலின் காரணமாக பெர்டெல்லி, 2001 ஆம் ஆண்டில் ஃபெண்டியில் இருந்த பிராடாவின் அனைத்து 25.5% பங்குகளையும் LVMH க்கு விற்றார். இந்த விற்பனை வெறும் யுஎஸ்$295 மில்லியனைப் பெற்றுத் தந்தது.[4]

2006 ஆம் ஆண்டுக்குள் ஹெல்முட் லாங்க், ஆமி ஃபேர்குளோ மற்றும் ஜில் சாண்டர் லாபில்கள் விற்கப்பட்டுவிட்டன. ஜில் சாண்டர், தனியார் பங்கு நிறுவனமான சேஞ்ச் கேபிடல் பார்டனர்சுக்கு விற்கப்பட்டது, இந்த நிறுவனம் கேர்ரெஃபோர் தலைவரான லுக் வாண்டிவெல்டெ அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் ஹெல்முட் லாங்க் லேபில் இப்போது ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான லிங்க் தியரியால் உடைமை கொள்ளப்பட்டுள்ளது. பிராடா இன்னமும் ஃபெண்டி கடனிலிருந்து மீண்டு வரவில்லை. மிகச் சமீபத்தில் சர்ச் & கம்பெனி பிராண்டின் 45% முதலீடு ஈக்வினாக்ஸ்சுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

2010 ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் வருமானத்தை யுஎஸ்$5 பில்லியனுக்கு உயர்த்த பெர்டெல்லி திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக ஃபார்சூன் தெரிவிக்கிறது.

பிராடா தன்னுடைய பொருட்களை இத்தாலியில் தயாரிக்கிறது, இந்தத் தொழிலகங்களில் சீன கூலியாட்களைப் பயன்படுத்தி ஊதியச் செலவுகளைக் குறைத்து வருவது வெளிப்படையாகத் தெரிகிறது.[6][7]

துருக்கிய தோல் தொழிற்சாலையான DESA விடமிருந்து முக்கிய வாங்குனராக இருப்பது பிராடா, இந்த நிறுவனம் தொழிற்சங்கத்தில் இணைந்த தொழிலாளர்களைச் சட்டத்துக்குப் புறம்பாக வேலையை விட்டு நீக்கியதற்காக துருக்கி உச்ச நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐரோப்பாவை ஆதாரமாகக் கொண்டிருக்கும் உழைப்பவர் உரிமை அமைப்பான தி க்ளீன் க்ளோத்ஸ் காம்பேய்ன், இந்தத் தொழிற்சாலையில் அமைப்புக்கான சுதந்திரம் மதிக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று பிராடாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.[8]

இன்றிருக்கும் வர்த்தகங்கள்

தொகு

ரன்வே ஷோக்கள்

தொகு

பிராடா, கால்வின் க்ளீய்ன் மற்றும் குஸ்ஸியுடன் தங்கள் ரன்வே ஷோக்களில் மட்டுமே நடக்கும் படியாக புதிய மாடல்களைக் கொண்டுவரும் பழக்கத்துக்குப் பெயர் பெற்றவர்கள். வழக்கமாக இதற்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் ஒருவர் ஒரு பிராடா ஷோவை திறந்துவைப்பார். பிராடா ஷோவில் ஒரு தன்னந்தனியான அல்லது திறக்கப்படும் இடம் தான் வடிவழகு உலகில் மிகவும் விரும்பத்தக்க முன்புதிவுகளில் ஒன்றாக இருக்கிறது. முந்தைய பிராடா எக்ஸ்க்ளூசிவ்கள் மற்றும் ஓபனர்களில் ஃபேஷன் உலகில் இன்று பிரபலமடைந்தவர்களில் உள்ளடங்குபவர்கள் டாரியா வெர்போவி, கெம்மா வார்ட், சுவி கோபோனென் மற்றும் சாஷா பிவோவாரோவா, இவர் பிராடாவின் 2000 ஆம் ஆண்டு ரன்வே ஷோவைத் திறந்த பின்னர் பிராடாவின் விளம்பரப் பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக ஆறு பருவங்களில் இடம்பெற்றிருக்கிறார்.

பிராடா சிறு கடைகள் மற்றும் பெரும் அங்காடிகள்

தொகு
 
இத்தாலியின் மிலானிலுள்ள கேல்லெரியா விட்டோரியோ இமானுவேல் II இல் பிராடாவின் உடைகள் விற்கும் கடை.
 
இத்தாலி, ரோமில் உள்ள ஒரு பிராடா கடை.

பல்வேறு இடங்களில் ஃப்ளாக்ஷிப் அங்காடிகளை வடிவமைப்பதற்காக பிராடா பல கட்டடக் கலைஞர்களை, குறிப்பாக ரெம் கூல்ஹால் மற்றும் ஹெர்ஸாக் & டீ மியூரான் ஆகியோரைப் பொறுப்பாளியாகியிருக்கிறது. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் கோலா லம்பூரில் பெவிலியன் கோலா லம்பூர் இடத்தில் இருமடங்கான பெரும் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. பிராடா வழக்கத்துமாறான பல்-பயன்பாட்டு கட்டடமான பிராடா டிரான்ஸ்பார்மர்-ஐ சியோல்-இல் உருவாக்கிவருகிறது. மேலும் 2009 ஆம் ஆண்டு, மிலனில் கார்ஸோ வெனிஸியாவில் ஒரு புதிய அங்காடி திறப்பைக் கண்டது, இது பிராடாவின் விருப்பப்படி செய்துகொடுக்கப்படும் தொகுப்பை மையப்படுத்தி கட்டடக் கலைஞர் ராபர்ட் பாசியோச்சியால் வடிவமைக்கப்பட்டது.

  • யுஎஸ்
    • நியூ யார்க் நகரில் சோஹோ (முதல் அமெரிக்க மேன்மையம்), ஃபிஃப்த் அவென்யூ மற்றும் மாடிசன் அவென்யூவில்
    • பீவர்லி ஹில்ஸ் (இரண்டாவது அமெரிக்க மேன்மையம்)
    • சிகாகோ
    • சான் பிரான்சிஸ்கோ
    • பால் ஹார்பர்
    • லாஸ் வெகாஸ் (தி கிரிஸ்டல்ஸ், பாலாஸ்சோவில் இருக்கும் கடைகள்)
    • ஆலா மோனா சென்டர்
    • வாய்கிகி
    • ஆஸ்பென்
    • மன்ஹாஸ்ஸெட், நியூ யார்க்
  • கனடா
    • டொரோன்டோ
  • ஐரோப்பா
    • மிலான் (ஐரோப்பிய மேன்மையம்)
    • ரோம்
    • ஃபிரென்செ
    • கப்ரி
    • வெனிசியா
    • நாபோலி
    • ஃபோர்டி டீய் மார்மி
    • இலண்டன் (ஸ்லோவோன் ஸ்ட்ரீட், ஓல்ட் பாண்ட் ஸ்ட்ரீட், ஹீத்ரோ விமானநிலையம், வெஸ்ட்ஃபீல்ட் லண்டன்)
    • பாரீஸ் (அவென்யூ மோன்டேய்க்னெ, பிரிண்டெம்ப்ஸ், ரியூ டீ கிரெனெல்லெ)
    • ப்ரேகுவே
    • மொனாகோ (மோன்டிகார்லோ டோன்னா, மோன்டிகார்லோ யூவோமோ)
    • மாஸ்கோ
    • ஏதென்ஸ்
    • வியன்னா
    • டுஸ்ஸெல்டார்ஃப்
    • ஃபிராங்க்பர்ட்
    • ஹாம்பர்க்
    • முனிச்
    • பெர்லின்
    • மாட்ரிட்
    • இஸ்தான்புல்
    • லிஸ்பான் (விரைவில் திறக்கப்படவுள்ளது)
  • ஆசியா
    • டோக்யோ (ஆசிய மேன்மையம்) - ஏவோயாமா உள்ள போற்றுதலுக்குரிய ஹெர்ஸாக் & டீ மியூரான் கட்டடம் உட்பட பல வர்த்த கடைகள்
    • தாய்வான் - தாய்பீய், தாய்சுங், காவோசியுங், ஒட்டுமொத்தம் ஏழு அங்காடிகள்
    • கொரியா - சியோல், புசான், டேயிகு, ஜெஜு, சுங்க்நாம், ஒட்டுமொத்தம் 22 ஆங்காடிகள்
      • சியோலில் கியோன்குய் பாலெஸ்ஸிற்கு அடுத்து ஒரு பிராடா டிரான்ஸ்ஃபார்மெர் நிறுவப்பட்டிருக்கிறது.
    • கோலா லம்பூர் (பெவிலியன் கேஎல், ஜலம் புகித் பின்டாங்க், சுரியா கேஎல்சிசி)
    • ஜகார்தா, இந்தோனேசியா (பிளாசா செனாயன், பிளாசா இந்தோனேசியா)
    • சிங்கப்பூர்: தி பராகன் ஃபிளாக்ஷிப் ஐயான் ஆர்சர்ட் ஃபிளாக்ஷிப் (9,500 சதுர அடி)
    • மணிலா, பிலிப்பைன்ஸ் (கிரீன்பெல்ட் (அயாலா சென்டர்))
    • பாங்காக், தாய்லாந்து (கேய்சார்ன் பிளாஸா, தி எம்போரியம்)
    • சீனம்: 7 அங்காடிகள்
  • ஆஸ்திரேலியா
    • சிட்னி, நியூ சௌத் வேல்ஸ் (மார்டின் பிளேஸ்) (ஃபிளாக்ஷிப்)
    • மெல்போர்ன், விக்டோரியா (கிரௌன் காசினோ, கோல்லின்ஸ் ஸ்ட்ரீட், சாட்ஸ்டோன் ஷாப்பிங் சென்டர்)
    • சர்ஃபர்ஸ் பாரடைஸ், குய்ன்ஸ்லாண்ட்
    • கேய்ர்ன்ஸ், குய்ன்ஸ்லாண்ட்
    • பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா(2010 ஆம் ஆண்டு மத்தியில் திறக்கப்படவுள்ளது)
  • நியூசிலாந்து
    • ஆக்லாண்ட் (டிஎஃப்எஸ் கேலரியா, கஸ்டம்ஸ் ஹவுஸ்)

எல்ஜி பிராடா செல் தொலைபேசி

தொகு
 
பிராடா எல்ஜி KE850 மொபைல் தொலைபேசி.

2007 ஆம் ஆண்டு மே மாதத்தில், பிராடா செல் தொலைபேசி தயாரிப்பாளர் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்சுடன் இணைந்து, {0எல்ஜி பிராடா KE850{/0} தொலைபேசிகளைத் தயாரிப்பதற்காகக் கூட்டு சேர்ந்தது. அதன் சில்லரை விலை $800 ஆக இருந்தது.

2009 ஆம் ஆண்டில், அந்தத் தொலைபேசியின் இரண்டாவது தலைமுறையான KF900 ஐரோப்பாவில் தொடங்கப்பட்டது. 3ஜி திறனுடன் அந்தத் தொலைபேசி ஒரு புதிய சறுக்கும் QWERTY விசைப்பலகையைக் கொண்டிருந்தது, இது அதை கனமாக்கியது ஆனால் செயல்பாட்டுத் தன்மையைக் கொண்டிருந்தது. இந்தத் தொலைபேசி புதிய பிராடா லிங்க் கடிகாரத்துடன் இணைந்து செயல்பட்டது, இதைப் பயனர்கள் தங்கள் தொலைபேசியுடன் ப்ளூடூத் இணைப்பு மூலம் உரை செய்திகளைப் பார்ப்பதற்குப் பயன்படுத்தலாம்.

கலாச்சாரத்தில் பிராடா

தொகு
  • தி டெவில் வேர்ஸ் பிராடா என்னும் 2003 ஆம் ஆண்டு நாவலான இது, ஒரு இரக்கமற்ற முன்கோபியான முதலாளியைப் பற்றிய கதை, வோக் பத்திரிக்கையின் கற்பனை வடிவமான ரன்வே பத்திரிக்கையின் புதுப்பிக்கப்பட்ட முதன்மை ஆசிரியரான இவர் பிராடா மற்றும் ஹெர்மெஸ் போன்ற டிசைனர் உடைகளை அணிபவர். அதன் 2006 ஆம் ஆண்டு திரைப்படத் தழுவலில் மெரில் ஸ்ட்ரீப் மற்றும் ஆன்னெ ஹாத்வே நடித்திருந்தனர்.
  • ஒரு அமெரிக்க மெட்டல்கோர் இசைக்குழுவும் கூட தி டெவில் வேர்ஸ் பிராடா என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டது.
  • 2005 ஆம் ஆண்டில், இரு ஸ்காண்டிநேவியக் கலைஞர்களான மைகெல் எல்ம்க்ரீன் மற்றும் இங்கார் டிராக்செட் [1] ஆகியோர் பிராடா மார்ஃபா என்றழைக்கப்பட்ட பிராடா சிறு-கடையின் பொய்த்தோற்ற சிற்பங்களை மேற்கு டெக்சாசின் வேலன்டைன் மற்றும் மார்ஃபா அருகில் இருக்கும் சிறு நகரங்களில் திறந்துவைத்தனர். அமெரிக்க நெடுஞ்சாலை 90 இன் ஆளரவமற்ற அகன்றவெளியில் இருக்கும் 15 க்கு 25 அடி அடோப் மற்றும் ஸ்டக்கோ கட்டடங்கள் அமெரிக்க கட்டடக் கலைஞர்கள் ரோனால்ட் ரேயெல் மற்றும் விர்ஜினியா சான் ஃப்ராடெல்லோ அவர்களின் உதவியுடன் பிராடா அறக்கட்டளையால் பகுதி இடம் நிதியளிக்கப்பட்டது. வாங்கக்கூடியவர்களின் ஊக்கத்தைக் கெடுக்கும் வகையில் அதன் கதவுகள் மூடப்பட்டது.

குறிப்புதவிகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Grosvenor, Carrie. "The History of Prada". Life in Italy. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02.
  2. 2.0 2.1 2.2 "Miuccia Bianchi Prada - Biography". Fashion-Forum.org. Archived from the original on 3 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 20 March 2010.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Prada". Fragrance X. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 4.20 4.21 4.22 4.23 4.24 4.25 4.26 4.27 4.28 4.29 4.30 4.31 4.32 4.33 4.34 4.35 4.36 4.37 4.38 4.39 4.40 4.41 4.42 4.43 4.44 4.45 "findinduniverse". Funding Universe. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Prada". Archived from the original on 2010-06-07. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
  6. 6.0 6.1 http://www.prada.us/redir/prada-home[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-02. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராடா&oldid=3843463" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES