ரபி ராய்

இந்திய அரசியல்வாதி

ரபி ராய் (Rabi Ray (பிறப்பு: 26 நவம்பர் 1926), இந்திய இடதுசாரி சோசலிச அரசியல்வாதியும், மக்களவை மக்களைத் தலைவரும், ஜனதா தளத்தின் தலைமையிலான இந்திய நடுவண் அரசில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.[1] ஒடிசா மாநிலத்தவரான ரபி ராய், 1948-இல் சோசலிசக் கட்சியில் இணைந்தார். பின்னர் சம்யுக்த சோசலிசக் கட்சியிலும், நெருக்கடி நிலையின் போது ஜனதா தளக் கட்சியிலும் பணியாற்றியவர்.

ரபி ராய்
9வது மக்களவைத் தலைவர்
பதவியில்
19 டிசம்பர் 1989 – 9 சூலை 1991
Deputyசிவராஜ் பாட்டீல்
முன்னையவர்பல்ராம் சாக்கர்
பின்னவர்சிவராஜ் பாட்டீல்
தொகுதிகேந்திரபாரா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 நவம்பர் 1926 (1926-11-26) (அகவை 98)
பனாகார், புரி மாவட்டம்
அரசியல் கட்சிஜனதா தளம்
As of 11 சூலை, 2009
மூலம்: [1]

அரசியல்

தொகு

1967-இல், புரி மக்களவைத் தொகுதியிலிருந்து, 4வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1974 முதல் 1980 முடிய பணியாற்றினார். மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சராக 1979 முதல் 1980 முடிய பணிபுரிந்தார்.

1989-இல் ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மக்களவைத் தொகுதியிலிருந்து ஜனதா தளக்கட்சியின் சார்பாக 9வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 19 டிசம்பர் 1989-இல், இந்திய மக்களவைத் தலைவராகத் ஒருமனதாக தேந்தெடுக்கப்பட்டார்.

1991-இல் 10வது மக்களவைக்கு மீண்டும் கேந்திரபார மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997 முதல் லோக் சக்தி அபியான் எனும் அரசியல் சாரா அமைப்புடன் தொடர்ந்து செயல்படுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Former speakers - Rabi Ray". The Speaker, Lok Sabha official website. Archived from the original on 19 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 21 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரபி_ராய்&oldid=3569446" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES