1560
ஆண்டு
ஆண்டு 1560 (MDLX) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1560 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1560 MDLX |
திருவள்ளுவர் ஆண்டு | 1591 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2313 |
அர்மீனிய நாட்காட்டி | 1009 ԹՎ ՌԹ |
சீன நாட்காட்டி | 4256-4257 |
எபிரேய நாட்காட்டி | 5319-5320 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1615-1616 1482-1483 4661-4662 |
இரானிய நாட்காட்டி | 938-939 |
இசுலாமிய நாட்காட்டி | 967 – 968 |
சப்பானிய நாட்காட்டி | Eiroku 3 (永禄3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1810 |
யூலியன் நாட்காட்டி | 1560 MDLX |
கொரிய நாட்காட்டி | 3893 |
நிகழ்வுகள்
தொகு- சூலை 6 – இங்கிலாந்து, பிரான்சு, இசுக்கொட்லாந்து ஆகியவற்றிடையே எடின்பரோ உடன்பாடு எட்டப்பட்டது. பிரெஞ்சுப் படைகள் இசுக்கொட்லாந்தில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டன.
- ஆகஸ்டு 21 – வலய மறைப்பு ஐரோப்பாவில் அவதானிக்கப்பட்டது.
- செப்டம்பர் 29 – பதினான்காம் எரிக் சுவீடனின் அரசனாக முடிசூடினான்.
- டிசம்பர் 5 – 17-வயதான ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் முதலாவது கணவர் பிரான்சின் இரண்டாம் பிரான்சிசு இறந்ததை அடுத்து விதவையானார்.
- டிசம்பர் 6 – பிரான்சின் ஒன்பதாம் சார்லசு தனது 1-வது அகவையில் பிரான்சின் மன்னனானான்.
- முதலாவது அறிவியல் கழகம், Academia Secretorum Naturae, நாபொலி நகரில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
- மங்கோலியர் கிங்காய் மாகாணத்தை ஊடுருவிக் கைப்பற்றினர்.
- இலங்கையில் மன்னார் நகரம் போர்த்துக்கீசரிடம் வீழ்ந்தது.[2]
- தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி: சேவப்ப நாயக்கரின் ஆட்சி முடிவடைந்து அச்சுதப்ப நாயக்கனின் ஆட்சிக் காலம் தஞ்சாவூரில் ஆரம்பமானது.
பிறப்புகள்
தொகு- தாமசு ஃஆரியட், ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1621)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bergin, Thomas G., ed. (1987). Encyclopedia of the Renaissance. Oxford; New York: New Market Books.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2