1638
1638 (MDCXXXVIII) வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1638 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1638 MDCXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1669 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2391 |
அர்மீனிய நாட்காட்டி | 1087 ԹՎ ՌՁԷ |
சீன நாட்காட்டி | 4334-4335 |
எபிரேய நாட்காட்டி | 5397-5398 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1693-1694 1560-1561 4739-4740 |
இரானிய நாட்காட்டி | 1016-1017 |
இசுலாமிய நாட்காட்டி | 1047 – 1048 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 15 (寛永15年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1888 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3971 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 28 - இசுக்காட்டிய தேசிய உடன்படிக்கை எடின்பரோவில் கையெழுத்தானது.
- மார்ச் 5 - முப்பதாண்டுப் போர்: ஆம்பூர்க் உடன்படிக்கை சுவீடனுக்கும், பிரான்சிற்கும் இடையில் எட்டப்பட்டது.
- மார்ச் 29 - சுவீடனில் இருந்து டெலவெயரிற்கு குடியேறிகள் இரண்டு கப்பல்களில் வந்திறங்கி புதிய சுவீடன் என்ற குடியேற்றத் திட்டத்தை ஆரம்பித்தனர்.
- மே 13 - தில்லியில் செங்கோட்டை கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
- மே 23 - கண்டியில் இரண்டாம் இராஜசிம்மனுக்கும், டச்சுக்களுக்கும் இடையில் போர்த்துக்கீசரை இலங்கையில் இருந்து வெளியேற்றும் திட்டம் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது.
- நெதர்லாந்து மொரிசியசில் குடியேற்றத்தை ஆரம்பித்தது.
- டச்சு இலங்கை தமது நிலையை வலுப்படுத்தினர்.
- சுல்தான் நான்காம் முராத் பக்தாத்தைக் கைப்பற்றினார்.
- முகலாய அரசர்கள் ஷாஜகான் மற்றும் அவரது மகன்கள் கந்தகார் நகரை சபாவிதுகளிடம் இருந்து கைப்பற்றினர்.
- மதுரையில் இயேசு சபையைத் தோற்றுவித்த இராபர்ட் தெ நோபிலி போதகர், கண் குருடாகிய நிலையில் யாழ்ப்பாணம் வந்தார்.[1]
பிறப்புகள்
தொகு- செப்டம்பர் 5 - பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் (இ. 1715)
இறப்புகள்
தொகு- அக்டோபர் 8 - இரண்டாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1612)
மேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.3