1650கள்
பத்தாண்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1650கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1650ஆம் ஆண்டு துவங்கி 1659-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1650
- சூன் 23 - இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து அரசனாகத் தன்னை அறிவித்துக் கொண்ட இரண்டாம் சார்ல்சு இசுக்கொட்லாந்து சென்றடைந்தார். இந்நாடு ஒன்றே அவரை மன்னராக அங்கீகரித்தது.
- கப்டன் ஜேம்சு ஐண்டு இங்கிலாந்தின் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து தோல்வியைத் தழுவினான்.
- யூதர்கள் பிரான்சு, இங்கிலாந்து திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
- முச்சக்கர நாற்காலிகள் நியூரம்பெர்க்கில் வடிவமைக்கப்பட்டன.
- கண்டுபிடிப்புக் காலம் முடிவுக்கு வந்தது.
- அபிசீனியா போர்த்துக்கீச தூதர்களையும், மதப்பரப்புனர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றியது.
- புனித டேவிட் கோட்டை மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது.
1651
- சனவரி 1 - இரண்டாம் சார்ல்சு இசுக்கொட்லாந்தின் பேரரசனாக முடிசூடினான்.
- பெப்ரவரி 22 - வடகடலில் ஏற்பட்ட புயல் செருமனியின் கரையோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோரை மூழ்கச் செய்தது. யூயிஸ்டு தீவு இரண்டாகப் பிளந்தது. பூயிசு தீவின் மேற்குப் பகுதி அழிந்தது.
- மார்ச் 4-5 - வடகடலில் ஏற்பட்ட இரண்டாவது புயல் நெதர்லாந்தைத் தாக்கியது. ஆம்ஸ்டர்டம் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
- சூன் 28-30 - உக்ரைன், பெரெஸ்தெச்கோ நகரில் போலந்து-லித்துவேனிய படையினர் சப்போரோசியான் கொசாக்குகளைத் தோற்கடித்தனர். இப்போரில் இருதரப்பிலும் 205,000 படையினர் பங்குபற்றினர்.
- செப்டம்பர் 3 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: வூஸ்டர் நகரில் இடம்பெற்ற சண்டையில் இங்கிலாந்தின் வருங்கால அரசன் இரண்டாம் சார்லசு தோற்கடிக்கப்பட்டார்.
- அக்டோபர் 15 - இரண்டாம் சார்ல்சு பிரான்சுக்குத் தப்பி ஓடினான்.[1]
1652
- ஏப்ரல் 6 - டச்சு மாலிமி யான் வான் ரீபீக் நன்னம்பிக்கை முனையில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு மீள்-வழங்கு வழி ஒன்றை அமைப்பதற்காக கேப் டவுன் நகரை அமைத்தார்.
- மே 18 - வட அமெரிக்காவில் அடிமை முறையை நீக்கும் சட்டம் றோட் தீவு முதன் முதலாக அறிமுகப்படுத்தியது.[2]
- சூன் 13 - இங்கிலாந்தில் ஜார்ஜ் பொக்சு மக்கள் மத்தியில் வழங்கிய அறவுரை நண்பர்களின் சமய சமூகம் என்ற அமைப்பைத் தோற்றுவிக்க வழிகோலியது.
1653
- சனவரி-சூன்]] - சுவிட்சர்லாந்தில் உழவர் போர் இடம்பெற்றது.
- பெப்ரவரி 2 - புதிய ஆம்ஸ்டர்டாம் நகரம் (பின்னர் நியூயார்க் நகரம் எனப் பெயர் மாற்ரம் பெற்றது) அமைக்கப்பட்டது.
- ஏப்ரல் 20 - இங்கிலாந்தில் ஆலிவர் கிராம்வெல் ரம்ப் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
- ஆகத்து 8–10 - முதலாவது ஆங்கிலோ-டச்சுப் போரின் இறுதிச் சமர் இடம்பெற்றது. ஆங்கிலேயக் கடற்படையினர் வெற்றி பெற்றனர்.
- டிசம்பர் 16 - பிரித்தானியாவின் முதலாவது அரசியல் சாசனம் எழுதப்பட்டது. இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் காப்பாளர் பிரபுவாக ஆலிவர் கிராம்வெல் நியமிக்கப்பட்டார்.[3][4]
- தாஜ் மகால் கட்டி முடிக்கப்பட்டது.
1654
- மார்ச் 12–13 - கொசாக்குகளுக்கும் உருசியப் பேரரசர் முதலாம் அலெக்சேயிற்கும் இடையில் பிரியசுலாவ் நகரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. உக்ரைனில் கெமெல்னீத்ஸ்கி எழுச்சி முறியடிக்கப்பட்டது. 1648 இல் ஆரம்பமான இப்போரில் 100,000 யூதர்கள் வரை கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 5 - முதலாவது ஆங்கிலோ-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது.[5]
- ஏப்ரல் 12 - ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் ஒன்றியம் ஒன்றை ஆரம்பித்தார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இசுக்கொட்டியப் பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டது.[5]
- மே 8 - ஓட்டோ வான் கெரிக் தனது வெற்றிடப்பம்பியை அறிமுகப்படுத்தி, வளிமண்டல அழுத்தத்தின் தாக்கத்தை விளக்கிக் காட்டினார்.[6]
- சூன் 3 - பிரான்சின் பதினான்காம் லூயி முடி சூடினார்.
- சூன் 6 - சுவீடனின் அரசராக பத்தாம் சார்லசு குஸ்தாவ் பதவியேற்றார். பதவியில் இருந்து விலகிய கிறித்தீனா அதே நாளில் கத்தோலிக்க சமயத்துக்கு இரகசியமாக மதம் மாறினார்.
- சூலை - உருசியப் படையினர் சிமொலியென்ஸ்க் நகரைக் கைப்பற்றினர். உருசிய-போலந்துப் போர் ஆரம்பமானது.
- சூலை 10 - ஆலிவர் கிராம்வெல்லைப் படுகொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக பீட்டர் வவெல், ஜோன் ஜெரார்டு ஆகியோர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டனர்.
- ஆகத்து 22 - பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர்.[7][8]
- செப்டம்பர் 3 - இங்கிலாந்தில் முதலாவது காப்பாளர் நாடாளுமன்றம் கூடியது.[5]
- அக்டோபர் 12 - நெதர்லாந்தின் டெல்ஃப்ட் நகரில் துப்பாக்கித் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழட்ந்தனர். இறந்தவர்களில் ரெம்பிரான்ட்டின் மாணவரும் ஒருவர்.
- மாலைத்தீவுகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் பிடியில் வந்தது.
1655
- ஜனவரி 5 - கோ-சாய் என்பவன் ஜப்பானின் மன்னனானான்.
- மார்ச் 25 - சனிக் கோளின் மிகப் பெரிய சந்திரனான "டைட்டான்" கிறிஸ்டியன் ஹுயிஜென்ஸ் என்பவரால் கண்டறியப்பட்டது.
- மே 10 ஆங்கிலேயப் படைகள் ஜமெய்க்காவை அடைந்தன.
- ஜூலை 29 - ஆம்ஸ்டர்டாமில் உலகின் மிகப்பெரும் நகரசபை அமைக்கப்பட்டது.
- ஜூலை 31 - ரஷ்ய இராணுவம் லித்துவேனியாவின் வில்நியூஸ் நகரைக் கைப்பற்றியது.
- ஆகஸ்ட் 9 - ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.
- செப்டம்பர் 8 - சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.
- அக்டோபர் 15 - போலந்தின் லூம்லின் நகரில் இருந்த யூதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 19 - சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் கிராக்கோவ் நகரைப் பிடித்தான்.
- நவம்பர் 3 - பிரான்சும் இங்கிலாந்தும் இராணுவா பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
- டிசம்பர் 10 - யாழ்ப்பாண ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் "முகத்துவாரம்" என்னும் இடத்தில் டச்சுக்காரரினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
1656
- ஏப்ரல் 28 – மேற்கு ஆஸ்திரேலியாவில் வேர்குல்ட் டிரேக் (Vergulde Draeck) என்ற கப்பல் மூழ்கியது.
- மே 13 – ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பைக் கைப்பற்றினர்.[9]
- டிசம்பர் – ஊசல் மணிக்கூடு கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1657
- பெப்ரவரி 4 - இங்கிலாந்தில் யூதர்கள் வாழ்வதற்கு உரிமையுள்ளவர்கள் என ஆலிவர் கிராம்வெல் உறுதிப்படுத்தினார்.
- மார்ச் 2 - சப்பான் எடோவில் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 100,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.[10]
- இங்கிலாந்தின் முதலாவது சாக்கலேட் மாளிகை இலண்டனில் திறக்கப்பட்டது.[11]
- காப்பி பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1658
- ஜனவரி 13 - இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வார்ட் செக்ஸ்பி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.
- பெப்ரவரி 6 - சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தனர்.
- பெப்ரவரி 22 - டச்சுக்காரரினால் மன்னார் கைப்பற்றப்பட்டது.
- பெப்ரவரி 26 - சுவீடனுக்கும் டென்மார்க்கிற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- ஏப்ரல் 10 - யாழ்ப்பாணத்தில், ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.
- ஜூன் 23 - இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் ஆக்கிரமித்தனர்.
- ஆகஸ்ட் 29 - புரொட்டஸ்தாந்து சீரமைப்பு (reformed religion) யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக வண. டாக்டர் பால்டியஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- செப்டம்பர் - யாழ்ப்பாணத்தில் டச்சுக்காரருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக டொன் மனுவேல் டி அண்டிராடோ முதலியார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்ட டொன் லூயிசு பூத்தம்பி மற்றும் சில போர்த்துக்கீசர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- செப்டம்பர் - டொன் லூயிசு பூத்தம்பியின் போர்த்துக்கீசர்களுடனான தொடர்புகளை அறிந்திருந்தமைக்காக யாழ்ப்பாணம் இயேசு சபையைச் சேர்ந்த வண. கல்டெய்ரோ என்பவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- செப்டம்பர் 19 - யாழ்ப்பாணத்தில் ரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.
- நவம்பர் 20 - இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் டச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1659
- பெப்ரவரி 16 - முதலாவது காசோலை (400 பவுண்டுகள்) எழுதப்பட்டது (வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.)
- ஏப்ரல் 22 - இங்கிலாந்தின் ஆட்சிக் காவலர் ரிச்சார்ட் குரொம்வெல் ஆங்கிலேய நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
- மே 25 - ரிச்சார்டு குரொம்வெல் இங்கிலாந்தின் ஆட்சிக் காவலர் பதவியில் இருந்து விலகினார்.
- நவம்பர் 19 - இலங்கையில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் ரொபர்ட் நொக்சு, அவரது மகன், மற்றும் ஆன் பிரிகேட் கப்பலின் பெரும்பாலான மாலுமிகளும் டச்சு ஆட்சியாளர்களால் மட்டக்களப்பில் சிறைப்பிடிக்கப்பட்டு கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.[12]
- நவம்பர் 25 - சுவீடன் கைப்பற்றிய டென்மார்க்கின் நைபோர்க் நகரை டச்சுப் படையினர் மீட்டெடுத்தனர்.
- இந்தியாவில் பெரும் வறட்சி நிலவியது.
- தொட்ட தேவராச உடையார் மைசூரின் அரசராகப் பதவியேற்றார்.
உலகத் தலைவர்கள்
தொகு- மூன்றாம் பிரெடெரிக், (டென்மார்க், 1648 - 1670)
- பதினான்காம் லூயி, (பிரான்ஸ், 1643 - 1715)
முகலாயப் பேரரசர்கள்
தொகு- ஷாஜகான் (1628-1658)
- முராட் பாக்ஸ் (1658)
- அவுரங்கசீப் (1659-1707)
மேற்கோள்கள்
தொகு- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 185–186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ "Slavery and the Making of America . Timeline". PBS. 2004. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
Rhode Island passes laws restricting slavery and forbidding enslavement for more than 10 years.
- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.
- ↑ "Commonwealth Instrument of Government, 1653". Modern History Sourcebook. New York: Fordham University. August 1998. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.
- ↑ 5.0 5.1 5.2 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ "Guericke, Otto von". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 9. (1910). The Encyclopaedia Britannica Co.
- ↑ "Jews arrive in the New World". American Jewish Archives. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.
- ↑ LeElef, Ner (2001). "World Jewish Population". SimpleToRemember. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.
Metropolitan டெல் அவீவ், with 2.5 million Jews, is the world's largest Jewish city. It is followed by New York, with 1.9 million.
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ Blusse, Leonard; Vaillé, Cynthia (2005). The Deshima Dagregisters, Volume XII 1650-1660. Leiden.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ "Chocolate Arrives in England". Cadbury. Archived from the original on 2012-02-19. பார்க்கப்பட்ட நாள் 2012-02-17.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 4