1697
1697 (MDCXCVII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1697 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1697 MDCXCVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1728 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2450 |
அர்மீனிய நாட்காட்டி | 1146 ԹՎ ՌՃԽԶ |
சீன நாட்காட்டி | 4393-4394 |
எபிரேய நாட்காட்டி | 5456-5457 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1752-1753 1619-1620 4798-4799 |
இரானிய நாட்காட்டி | 1075-1076 |
இசுலாமிய நாட்காட்டி | 1108 – 1109 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 10 (元禄10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1947 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4030 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி - பிரெஞ்சு எழுத்தாளர் சார்லசு பெரோல்ட் விசித்திரக் கதைகள், சிண்ட்ரெல்லா, தூங்கும் அழகி உட்பட தனது புகழ்பெற்ற மதர் கோசு கதைத் தொகுப்பை வெளியிட்டார்.
- சனவரி 8 - - எடின்பரோவில் இறை நிந்தனைக் குற்றத்திற்காக இசுக்கொட்டிய மாணவர் தோமசு ஐக்கென்ஹெட் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
- மார்ச் 13 – அமெரிக்க முதற்குடிமக்களின் கடைசி இத்சா மாயா இராச்சியத்தின் தலைநகர் எசுப்பானியர்களிடம் வீழ்ந்தது.
- மே 7 - ஸ்டாக்ஹோம் நகரில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரண்மனை எரிந்து சாம்பலானது. அரண்மனை நூலகத்தின் பெரும் பகுதி முற்றாக சேதமடைந்தது.
- சூன் 30 - முதல் தரத் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, சசெக்சு நகரில் விளையாடப்பட்டது.
- செப்டம்பர் 11 - இளவரசர் யூஜின் தலைமையிலான படையினர் சென்டா நகரில் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தனர்.
- செப்டம்பர் 20 - பிரான்சுக்கும் பெரும் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்று வந்த ஒன்பதாண்டுப் போர், மற்றும் மன்னர் வில்லியமின் போர் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இரு அணிகளுக்குமிடையே றிசுவிக் நகரில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்சின் பதினான்காம் லூயி இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து அரசராக மூன்றாம் வில்லியமை அங்கீகரித்தான். இரு தரப்புகளும் தமது முந்தைய நிலைகளுக்குத் திரும்பின. வட அமெரிக்காவில் நோவா ஸ்கோசியா பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டது.
- டிசம்பர் 2 - புனித பவுல் பேராலயம் இலண்டனில் திறக்கப்பட்டது.
- ஐரோப்பாவில் பல்லக்குகளின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது.
பிறப்புகள்
தொகு- சனவரி 1 - யோசப் பிரான்சுவா தூப்ளே, இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுனர் (இ. 1763)
- மார்ச் 6 - ஸ்ட்ரிங்கர் லாரன்சு, பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (இ. 1775)
- ஏப்ரல் 23 - ஜார்ஜ் ஆன்சன், பிரித்தானியக் கடற்படைத் தளபதி (இ. 1762)
- நவம்பர் 10 - வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)