1806
1806 (MDCCCVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1806 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1806 MDCCCVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1837 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2559 |
அர்மீனிய நாட்காட்டி | 1255 ԹՎ ՌՄԾԵ |
சீன நாட்காட்டி | 4502-4503 |
எபிரேய நாட்காட்டி | 5565-5566 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1861-1862 1728-1729 4907-4908 |
இரானிய நாட்காட்டி | 1184-1185 |
இசுலாமிய நாட்காட்டி | 1220 – 1221 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 3 (文化3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2056 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4139 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 8 - கேப் கொலனி பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.
- சனவரி 10 - கேப் டவுனில் டச்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.
- சனவரி 19 - நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.
- சூன் 4 - இலங்கையில் ரோமன் கத்தோலிக்கர்கள் மீது டச்சு ஆட்சியாளர்களினால் தடை செய்யப்பட்ட மத வழிபாடுகள் பிரித்தானியர்களினால் மீள வழங்கப்பட்டன.
- சூன் 5 - லூயி பொனபார்ட் அவனது சகோதரனான நெப்போலியன் பொனபார்ட்டினால் நெதர்லாந்தின் மன்னன் ஆக்கப்பட்டான்.
- சூன் 27 - புவனஸ் அயரசை பிரித்தானியர் கைப்பற்றினர்.
- சூலை - இலங்கையில் விதானை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- சூலை 10 - வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 5 - இலங்கையில் முகமதியர்களுக்கான சிறப்பு திருமணச் சட்ட விதிகள் அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- ஆகத்து 6 - புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.
- செப்டம்பர் - புரூசியா பிரான்ஸ் மீது போரைத் தொடுத்தது.
- அக்டோபர் 7 - ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவர் கார்பன் தாள் காப்புரிமத்தைப் பெற்றார்.
- அக்டோபர் 14 - முதலாம் நெப்போலியன் புரூசிய இராணுவத்தை தோற்கடித்தான்.
- அக்டோபர் 17 - எயிட்டி பேரரசர் முதலாம் சாக் படுகொலை செய்யப்பட்டார்.
- அக்டோபர் 24 - பிரெஞ்சுப் படைகள் பெர்லின் நகரை அடைந்தன.
- நவம்பர் 30 - நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.
நாள் அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- நோவா வெப்ஸ்டர் தனது முதலாவாது அமெரிக்க ஆங்கில அகராதியை வெளியிட்டார்.
தொடர் நிகழ்வுகள்
தொகுபிறப்புக்கள்
தொகுஇறப்புக்கள்
தொகுமுகலாயப் பேரரசர்கள்
தொகு- இரண்டாம் அக்பர் (1806-1837)
மேற்கோள்கள்
தொகு- ↑ Hibbert, Christopher (1994). Nelson: A Personal History. p. 382.
- ↑ Davis, John (2006). Naples and Napoleon: Southern Italy and the European Revolutions, 1780–1860. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198207559.
- ↑ Abbott, John S. C. (1869). A History of Joseph, King of Naples. New York: Harper.