2016
2016 ஆம் ஆண்டு (MMXVI) ஆனது கிரிகோரியன் நாள்காட்டியின் படி வெள்ளிக் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு நெட்டாண்டாக இருக்கும். இது கி.பி. 2016ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 16ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 16ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் ஏழாம் ஆண்டாகவும் இருக்கும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2016 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2016 MMXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 2047 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2769 |
அர்மீனிய நாட்காட்டி | 1465 ԹՎ ՌՆԿԵ |
சீன நாட்காட்டி | 4712-4713 |
எபிரேய நாட்காட்டி | 5775-5776 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2071-2072 1938-1939 5117-5118 |
இரானிய நாட்காட்டி | 1394-1395 |
இசுலாமிய நாட்காட்டி | 1437 – 1438 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 28 (平成28年) |
வட கொரிய நாட்காட்டி | 105 |
ரூனிக் நாட்காட்டி | 2266 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4349 |
நிகழ்வுகள்
தொகுசனவரி 2016
தொகு- சனவரி 1 - சீனாவில் குடும்பம் ஒன்றுக்கு ஆகக்கூடியது இரு குழந்தைகள் பெறும் திட்டம் அமுலுக்கு வந்தது.[1]
- சனவரி 1 - யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை, கோப்பாய் ஆகிய இடங்களில் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 700 ஏக்கர் நிலம் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது. (தி ஐலண்டு)[தொடர்பிழந்த இணைப்பு]
- சனவரி 4 - இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையருகே இம்பால் நகருக்கு 20 கிமீ தூரத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். (என்பிசி) (டைம்சு ஒஃப் இந்தியா), (ஏபி) பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- சனவரி 4 - நான்கு புதிய தனிமங்கள் (113, 115, 117, 118) தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டதை பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் உறுதிப்படுத்தியது. இவை தற்காலிகமாக உன்னுன்டிரியம், உன்னுன்பென்டியம், உனுன்செப்டியம், உனுனோக்டியம் ஆகிய பெயர்களைப் பெற்றுள்ளன. (கார்டியன்)
- சனவரி 6 - வடகொரியாவில் சஞ்சிபேகம் என்ற இடத்தில் இடம்பெற்ற 5.1 அளவு நிலநடுக்கம் அணுகுண்டு வெடிப்பு என சந்தேகிக்கப்படுகிறது. தாம் வெற்றிகரமாக ஐதரசன் குண்டு சோதனைய நடத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. (ஏஎஃப்பி) (ஏபி) (புளூம்பேர்க்) (கார்டியன்)
- சனவரி 6 - 1404.49 காரட்டுகள் எடை கொண்ட உலகிலேயே மிகப் பெரிய புளு ஸ்டார் சஃபையர் எனக் கருதப்படும் நட்சத்திர நீலக்கல் ஒன்று இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- சனவரி 16 - தாய்வான் தேர்தல்களில் ஆளும் குவோமின்டாங் கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது. 1911 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இக்கட்சி தோற்றுள்ளது. (கார்டியன்)
- சனவரி 21 - கிபி 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்போடியாவின் கெமர் பேரரசுக் கால கால சிவ-மாலிய கலையம்சமான அரிகரன் சிலையின் தலைப்பாகம் பிரெஞ்சு அரசால் கம்போடியாவிற்கு 126 ஆண்டுகளுக்குப் பின்பு திருப்பியளிக்கப்பட்டது. (கம்போடியா டுடே) பரணிடப்பட்டது 2016-01-24 at the வந்தவழி இயந்திரம்
- சனவரி 30 - ஜமேக்காவில் இசீக்கா தீநுண்மம் பாதித்த 4-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலொம்பியாவில் 2100 கர்ப்பிணிப் பெண்கள் சீக்கா வரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். (யூஎஸ்ஏ டுடே),(ராய்ட்டர்சு)
பெப்ரவரி 2016
தொகு- பிப்ரவரி 1 - 25 ஆண்டுகளாக மியான்மரில் மக்களாட்சிப் நடத்திய ஆங் சான் சூச்சி தேர்தலில் நின்று வெற்றிபெற்று பிரதமர் |பதவியேற்றார்.
இறப்புகள்
தொகு- சனவரி 1 – வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர் (பி. 1930)
- சனவரி 2 – அ. பூ. பர்தன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1924)
- சனவரி 7 – முப்தி முகமது சயீத், இந்திய அரசியல்வாதி (பி. 1936)
- சனவரி 13 – ஜெ. எப். ஆர். ஜேக்கப், இந்தியத் தரைப்படை அதிகாரி (பி. 1923)
- சனவரி 16 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி (பி. 1930)
- சனவரி 17 – கரு. அழ. குணசேகரன், தமிழக எழுத்தாளர், நாட்டுப்பாடல் கலைஞர் (பி. 1955)
- சனவரி 19 – எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா, இலங்கை அரசியல்வாதி (பி. 1947)
- சனவரி 21 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர் (பி. 1918)
- பெப்ரவரி 9 – சுசில் கொய்ராலா, நேப்பாளத்தின் 37வது பிரதமர் (பி. 1939)
- பெப்ரவரி 11 – பூ. ம. செல்லத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)
- பெப்ரவரி 13 – ஏ. நடராஜன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)
- பெப்ரவரி 13 – ஓ. என். வி. குறுப்பு, மலையாளக் கவிஞர் (பி. 1931
- பெப்ரவரி 16 – புத்துருசு புத்துருசு காலீ, ஐநா பொதுச் செயலர், எகிப்திய அரசியல்வாதி (பி. 1922)
- பெப்ரவரி 17 – எஸ். ரி. அரசு, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1926)
- பெப்ரவரி 19 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய எழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1932)
- பெப்ரவரி 19 – ஹார்ப்பர் லீ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)
- பெப்ரவரி 25 – ஆல்பிரட் இ மான், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1925)
- பெப்ரவரி 27 – விசுவா வர்ணபால, இலங்கை அரசியல்வாதி (பி. 1936)
- பெப்ரவரி 28 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)
- பெப்ரவரி 28 – குமரிமுத்து, தமிழத் திரைப்பட நடிகர்
- மார்ச் 6 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் முதல் பெண்மணி (பி. 1921)
- மார்ச் 12 – இலாயிடு சேப்ளி, அமெரிக்கக் கணிதவியலாளர் (b. 1923)
- மார்ச் 22 – ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (பி. 1969)
- மார்ச் 24 – யோகன் கிரையொஃப், டச்சு கால்பந்து வீரர் (பி. 1947)
- ஏப்ரல் 21 – பிரின்சு, அமெரிக்கப் பாடகர் (பி. 1958)
- சூன் 3 – முகம்மது அலி, அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர் (பி. 1942)
- சூன் 10 – கிறிஸ்டினா கிரிம்மி, அமெரிக்க பாடகர் (பி. 1994)
- சூலை 2 – எலீ வீசல், நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1928)
- சூலை 4 – அப்பாஸ் கியரோஸ்தமி, ஈரானிய இயக்குநர் (பி. 1940)
- சூலை 28 – மகாசுவேதா தேவி, இந்திய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (பி. 1926)
- ஆகத்து 22 – செல்லப்பன் ராமநாதன், சிங்கப்பூரின் 6வது குடியரசுத்தலைவர் (பி. 1924)
- செப்டம்பர் 28 – சிமோன் பெரெஸ், நோபல் பரிசு பெற்ற இசுரேல் பிரதமர் (பி. 1923)
- அக்டோபர் 13 – பூமிபால் அதுல்யாதெச், தாய்லாந்து மன்னர் (பி. 1927)
- அக்டோபர் 20 – ஜூன்கோ டபெய், சப்பானிய மலையேறி (பி. 1939)
- நவம்பர் 25 – பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் 17வது அரசுத்தலைவர் (பி. 1926)
- டிசம்பர் 25 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர் (பி. 1928)
- டிசம்பர் 27 – இரத்தினசிறி விக்கிரமநாயக்க, இலங்கைப் பிரதமர் (பி. 1933)