50 சென்ட் என்றழைக்கப்படும் கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன் அமெரிக்காவின் பலரறி ராப் இசைப் பாடகர் ஆவர். 1975 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இவர் தன்னுடைய முதல் ராப் இசைத்தொகுப்பான கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin' - பணப்படைத்தவனாவது அல்லாவிட்டால் அதற்கான முயற்சியில் சாவது) மூலம் புகழுக்கு வந்தார். தொடர்ச்சியான மற்ற வெளியீடான தி மாசக்கர் (The Massacre - படுகொலை) இசைத் தொகுப்பும் மக்களிடயே வரவேற்பைப் பெற, ஏறத்தாழ 20 இலட்சம் இசைத்தட்டுகள் விற்பனையாகி 50 சென்ட் ராப் இசை உலகில் புகழின் உச்சத்தைத் தொட்டார்.

50 சென்ட்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன் III
பிறப்புசூலை 6, 1975 (1975-07-06) (அகவை 49)
பிறப்பிடம்நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஹிப் ஹாப்
தொழில்(கள்)ராப்பர், நடிகர்
இசைத்துறையில்1998 – இன்று வரை
இணைந்த செயற்பாடுகள்ஜி-யூனிட், எமினெம், டாக்டர் ட்ரே, மாப் டீப்
இணையதளம்www.50cent.com

ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் போதைப் பொருள் விற்பவராக இருந்த 50 சென்ட் அதைக் கைவிட்டு இசைத்துறையில் நுழைந்தவர். 2000 ஆம் ஆண்டில் ஒன்பது முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார்.

2005 இல் ஹாலிவுட் உலகிலும் தன்னுடைய முதல் இசைத்தொகுப்பின் தலைப்பிலேயே வந்த கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin') மூலம் நடிகரானவர். தொடர்ந்து 2006ல் ஈராக் போரை மையமாக வைத்து வெளிவந்த தி ஹோம் ஆஃப் ப்ரேவ் (The Home of Brave - வீரர்களின் தாயகம்) படத்திலும் நடித்தார். தொடர்ச்சியாக இசை உலகின் புகழ்மிகுந்த விருதான கிராமி விருதுக்கான தேர்வுக்குழுவில் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்புகள்

தொகு

ஆல்பம்கள்

தொகு

நடித்த திரைப்படங்கள்

தொகு
Year Title Role Notes
2003 50 சென்ட் - த நியூ ப்ரீட் அவர்தாமேpoda venna Documentary டிவிடி
2005 "ப்ராங்க்ஸ்ட ராப்" அவர்தாமேnee enavenalum padu த சிம்ப்சன்ஸ் கிளைக்கதை 16.9
கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் மார்கஸ் ATHHAM PROUCTIONS
50 சென்ட் - புலெட்புரூஃப் அவர்தாமே நிகழ்பட ஆட்டம், குரல் மட்டும்
2006 ஹோம் ஆஃப் த பிரேவ் ஜமால் ஏகென்
2008 த ஸ்கீ மாஸ்க் வே செவென் in production
ரைசியஸ் கில் ஸ்பைடர் post-production
லைவ் பெட் announced
த டான்ஸ் announced
நியூ ஓர்லியன்ஸ் announced

மேற்கோள்கள்

தொகு
  1. Birchmeier, Jason. "50 Cent Biography". AllMusic. Archived from the original on June 26, 2016. பார்க்கப்பட்ட நாள் June 26, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=50_சென்ட்&oldid=3309624" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Note 1