வன்முறை
பலாத்காரம் அல்லது வன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோ உடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும்.
மேற்கோள்கள்
தொகு- பலாத்காரத்திலிருந்து நன்மை எதுவும் ஒரு காலத்தும் வருவதில்லை. லூதர்[1]
- பலாத்காரக் களியாட்டங்கள் பலாத்கார முடிவுகளையே அடைகின்றன. -ஷேக்ஸ்பியர்[1]
- பலாத்காரமான எதுவும் நிலையாக நிற்பதில்லையென்று நான் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். -மார்லோ[1]
- ஈக்களை வதைப்பதில்கூடநம்பிக்கையில்லை. -மகாத்மா காந்தி[1]
- பலாத்காரப் போராட்டத்திற்குப் பயிற்சி பெறுவதில் கொலை செய்து பழக வேண்டியிருப்பது போல் அஹிம்சையில் பயிற்சி பெறுவதற்கு ஒருவன் தானாக உயிர்துறக்கப் பழகவேண்டும். -மகாத்மா காந்தி[1]
- பலாத்காரம், தண்ணீரைப் போல், தான் வெளியேறுவதற்கு வழி கிடைத்துவிட்டால், மேலும் அதிக வேகத்துடன் பாய்ந்து செல்லும், - மகாத்மா காந்தி[1]
- ஆயிரம் தடவைகள் பலாத்காரம் தோல்வியுற்ற பின்னும், நாம் அது வென்றுவிடும் என்று மேலும் நம்பும் அளவுக்கு. நம் மனங்களில் அதற்கு அவ்வளவு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. -விநோபா பாவே[1]
- உண்மை என்னவென்றால், ஒருவன் செய்த பலாத்காரத்திற்கு இரண்டாமவன் அதிகப் பலாத்காரத்தைக் கையாள்கிறான். அதாவது, சொற்பத் தீமை செய்ததற்குக் கூடுதலான தீமையைத் திருப்பியளிக்கிறான். மூன்றாமவன் மேலும் அதிகமாகச் செய்கிறான். இவ்வாறு இறுதியில்.[1]
- இக்காலத்தில் நடைபெறும் சர்வ வியாபகமான யுத்தம் ஏற்படுகின்றது. - மகாத்மா காந்தி[1]