அன்னாசி வயல்
ஒரு அன்னாசிச் செடி.
அன்னாசி:

பெயர்ச்சொல்

தொகு

அன்னாசி

ananás என்ற போர்த்துகீசிய சொல்லிருந்து உண்டானது


தமிழ்ச்சொல்

தொகு
  1. பறங்கித்தாழை
  2. செந்தாழை
  3. பூந்தாழம்பழம்


பொருள்

தொகு
  • முனையில் தடித்த இலைக்கொத்தினையும் சொரசொரப்பான மேற்பகுதியையும் வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்ட ஒரு வெப்ப மண்டலப் பழம்; pineapple.
  • விண்மீன் வடிவத்திலிருக்கும் ஒரு வகை நறுமணப் பொருள்;(அன்னாசிப்பூ) star anise

விளக்கம்

தொகு
  • தாவரவியல் வகைப்பாடு

Kingdom: Plantae

Division: Magnoliophyta

Class: Liliopsida

Order: Poales

Family: Bromeliaceae

Subfamily: Bromelioideae

Genus: Ananas

Species: A. comosus

  • நார்சத்து மிக்கது.
  • உட்பக்கம் மஞ்சள் நிறமுடையது.
  • வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்கும் குணம் கொண்டது.
  • அதிகம் உண்டால், பல் கூசும்.

மருத்துவ குணங்கள்

தொகு

அன்னாசிப் பழத்தால் பிரமேகம், வெள்ளை, வமனம், பித்தநோய், தாகம், வாந்தி, அரோசிகம், சிரஸ்தாபரோகம் இவைகள் போகும்...அழகு உண்டாகும்... கண்களுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது.

பயன்பாடுகள்

தொகு

அன்னாசிச் செடியின் இலைகளிலிருந்து எடுத்த இரசத்துடன் சர்க்கரைக் கலந்து பருகினால் விக்கல்ரோகம் நீங்கும்...பழத்தின் மேல்தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி இடித்துச் சாறு பிழிந்து அதற்குச் சமனெடை சர்க்கரை சேர்த்து சர்பத்தாகக் காய்ச்சி வைத்துக்கொள்ளலாம்...இந்த சர்பத்தில் வேளைக்கு ஒரு தோலா வீதம் தினம் இரண்டு வேளை பருகிவர மேற்கண்டப் பிணிகள் நிவர்த்தியாகும்...தேகம் அழகு பெறும்...பழங்களையும் மேல்தோல் நீக்கி அரிந்து உண்ணலாம்....நல்ல இன்சுவையும், நறுமணமும் கொண்டவைகள் இந்தப்பழங்கள்...இப்பழங்களை மழை, குளிர் காலங்களில் உண்ணாதிருத்தல் நன்று

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னாசி&oldid=1985167" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Idea 1
idea 1