முகடு
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
முகடு (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
உச்சி | top, highest part, peak | _ |
(இயற்பியல்) முகடு என்பது அதிர்வின்மையப் புள்ளிக்கு மேலே இருப்பன | (physics) crest | _ |
(புள்ளியியல்) | (statistics) - mode | _ |
வீட்டின் மேற்கூரை, முகட்டு வளை | ceiling, ridge of a roof | _ |
உயர்வு | superiority, excellence, acme | _ |
தலை | head | _ |
ஒட்டகம் முதலியவற்றின் உயர்ந்த முதுகுப்புறம் | hump, as of camel, etc | _ |
மோட்சம் | salvation | _ |
பாழ் | the region of chaos, as beyond the worlds | _ |
சபைக்குறடு | platform, as of an assembly | _ |
அண்ட முகடு | roof of the heavens | _ |
விளக்கம்
பயன்பாடு
- அவன் குன்று மீது ஏறிச்சென்றான். வியர்வை வழிய கால்கள் கடுக்க மூச்சுவாங்கி ஏறிஏறிச் சென்றான். முகடுகளை கடந்து மேலும் மேலும் முகடுகள் நோக்கிச்சென்றான். அங்கே உச்சிநுனியில் நின்றபடி அவன் தன்னை கண்ணெட்டா விரிவுவரை பரந்தகன்ற பெருவெளியாக உணர்ந்தான். அங்கிருந்து நோக்கும்போது குன்றுகள் சிறுத்துக் கிடந்தன. மரங்கள் பச்சைப்படலங்களாக கிடந்தன. மிருகங்களும் மனிதர்களும் பூச்சிகளாகத் தெரிந்தனர் (நாஞ்சில் நாடனின் கலை)
சொல்வளம்
தொகு- அகடு என்பது இதன் எதிர்ச்சொல்